சின்னத்திரை மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக வலம் வந்துக் கொண்டிருக்கும் மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘மாணிக்’. இதில் ஹீரோயினாக ‘எதிர் நீச்சல்’ படத்தில் நடித்த சூசா குமார் நடித்துள்ளார். இரண்டாம் ஹீரோவாக வத்சன் நடித்திருக்கிறார். இப்படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் மார்டின், இயக்கிய பல குறும்படங்கள் பல்வேறு விருது போட்டியில் பங்கேற்றதுடன், கலைஞர் டிவி-ன் நாளைய இயக்குநர் சீசன் 5 போட்டியில் வெற்றி பெற்று டைடிலையும் வென்றுள்ளது.
மோஹிதா சினி டாக்கீஸ் சார்பாக மா.சுப்பிரமணியம் தயாரித்துள்ள இப்படம் பேண்டஷி கலந்த காமெடிப் படமாக உருவாகியுள்ளது
பாட்ஷா ரஜினிகாந்த் கெட்டப்பில் இப்படத்தின் டிசைன்கள் வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று (செப்.15) இப்படத்தின் பஸ்ட் லுக் டிசைன் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘துப்பறிவாளன்’ படத்தின் ரிலீஸுக்காக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் விஷால், இன்று ‘மாணிக்’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை அறிமுகப்படுத்தியிருப்பது, இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்த நிகழ்வின் போது ஹீரோ மா.கா.பா.ஆனந்த், இயக்குநர் மார்டின், தயாரிப்பாளர் எம்.சுப்பிரமணியம், ஒளிப்பதிவாளர் எம்.ஆர்.பழனிகுமார், எடிட்டர் கே.எம்.ரியாஸ், இணை இயக்குநர் மணி ஆகியோர் உடன் இருந்தார்கள். இதையடுத்து விரைவில் படத்தின் டீசரை வெளியிட முடிவு செய்துள்ள ‘மாணிக்’ படக்குழுவினர் அதை தொடர்ந்து பாடல்களையும், பிறகு படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளது.