‘பலூன்’ செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது

0

 396 total views,  1 views today

ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் நடிப்பில் புதுமுக இயக்குனர் சினிஷ் இயக்கத்தில், ’70mm மற்றும் பார்மெர்ஸ் மாஸ்டர் பிளான் productions என தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘பலூன்’ திரைப்படம் தனது சுவாரஸ்யமான முதல் போஸ்டரிலிருந்தே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன் பிறகு வெளிவந்த ‘பலூன்’ படத்தின் டீஸர் , அதன் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான கதை களத்தால் ரசிகர்களின் வரவேற்பபை பெற்றது. எல்லா பணிகளும் முடிந்து தயார் நிலையில் உள்ள இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போவதாக இப்படத்தின்  உரிமத்தை வாங்கியுள்ள ‘Auraa Cinemas’ அறிவித்துள்ளது.
இது குறித்து ‘Auraa Cinemas’ மகேஷ் கோவிந்தராஜன் பேசுகையில், ” ‘பலூன்’ நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இப்படம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு  மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும். பண்டிகை வாரமான செப்டம்பர் 27ஆம் தேதி அன்று ‘பலூன்’ படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம். நல்ல கதையம்சம் கொண்ட தரமான படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் என்றுமே பேராதரவு தந்துள்ளனர். நல்ல கதையையும் அதற்கு  சரியாக அங்கீகாரத்தை தரும் ரசிகர்களையும் மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட ‘பலூன்’ நிச்சயம் வெற்றி பெரும் என உறுதியாக நம்புகிறேன்.”

 

Share.

Comments are closed.