Sunday, September 20

சாகசங்களை சாதாரணமாக செய்பவர்களே குடும்பஸ்தர்கள் !

Loading

மக்களின் வாழ்வியலை பிரதிபலிப்பதே எதார்த்த சினிமாவாகும். எதார்த்த சினிமா எடுப்பதன் மூலமாக மக்களை வெகுவாக கவரலாம் என்பது ஒரு விதமான உண்மை.

சினிமாக்காரன் S. வினோத் குமார் தயாரிப்பில், ராஜேஷ்வர் கலிசாமி இயக்கத்தில், மணிகண்டன் (ஜெய் பீம்), சான்வி மேகனா, குரு சோமசுந்தரராஜன் (ஜோக்கர் , ஜிகர்தண்டா) இணைந்து நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்ட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மணிகண்டன் சமீபத்தில் வெளியான குட் நைட் திரைப்படத்தில் எதார்த்தமாக நடித்து மக்களை கவர்ந்த நிலையில், இத்திரைப்படத்திலும் தன்னுடைய எதார்த்த நடிப்பால் அசத்துவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் வாழக்கூடிய பையனின் வாழ்வியலை நிர்வாகிக்க அல்லது அவன் குடும்பத்தை நடத்த, அவன் எடுத்துக்கொள்ளும் சவாலான சாகசங்களே இத்திரைப்படத்தின் மையக்கருவாகும். இக்கதையின் கதாநாயகனான மணிகண்டன், கோயம்புத்தூரில் ஒரு flex அச்சிடும் சாதாரண நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு கீழ் நடுத்தர வர்க்கத்தில் வாழக்கூடியவர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் கோயம்புத்தூரில் தொடங்கியது. இக்கதை ஒரு குடும்பத்தில் சாதாரணமாக நடக்கக்கூடிய சூழ்நிலைகளை அமைத்த ஒரு கதை என்பதால் , பல நகைச்சுவைகளும், சுவாரஸ்யங்களையும் மேற்கொண்டுள்ள இத்திரைப்படம், குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாகவே அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

*தொழில்நுட்பக் கலைஞர்கள் :*

இயக்கம்: ராஜேஷ்வர் காளிசாமி

கதை: பிரசன்னா பாலசந்தரன் & ராஜேஷ்வர் காளிசாமி

திரைக்கதை & வசனம்: பிரசன்னா பாலசந்தரன்

தயாரிப்பு: செ. வினோத் குமார்

ஒளிப்பதிவு: சுஜித் சுப்ரமணியம்

இசை: வைசாக்

படத்தொகுப்பு: கண்ணன்

கலை வடிவமைப்பு: சுரேஷ் குமார்

ஒலிப்பதிவு: விக்ரமன்

சண்டைப்பயிற்சி: அபிஷேக் ஸ்ரீனிவாஸ்

உடை வடிவமைப்பு: மீரா

விளம்பர வடிவமைப்பு: இளங்கவின்

மக்கள் தொடர்பாளர்: சுரேஷ் சந்திரா

நிறுவனத்தின் பெயர்: சினிமாக்காரன்