நோர்வே தமிழ்த் திரைப்பட விழா பத்தாவது ஆண்டுகள் நோக்கிய பயணத்தில் இந்த ஆண்டு புதிய தடத்தினை பதிக்கவிருக்கின்றது. தமிழ் நாட்டு திரைப்படங்களுக்கான சிறந்த தெரிவில் 20 திரைப்படங்கள் எம்மால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தெரிவுகள் எமது விதிமுறைகள், நிபந்தனைகளுக்கு உட்பட்டு முடிவான தெரிவுகள். தமிழ்நாட்டில் வெளியான முழுநீளத் திரைப்படங்களுக்கு இந்த வருடத்தில் 25 பிரிவுகளில் தமிழர் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றது.
10 வது நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருதுகள் அறிவிப்பு:
சிறந்த படமாக பரியேறும் பெருமாள் திரைப்படம் எமது குழுவினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த வருடம் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் இருந்து எமது நடுவார்களால் தெரிவுசெய்யப்பட்ட 20 முழுநீளத் திரைப்படங்களில் 2019-ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள் இங்கே அறியத்தருகின்றோம்.
அந்த வகையில் சிறந்த படமாக பா.ரஞ்சித் அவர்களால் தயாரிக்கப்பட்டு, மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு உருவான ‘பரியேறும் பெருமாள்” திரைப்படம் அதி சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதே போல எமது நடுவார்களால் சிறந்த இயக்குனராக “மேற்கு தொடர்ச்சி மலை” இயக்குனர் லெனின் பாரதியும், சிறந்த நடிகராக விஜய் சேதுபதியும், சிறந்த நடிகையாக திரிஷா கிருஷ்ணன் அவர்களும் 96 திரைப்படத்தில் நடித்தமைக்காக தமிழர் விருதினை பெற்றுக்கொள்ள உள்ளனர்.
நோர்வேயில் கடந்த 9 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழிநுட்பக் கலைஞர்களுக்கான சிறந்த திறமைசாலிகள் தேர்வு செய்யப்பட்டு “தமிழர் விருதுகள்” வழங்கப்பட்டு வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. 2015 ஆம் ஆண்டு முதல் சர்வதே மொழித் திரைப்படங்களுக்கான திரையிடலும், போட்டிகளும் நடைபெற்று தமிழர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் வெளியான திரைப்படங்களில் 2019-ஆண்டுக்கான ஏனைய திரைப் படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் ‘கனா’ திரைப்படத்தை தயாரித்தமைக்காகவும், சிறந்த இசையமைப்பாளராக ‘பரியேறும் பெருமாள்’, ‘வட சென்னை ’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணனும் தேர்வாகியிருக்கின்றனர்.
மேலும் சிறந்த பாடகிக்கான விருது ‘96’ படத்தில் காதலே காதலே என்ற பாடலை பாடியதற்காக சின்மயீ ஸ்ரீபடா அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த பாடகருக்கான விருது ‘தான சேர்ந்த கூட்டம், கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் சொடக்கு மேல, அடி வெள்ளக்கார என்ற பாடலைகளைப் பாடிய அந்தோணி தாசனுக்கு வழங்கப்படுகிறது.
வாழ்நாள் சாதனையாளர் விருது இயக்குனர், நடிகர் மகேந்திரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. கலைச்சிகரம் விருது நடிகர், நகைச்சுவையாளர் விவேக் அவர்களுக்கு சமூக அக்கறையுடன் உழைப்பவர் என்ற காரணத்திற்க்காக வழங்கப்படுகின்றது.
தமிழ்மொழியின்சிறப்புகள்பற்றிஎடுத்துச்சொல்லி, கலை, பண்பாடு, வரலாறுஅடையாளம்தொடர்பாகவேற்று இனத்தவர்கள்
இத்தனை வருடங்களாக எமக்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பத்திரிக்கைகள், இணைத்தளங்கள், தொலைக்காட்சிகள், வானொலிகள் மற்றும் மக்கள் தொடர்பாளர்கள், அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவுத்துக்கொள்கின்றோம். தொடர்ந்தும் எமக்கான ஆதரவினை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன் எங்கள் பயணம் தொடர்கின்றது. 2014 ஆம் ஆண்டில் இருந்து எமது மக்கள் தொடர்பாளராக பணியாற்றும் நிகில் முருகன் அவர்களுக்கு எமது நெஞ்சு நிறைந்த நன்றிகள்.
இந்த விருதுகள் வழங்கும் விழா நோர்வேயின் தலைநகரமான ஒசுலோவில் வரும் ஏப்ரல் 27-ந் தேதி நடக்கவுள்ளது. தமிழர் விருதினை நோர்வே நாட்டுக்கு வந்து பெற்றுக்கொள்ள உள்ள கலைஞர்கள் எம்மோடு தொடர்புகொள்ளவும்
ஏனைய பிரிவுகளில் தமிழர் விருது பெற்றவர்களின் விபரங்கள் கீழே தருகின்றோம்.