Friday, September 18

Tag: ActorManigandan

மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!

மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!

News
ரைனோ பிக்சர்ஸ் தயாரிப்பில், தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான படைப்புகளை வழங்கும் நோக்கத்துடன் புதிய முயற்சியில் களம் இறங்குகிறார் தயாரிப்பாளர் திரு.ஆர்.ராகேஷ் . இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் ப்ரொடக்ஷன் நிறுவனத்தில் எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசராக பணியாற்றியுள்ள இவர், கபாலி , காலா , பைசன் போன்ற பிரம்மாண்ட வெற்றி திரைப்படங்களின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவின் உள்ளார்ந்த படைப்புத் தன்மையையும், தரமான உள்ளடக்கத்தின் அவசியத்தையும் நன்கு புரிந்துள்ள திரு. ஆர். ராகேஷ் அவர்கள், தற்போது தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை மிகப்பெரிய கனவுகளுடன் தொடங்கியுள்ளார், அவரது தயாரிப்பில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்தில், மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கிறார். இயல்பான நடிப்பாலும், கதைத்தேர்விலும் தனித்துவத்தை நிரூபித்துள்ள மணிகண்டன், தொடர்ந்து...

கருத்தாக சொல்லாமல் வாழ்வியலையும் சேர்த்து சொன்னதே ‘குடும்பஸ்தன்’ படத்தின் வெற்றி!

News
’குடும்பஸ்தன்’ நன்றி தெரிவிக்கும் விழா! சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் இயக்குநர் சக்திவேல் பாலாஜி பேசியதாவது, “நக்கலைட்ஸ் அணியின் மாபெரும் வெற்றிப்படம் இது. அவர்களுக்கும் இது தேவையான விஷயம். அவர்கள் சினிமாவுக்கு வந்து ஜெயித்திருப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’, ‘குடும்பஸ்தன்’ இந்த இரண்டு படங்களும் எளிய முறையில் பல அழுத்தமான விஷயங்களை படமாக்கி ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்திருக்கிறது. கருத்தாக சொல்லாமல் வாழ்வியலையும் சேர்த்து சொன்னதே ‘குடும்பஸ்தன்’ படத்தின் வெற்றி. மணிக...
பார்வையாளர்கள் தங்களை பொருத்திக் கொள்ளும் கதையாக ‘குடும்பஸ்தன்’ இருக்கும்!

பார்வையாளர்கள் தங்களை பொருத்திக் கொள்ளும் கதையாக ‘குடும்பஸ்தன்’ இருக்கும்!

News, Uncategorized
“படம் பார்க்கும் பார்வையாளர்கள் தங்களை பொருத்திக் கொள்ளும் கதையாக ‘குடும்பஸ்தன்’ இருக்கும்” - நடிகர் மணிகண்டன்! ஒரு படம் வெற்றியடைந்தால் அந்தப் படத்தின் பெயரும் நடிகரின் பெயர் முன்னிலையில் சேர்வது இயல்பான விஷயம். இது நடிகர் மணிகண்டணின் ஒவ்வொரு படத்திலும் நடிக்கிறது. ‘ஜெய் பீம்’, ‘குட்நைட்’ மற்றும் ‘லவ்வர்’ இந்தப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அவரது அடுத்த படமான ‘குடும்பஸ்தன்’ ஜனவரி 24, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் மணிகண்டன் கூறும்போது, “நக்கலைட்ஸ் யூடியூப் சேனலில் இருந்தே நான் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமியின் ரசிகன். எண்டர்டெயின்மெண்ட்டில் அவர் புதிய அலையை உருவாக்கினார் என்பதில் சந்தேகம் இல்லை. ’குட்நைட்’ படத்தின் ரிலீசுக்கு முன்பே இந்த படத்தில் இணைந்து பணியாற்ற முடிவு செய்தோம். ராஜேஷ்வருக்கு பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் திறன் உள்ளது. ’குடும்பஸ்தன்’ படம் வெளியா...
“‘குடும்பஸ்தன்’ படம் மனஅழுத்தத்தைக் குறைக்கும்” இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி!

“‘குடும்பஸ்தன்’ படம் மனஅழுத்தத்தைக் குறைக்கும்” இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி!

News
"’குடும்பஸ்தன்’ திரைப்படம் உங்களை சிரிக்க வைத்து, மனஅழுத்தத்தைக் குறைக்கும்” இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி! ’குட்நைட்’ மற்றும் ‘லவ்வர்’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகர் மணிகண்டனின் அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'குடும்பஸ்தன்' உள்ளது. இந்தப் படம் ஜனவரி 24, 2025 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படம் பற்றி இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி பகிர்ந்து கொண்டார். “'குடும்பஸ்தன்' என்னுடைய சொந்த அனுபத்தில் இருந்து உருவான கதை. பின்னர், நானும் பிரசன்னா பாலச்சந்திரனும் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதத் தொடங்கினோம். கதையாக எழுதும்போதே எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் வரும் நிகழ்வுகள் எல்லாவற்றையும் பார்வையாளர்கள் தங்களுடன் நிச்சயம் பொருத்திப் பார்ப்பார்கள். குடும்ப வாழ்க்கை என்பது பொறுப்புடன் கூடிய ஆனந்தமான அனுபவம். இந்தக் கதையில...
குடும்பஸ்தன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

