“எஸ்.பி.பி. க்ளாசிக்ஸ்” இசை நிகழ்ச்சி

0

 362 total views,  1 views today

பின்னணிப் பாடகர் பத்மபூஷன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் “லஷ்மன் ஸ்ருதி” இசைக்குழுவில் கலந்து கொண்டு பாடும் “எஸ்.பி.பி க்ளாசிக்ஸ்” என்னும் பிரம்மாண்டமான மெல்லிசை நிகழ்ச்சி வரும் 18.3.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.05 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது.

ஒரு பாடகர் மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடும்போது அதற்காக அரங்கம் நிரம்பி வழிகிறதென்றால் இன்றைக்கும்  அது எஸ்.பி.பி அவர்கள் பாடும் ஒரு நிகழ்ச்சியாகவே இருக்கின்றது.

பல தலைமுறை தாண்டி இன்றைய இளைஞர்கள் வரை அனைவரையும் தன் குரலால் வசீகரித்து இதயம் குளிரப் பாடி மகிழ்ச்சியைக் கொடுப்பவர்.

தான் பாடத்துவங்கி 52 ஆண்டுகளைக் கடந்தும்  திரையில் தன் குரலால் பன்மொழிகளில் ஆதிக்கம் செய்து வருபவர்.

பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர், மேடைப்பாடகர் என்று பன்முகங்களைக் கொண்டு பணியாற்றும் திறமை கொண்டவர்.

மேடையில் பாடும்போது திரையில் எப்படி பாடினாரோ அப்படியே இன்றும் இம்மியளவு பிசகில்லாமல்,  பிசிறில்லாமல் அதே குரல் வளத்தோடு பாடல்களை வழங்கக் கூடியவர்.

இருபதுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளிலும் உலகின் பல்வேறு மொழிகளிலும் ஐம்பதாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள எஸ்.பி.பி அவர்கள் ஒரே நாளில் அதிக பாடல்களை தன் குரலில் ஒலிப்பதிவு செய்து கின்னஸ் உலக சாதனை படைத்தவர்.

தனது ஐம்பதாண்டு இசை மற்றும் கலைப் பயணத்திற்காக சமீபத்தில் உலக சுற்றுப் பயணத்தை நிறைவு செய்தபின், எஸ்.பி.பி அவர்கள் தமிழிசை ரசிகர்களின் ஆவலைப் பூர்த்தி செய்யும் வகையில் “எஸ்.பி.பி க்ளாசிக்ஸ்” என்னும் இசை நிகழ்ச்சியை தொடர்ந்து  36 மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை புரிந்த “லஷ்மன்ஸ்ருதி” இசைக்குழுவின் இசையில் பாடுகின்றார்.

ஒலிப்பதிவுக் கூடங்களில் உபயோகிக்கப்பட்ட இயற்கையான வாத்தியக் கருவிகள் மற்றும் அவ்வாத்தியக் கலைஞர்கள் நூறு சதவீதம் நேரடியாக மேடையில் இசைத்து, எஸ்.பி.பி அவர்கள் நேரடியாகப்பாடும் இந்த இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமான மேடை அமைப்பு, துல்லியமான ஒலி அமைப்பு,  வண்ண விளக்குகளின் கண்கவர் விருந்து என்று பல்வேறு சிறப்பம்சங்களுடன் அரங்கேறுகிறது.

விஞ்ஞான வளர்ச்சி மிக அசுர வேகத்தில்
இருக்கும் இக்கால கட்டத்தில்,

கணினி மயமாகிப்போன இவ்வுலகில்

இசைக்கருவிகளின் முக்கியத்துவத்தையும் அருமை பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் விதத்திலும் இந்நிகழ்வு நூறு சதவீதம்
இசைக்கலைஞர்கள் இசைக்க
எஸ்.பி.பி அவர்கள் பாட மிக சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சி இசை ரசிகர்களுக்கும் எஸ்.பி.பியின் ரசிகர்களுக்கும் நிச்சயம் விருந்தாக அமையும்.

இந்நிகழ்வில் பல்வேறு பின்னணிப் பாடகர்களும் பாடகிகளும் கலந்து கொண்டு பாடவுள்ளனர்.

நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை
bookmyshow.comeventjini.comlakshmansruthi.com ஆகிய இணையதளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் நுழைவுச்சீட்டுகளை நேரடியாக வடபழநி ”லஷ்மன்ஸ்ருதி மியூசிக்கல்ஸ்” மற்றும் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கிலும் பெற்றுக் கொள்ளலாம்

டிக்கெட் மற்றும் விபரங்களுக்கு : 9840925450 ஐஅணுகவும்

Share.

Comments are closed.