கிங்ஸ்மேன்: தி கோல்டன் சர்கிள் (Kingsman: The Golden Circle)

0

 519 total views,  1 views today

டேவ் கிபன்ஸ் மற்றும் மார்க் மில்லர் இணைந்து எழுதிய காமிக் புத்தகமான ‘தி ஸீக்ரெட் ஸர்வீஸ்’சை தழுவி உருவாக்கப்பட்ட படம்தான்,கிங்ஸ்மேன்: தி ஸீக்ரெட் ஸர்வீஸ்’. 2014 ஆம் ஆண்டு வெளியான அந்த படம், மிக பெரிய வெற்றியை பெற்றது!

 

X-மேன்: ஃபர்ஸ்ட் கிளாஸ் படத்தை இயக்கியிருந்த மேத்யூ வாகன் தான் அதனையும் இயக்கி இருந்தார்! அதிரடி ஆக்ஷன், நகைச்சுவை, சண்டை காட்சிகளில் புதிய யுக்திகள் என அந்த படம் படு சுவாரஸ்யமான முறையில் உருவாகி, வியாபார ரீதியாக உச்சத்தை தொட்டது!

 

ஜேன் கோல்ட்மேன் மற்றும் மேத்யூ வாகன் இருவரும் இணைந்து திரைக்கதை அமைக்க, மீண்டும் மேத்யூ வாகன் இப்படத்தையும் இயக்கியுள்ளார்!

 

கோலின் ஃபிர்த், தாரோன் எகேர்டன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் தோன்ற, ஜூலியானா மூர் வில்லியாக தோன்றி அசர வைத்துள்ளார்!

 

மற்றும் ஆஸ்கர் பரிசு பெற்ற ஹேலி பெரீ, ஜெஃப் ப்ரிட்ஜஸ், மார்க் ஸ்ட்ராங், எல்டன் ஜான் போன்றவர்களும் முக்கிய வேடங்களில் தோன்றி நடித்துள்ளனர்.

 

பாபீ(ஜூலியானா மூர்) என்கிற வசீகரமும் விபரீதமும் கலந்த ஒரு பெண்ணால், கிங்ஸ்மேன் குழுவினர் பாதிக்கப்பட, ஸ்டேட்ஸ்மேன் என்கிற மற்றொரு அமைப்புடன் இணைந்து பாபீ யை எதிர்த்து போராடுவது தான் திரைக்கதையின் சாரம்.

 

கதாநாயகன், கேரி எக்ஸி யாக தாரோன் எகேர்டன் நடிக்க, அவரது குருநாதர் ஹாரீ ஹார்ட்ஆக கோலின் ஃபிர்த் நடித்துள்ளார். முதல் பாகத்தில் அவர் இறந்து விடுவது போல காட்டி இருந்தாலும், கண்களில் மட்டும் அடிபட்டு அவர் தப்பித்துவிட்டதாக காட்டியுள்ளார்கள்!

 

கோல்டன் சர்கிள் தலைப்புக்கு காரணம், பாபீ இன் அடியாட்கள் தங்களது உடலின் தோலில் தங்கத்தை பதித்து வைத்திருப்பார்கள்!

இப்படத்திலும் அதிரடி சண்டை காட்சிகளுக்கும் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை! மூன்றாம் பாகமும் தயாரிக்க முற்படுவதாக கேள்வி!

 

ஹென்றி ஜக்மன் மற்றும் மேத்யூ மார்கிசன் ஆகிய இருவரும் இணைந்து இசை அமைத்துள்ளனர்! ஜார்ஜ் ரிச்மந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். எட்டீ ஹமில்டன் படத்தை தொகுத்துள்ளார்.

 

உருவாக்கம்-ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்.

Share.

Comments are closed.

CLOSE
CLOSE