குடும்பஸ்தன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

News
' குடும்பஸ்தன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா! சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. ஆடை வடிவமைப்பாளர் மீரா, “எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர் வினோத், இயக்குநர் ராஜேஷூக்கு நன்றி. என்னுடைய முதல் படமே குடும்பப் படமாக அமைந்துள்ளது. ஆதரவு கொடுத்த ஒட்டுமொத்த குழுவுக்கும் நன்றி”. கலை இயக்குநர் சுரேஷ் பாலாஜி, “எனக்கு வாய்ப்புக் கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி. படத்தில் ஜாலியாக வேலை செய்தோம். உங்களுடைய ஆதரவு தேவை”. எடிட்டர் கண்ணன் பாலு, “’குடும்பஸ்தன்’ எனக்கு ஸ்பெஷல் படம். நன்றாக படம் வந்திருக்கிறது. தியேட்டரில் பாருங்கள்”. ஒளிப்பதிவாளர் சுஜித் சுப்...
நடிகர் மணிகண்டன்  நடிக்கும் ‘குடும்பஸ்தன்’

நடிகர் மணிகண்டன் நடிக்கும் ‘குடும்பஸ்தன்’

News
சினிமாகாரன் எஸ்.வினோத் குமார் வழங்கும் ’குட் நைட்’ & ’லவ்வர்’ படப்புகழ் நடிகர் மணிகண்டனின் அடுத்த படத்திற்கு ‘குடும்பஸ்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது! கெளபாய்ஸ், நாடோடி வீரர்கள், கோஸ்ட்பஸ்டர்ஸ் அல்லது புதையல் வேட்டையாடுபவர்கள் பற்றிய படங்களே பொதுவாக சாகச படங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், திருமணமான சாதாரண குடும்பஸ்தனின் அன்றாட வாழ்க்கையும் சாகசங்களுக்குக் குறந்ததல்ல. அந்த வகையில் ஒவ்வொரு குடும்பஸ்தனும் ஒரு சாகச வீரனே ! ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், சினிமாகாரன் எஸ்.வினோத் குமார் தயாரிப்பில், ஒரு இளைஞன் குடும்ப வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களும் சாகசங்களும் பல இயல்பான வேடிக்கை நிறைந்த தருணங்கள் கொண்ட விறுவிறுப்பான திரைப்படமாக உருவாகியிருக்கிறது. மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் புதிய திரைப்படத்திற்கு ‘குடும்பஸ்தன்’ என்று பெயரிட்டுள்ளனர். ஒவ்வொரு படத்திலும் தனது அசத்தலான நடிப...
மணிகண்டன் நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

மணிகண்டன் நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

News
சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் ‘குட்நைட்’ புகழ் மணிகண்டன் நடித்திருக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 2’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது! சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக S.  வினோத்குமார் தயாரிப்பில், ராஜேஷ்வர்  காளிசாமி இயக்கத்தில், 'குட்நைட்’ படப்புகழ் மணிகண்டன் கதாநாயகனாக நடித்திருக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தில்,  சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், "ஜெய ஜெய ஜெய ஹே" புகழ் கனகம்மா, ஜென்சன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். ஒரு சாதாரண  நடுத்தர குடும்பத்து இளைஞன் தன்மானத்திற்காகவும், குடும்பத்தின் நலனுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களே இத்திரைப்படத்தின் மையக்கரு. படம் குறித்து இயக்குநர் ராஜேஷ்வர்  காளிசாமி மேலும் பகிர்ந்திருப்பதாவது, “இந்தப் படம் ஃபேமிலி காமெடி டிராமாவாக உர...
லவ்வர்’ படத்தின் இசை வெளியீடு!

லவ்வர்’ படத்தின் இசை வெளியீடு!

News
‘லவ்வர்’ படத்தின் இசை வெளியீடு! அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘லவ்வர்’. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ராஜ்கமல் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கும் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொண்டிருக்கிறார். காதலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் நாசரேத் பஸ்லியான், மகேஷ்ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற...
சாகசங்களை சாதாரணமாக செய்பவர்களே குடும்பஸ்தர்கள் !

சாகசங்களை சாதாரணமாக செய்பவர்களே குடும்பஸ்தர்கள் !

News
மக்களின் வாழ்வியலை பிரதிபலிப்பதே எதார்த்த சினிமாவாகும். எதார்த்த சினிமா எடுப்பதன் மூலமாக மக்களை வெகுவாக கவரலாம் என்பது ஒரு விதமான உண்மை. சினிமாக்காரன் S. வினோத் குமார் தயாரிப்பில், ராஜேஷ்வர் கலிசாமி இயக்கத்தில், மணிகண்டன் (ஜெய் பீம்), சான்வி மேகனா, குரு சோமசுந்தரராஜன் (ஜோக்கர் , ஜிகர்தண்டா) இணைந்து நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்ட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மணிகண்டன் சமீபத்தில் வெளியான குட் நைட் திரைப்படத்தில் எதார்த்தமாக நடித்து மக்களை கவர்ந்த நிலையில், இத்திரைப்படத்திலும் தன்னுடைய எதார்த்த நடிப்பால் அசத்துவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் வாழக்கூடிய பையனின் வாழ்வியலை நிர்வாகிக்க அல்லது அவன் குடும்பத்தை நடத்த, அவன் எடுத்துக்கொள்ளும் சவாலான சாகசங்களே இத்திரைப்படத்தின் மையக்கருவாகும். இக்கதையின் கதாநாயகனான மணிகண்டன், கோய...
மணிகண்டன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

மணிகண்டன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

News
மணிகண்டன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு வசனகர்த்தாவும், நடிகருமான மணிகண்டன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத முதல் திரைப்படத்தில் நடிகர் மணிகண்டன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். இவர்களுடன் கண்ணா ரவி, 'பருத்திவீரன்' சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துவரும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். காதலை மையப்படுத்தி தயாராகி வரும் இந்த திரைப்பட...