தல அஜித் ரசிகராக நடிக்கும் காளி வெங்கட்

0

Loading

sh_0201439

வான்சன் மூவிஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரித்து விஜய்சேதுபதி நடித்த சேதுபதி திரைப்படம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. சேதுபதி வெற்றியை தொடர்ந்து ஷான்சுதர்சன், வான்சன் மூவிஸ் சார்பாக தயாரிக்கும் இரண்டாவது படம் “: எனக்கு வாய்த்த அடிமைகள்”. புதுமுக இயக்குனர் மகேந்திரன் ராஜமணி  இயக்குனாரக அறிமுகம் ஆகும் இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார்

 

ப்ரணிதா, கருணாகரன், காளிவெங்கட், ”நான்கடவுள்ராஜேந்திரன், தம்பிராமையா உள்ளிட்ட முன்னனி நடிகர்கள் நடிக்கும்  இப்படத்தில் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றதுஅஜீத் பட சூட்டிங் என்று தகவல் பறவியதால், தல ரசிகர்கள் திரண்டுவிட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுபின்னர் இது அஜீத் படமல்ல. ஆனால் ஷேர் ஆட்டோ ஓட்டும் காளிவெங்கட் தீவிர அஜீத் ரசிகராக நடிக்கிறார் என்று படக்குழுவினரால் விளக்கம் அளிக்கப்பட்டதுவிஷயமறிந்த தல ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

Share.

Comments are closed.