இயக்குநரும் வசனகர்த்தாவுமான பிருந்தா சாரதியின் ‘மீன்கள் உறங்கும் குளம்’ என்ற ஹைகூ கவிதை நூல் நேற்று (25.10.17) சண்டக்கோழி – 2 படப்பிடிப்பு இடைவேளையில் வெளியிடப்பட்டது.
நடிகர் விஷால் நூலை வெளியிட இயக்குநர் என். லிங்குசாமி பெற்றுக்கொள்கிறார். இந்நூலை தமிழ் ஹைகூ நூற்றாண்டு வெளியீடாக டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் கவிஞர்கள் பிறைசூடன், அறிவுமதி, பதிப்பாளர் மு.வேடியப்பன் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்