879 total views, 1 views today
‘கொடைகானல் வொன்ட்’ புகழ் இயக்குனர் ரத்தீந்தரன் பிரசாத் மற்றும் கர்நாடகசங்கீத வித்துவான் டி.எம்.கிருஷ்ணா அவர்களும் இணைந்து ஒரு கலை படைப்பை தயாரித்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு முன் ரத்தீந்தரன் பிரசாத் அவர்கள் ராப் பாடகி சொஃபியா அஷ்ரஃப் அவர்களை கொண்டு இயக்கிய பாடல் காட்சி பல லட்ச காணல்கள் பதிவு செய்தது. அதை போன்று பல பாடல் படைப்புகளை இயக்கும் வாய்ப்புகள் வந்தாலும் இதுவே அவர் இன்னுமொரு கலைஞருடன் இணைந்து உருவாக்கும் படைப்பாகும்.
ராமன் மகாசெசெ விருது பெற்ற டி.எம்.கிருஷ்ணா அவர்கள் இசையிலும் மொழியிலும் செய்யும் பரிசோதனைனை மூலம் தன் கலையின் எல்லைகலை விரிவுபடுத்துபவர். கர்நாடக சங்கீதத்தை அனைத்து சாரரீடமும் கொண்டு சேர்பதின் முக்கியத்துவதை உணர்த்துபவர். இந்த மார்கழி மாதம் அனைத்து சபா நிகழ்வுகளிலும் பங்குகொள்ள மறுத்துள்ள டி.எம்.கிருஷ்னா அவர்களும், தன் படமான ‘இது வேதாளம் சொல்லும் கதை’ யின் படப்பிடிப்பின் நடுவே ரத்தீந்தரன் பிரசாத் அவர்களும் இணைந்திருப்பது அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.
ரத்தீந்தரன் பிரசாத் அவர்களின் கடைசி காணலான ‘கொடைகானல் வொன்ட்’ கார்பிரெட் உலகின் ஜாம்பவான் ‘யுனிலெவர்’ நிறுவனத்தை தன் குற்றத்திற்காக மண்டியிட வைத்து கொடைகானல் மக்களுக்கு நீதியை தேடி தந்தது. அது மட்டுமின்றி கடந்த வருடம் அவர் இயக்கிய குறும்படமான ‘ஸ்வேயர் கார்பிரேசன்’ கென்ஸ் திரைபடவிழாவில் தேர்வு
செய்து திரையிடபட்டது. அது போன்று 26 சர்வதேச திரைபட விழாவிலும் திரையிடபட்டள்ளது. இந்த படைப்பு என்ன மாற்றத்தை நிகழ்த்த உள்ளது என்பதை காண மக்கள் ஆர்வத்துடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.