
இசைஞானி இளையராஜாவின் இசையே ஒரு புரட்சிதான்!
இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திருவிழா, தலித் வரலாற்று மாத நிகழ்வாக ஏப்ரல் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திவருகிறார். இதில் பி.கே ரோசி திரைப்படவிழா, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சி, சமுக நீதியைப்பேசும் மேடை நாடகங்கள் ஆகியவை நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து சென்னை அடையாரில் உள்ள டாக்டர். அம்பேத்கர் மணிமண்டபத்தில் ஓவியக்கண்காட்சி நடைபெற்றது.
பல்வேறு ஓவியர்கள் இதில் கலந்துகொண்டு ஓவியங்களை பார்வைக்கு வைத்திருந்தார்கள். தலித் ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இதில் பேசிய இயக்குனர் பா.இரஞ்சித்
கலை இங்கு எல்லோராருக்கும் பொதுவானதுதான் ஆனால் கலைஞர்கள் அவர்களின் பார்வையில் இந்த சமூகத்தை , இந்த அழகியலை , வாழ்வியலை பார்த்து தங்கள் கலைகளில் பிரதிபலிப்பதில் வேறுபாடுகள் இருக்கின்றன.
கல்லூரி காலங்களில் எங்களது ஆசிரியர் ஓவியர் சந்துரு அவ...