தெலுங்கில் வெளி வர இருக்கும் விஜய் சேதுபதியின் ‘புரியாத புதிர்’.

0

 846 total views,  1 views today

img_2703

விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடிக்க, புதிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ரெபெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே சதிஷ் குமார் வெளி இடும். ‘புரியாத புதிர்’ படத்தின் தெலுங்கு வெளியீடு மிக பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சமீப காலமாக தமிழ் படங்கள் பல தெலுங்கில் வெளி இடப்படுகிறது. நல்லகதை அம்சமும், ஜனரஞ்சகமான காட்சி அமைப்பும், தமிழ் நடிகர்களின் உன்னத நடிப்பும், மொழி சார்ந்த எல்லையை தாண்டி நமது நடிகர்களின் புகழை விஸ்தரிக்கிறது. அந்த வகையில் விஜய் சேதுபதியின் தொடர் வெற்றியும் , ‘புரியாத புதிர்’ படத்தின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பும் இந்தப் படத்துக்கு தெலுங்கிலும் வர்த்தக ரீதியாக பெரும் எதிர்ப்பார்ப்பை கூட்டி உள்ளது. பிரபல பட நிறுவனமான ‘டி வி சினி CREATIONS படநிறுவனம் ‘புரியாத புதிர்’ படத்தை தெலுங்கிலும் பிரம்மாண்டமாக வெளி இட இருக்கிறது.தமிழில் வெளி வரும் அதே நாளில் தெலுங்கிலும் ‘புரியாத புதிர்’ வெளி வர இருப்பது குறிப்பிட தக்கது.

Share.

Comments are closed.