நான் நடிகனாக அறிமுகமான நாள் முதல் இந்நாள் வரை எனக்கும் என் நடிப்பில் வெளிவந்த படங்களுக்கும் தாங்கள் தொடர்ந்து அளித்துவரும் பேராதரவிற்கு எனது இதயம் கனிந்த நன்றிகள்.
நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்க கோரி போராடும் நம் இளைய சமுதாயத்தினரின் வேகத்தையும், விவேகத்தையும் பார்க்கையில் எனக்கு பெருமையாவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள நான் 1976ம் வருடம் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்.தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த தாயில்லா குழுந்தை படத்தில் கதாநாயகனாக நடித்தது என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒன்றாகும். அவ்வருடம் தணிக்கை குழு படங்களில் சண்டைக்காட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால் தாயில்லா குழுந்தை படத்தின் முதல் காட்சியும் கடைசி காட்சியும் காளை மாட்டை நான் அடக்கும் காட்சி படமாக்கப்பட்டது. எந்த ஒரு டூப்புமின்றி நான் நடித்ததை பார்த்த தேவர், ஹிந்தியில் தர்மேந்திராவிற்கு பிறகு தமிழில் விஜயகுமார்தான் டூப்பில்லாமல் சண்டைக்காட்சியில் அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார் என்று கூறினார். அதை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன்.
இன்றைய இளைஞர்களின் போராட்டத்தையும் நான் இவ்வாராகவே பார்க்கிறேன்.
தங்களின் முழு மனதுடன் போராடும் நம் தமிழ் சொந்தங்களுக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு என்பதை உறுதியாக சொல்கிறேன்.
உங்கள் அனைவரின் அன்பிற்க்கும் ஆதரவிற்க்கும் என் நன்றிகள்.