Thursday, October 2

Month: April 2022

ஜீவியின் ‘செல்ஃபி’யை தொடர்ந்து ‘ஐங்கரன்; ஆஹா தமிழில் வெளியாகிறது!

ஜீவியின் ‘செல்ஃபி’யை தொடர்ந்து ‘ஐங்கரன்; ஆஹா தமிழில் வெளியாகிறது!

News
  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் கலைவிழா (கல்ச்சுரல்ஸ்) சம்பிரதா என்ற பெயரில் மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் கலந்துகொண்டார். ஆஹா தமிழ் ஓடிடி சார்பில் மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், கௌதம் மேனன் நடிப்பில் ஆஹா தமிழில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற செல்ஃபி படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரவிராசு இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடித்துள்ள ஐங்கரன் படம் மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மே இறுதியில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இந்த படமும் வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலரும் மாணவ மாணவிகள் மத்தியில் திரையிடப்பட்டது. இரண்டு படங்களில் டிரைலர்களை பார்த்த மாணவர்கள் உற்சாகத்தில் உரக்கக் கத்தி, தங்கள் ஆரவா...
எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கிய  “ரத்தம்” படத்தின் டப்பிங் பணிகள்!

எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கிய “ரத்தம்” படத்தின் டப்பிங் பணிகள்!

News
விஜய் ஆண்டனியின் “ரத்தம்” படத்தின் முழு பணிகளும் கச்சிதமான ஒழுக்கத்துடன் நடந்தேறி வருகிறது. Infiniti Film Ventures நிறுவனத்தின் திறமையான திட்டமிடல் பணியில் காட்டும் தீவிரம், ஆகியவற்றால் தயாரிப்பு சரியான வேகத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில் தான், இப்படத்தின் இந்திய ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். வெளிநாட்டு படப்பிடிப்பை படக்குழு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் இன்று (ஏப்ரல் 23, 2022) காலை சென்னையில் எளிமையான பூஜையுடன் இனிதே தொடங்கியது. “ரத்தம்” படத்தை இயக்குநர் CS அமுதன் இயக்குகிறார் மற்றும் கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், B. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் Infiniti Film Ventures சார்பில் இப்படத்தை தயாரிக்கின்றனர். Infiniti Film Ventures உறுதி தந்தபடி, முற்றிலும் புதிய களத்தில் பரபர திருப்பங்களுடன் கூடிய, அனைவருக...
நடிகர் விமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்த தயாரிப்பாளர் சிங்கார வேலன்!

நடிகர் விமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்த தயாரிப்பாளர் சிங்கார வேலன்!

News
நடிகர் விமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்த தயாரிப்பாளர் சிங்கார வேலன்! தன் மீது பொய் புகார் கொடுத்த நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், தனக்கு விமல் தரவேண்டிய பணத்தை பெற்று தரகோரியும் இன்று (22-04-22) காலை 11 மணிக்கு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் புகார் மனு அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து புகார் மனு நகலை அளித்தார். அதில், பொருள் : ரூபாய் 1.5 கோடியை திருப்பி தராமல் ஏமாற்றி வரும் நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, வணக்கம். " மெரினா பிக்சர்ஸ் " என்ற பெயரில் திரைப்பட விநியோக நிறுவனம் துவங்கி, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான " லிங்கா ", விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான " புறம்போக்கு " உள்ளிட்ட சில படங்களை விநியோகம் செய்துள்ளேன். இந்நிலையில் திரைப்பட விநியோகம் குறித்து சில விளக்கங...
“டாடா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

“டாடா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

News
Olympia Movies S. அம்பேத் குமார் வழங்க,  கணேஷ் K பாபு இயக்கத்தில் கவின் - அபர்ணா தாஸ் நடிக்கும், “டாடா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது ! Olympia Movies சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார், பல தரமான திரைப்படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார், அவை தற்போது தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. அவற்றில் ஒன்று அவரது “புரடக்சன்: 4”, இப்படத்தினை அறிமுக இயக்குநர் கணேஷ் K பாபு இயக்குகிறார், இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒரு அழகான காதல் திரைப்படமாக உருவாகும் இப்படம் பார்வையாளர்களுக்கு நிறைய பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும். நடிகர் கவினுக்கென ஒரு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் இருப்பதால், அவரது ரசிகர்களிடம் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் ல...
ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் டிரெய்லர்!

ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் டிரெய்லர்!

News
தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா இணைந்து நடிக்கும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன் இன்று வெளியானது. 2022 ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா என தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் நட்சத்திர கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தென்னிந்திய திரைத்துறையின் முதன்மை நாயகிகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் சமந்தா முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் ஏகோபித...
மே 6 முதல் உலகெங்கும் வெளியாகிறது ‘டேக் டைவர்ஷன் ‘திரைப்படம்!

மே 6 முதல் உலகெங்கும் வெளியாகிறது ‘டேக் டைவர்ஷன் ‘திரைப்படம்!

News
'டேக் டைவர்ஷன்' படத்தை இயக்கி இருக்கும் சிவானி செந்தில் ஏற்கெனவே'கார்கில்' என்ற படத்தை 2018-ல் இயக்கி இருந்தார் .அந்தப் படம் தமிழில் ஒரே ஒரு கதாபாத்திரம் தோன்றும் படமாக ஊடகங்களில் பேசப்பட்டது. நாயகன் காரில் செல்கிற பயணம் சார்ந்த காட்சிகள் தான் அந்தப் படத்தின் கதையாக இருக்கும்.சிவானி பிலிம்ஸ் சார்பில் சுபா செந்தில் மற்றும் நண்பர்களுடன் இணைந்து  தயாரித்துள்ளார். டேக் டைவர்ஷன்  படத்தின் ட்ரெய்லர் மற்றும் சில காட்சிகளைப் பார்த்த கேஜிஎப் இயக்குநர் பிரசாந்த் நீல் படக்குழுவினரை பாராட்டியும் வாழ்த்தியும் சில வரிகள் எழுதிக் கொடுத்துள்ளார். இதனால் படக்குழுவினர் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். 'டேக் டைவர்ஷன்  'படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று இருக்கும் நடிகர் சிவா என்கிற நடிகர் சிவக்குமார் ஏற்கெனவே சில படங்களில் சின்ன சின்ன பாத்திரங்களில் தோன்றியவர்.வழக்கம்போல கேஜிஎஃப் படக்குழுவினரிடம் வாய்...
த்ரில்லர் பட ரசிகர்களுக்கு தீனி போடும் படமாக உருவாகியிருக்கும் “மாஸ்க்”!

த்ரில்லர் பட ரசிகர்களுக்கு தீனி போடும் படமாக உருவாகியிருக்கும் “மாஸ்க்”!

News
சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), விரைவில் திரைக்கு வர இருக்கும் 'அருவா சண்ட' , இளையராஜா இசையில் 'நினைவெல்லாம் நீயடா', படங்களை இயக்கியிருக்கும் ஆதிராஜன் தன்னுடைய கோல்டன் மேஜிக் க்ரியேட்டர்ஸ் பட நிறுவனத்தின் மூலம் எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கும் படம் "மாஸ்க்". சமீபத்தில் மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மைத்துனரும் சிறுவயதிலேயே தேசிய விருது பெற்றவருமான விஜய ராகவேந்திரா இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். தற்போது சசிகுமாருடன் "காமன் மேன்" படத்தில் நாயகியாக நடித்து வருபவரும், தெலுங்கு கன்னட திரையுலகின் முன்னணி நடிகையுமான ஹரிப்பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். மாஸ்க்கில் நடிப்பிலும், கவர்ச்சியிலும் வேறுவிதமான ஹரிப்ரியாவைப் பார்க்கலாம். தென்னிந்திய மொழிப் படங்களில் பிரபலமான மேக்னா நாயுடு ஒரு பாடலுக்கு அசத்தலாக நடனமாடியிருக்கிறார். மற்றும் ஐஸ்வர்யா, விஷால் ஹெக்டே, மது உ...