பசி என்று யார் வந்தாலும் அவர்களுக்கு என்னுடைய அலுவலகத்தில் உணவு வழங்கப்படும் என்று நடிகர் புகழ் அவர்கள் நடிகர் விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில் உறுதி ஏற்றிருந்தார். அதனை நிறைவேற்றும் விதமாக தினமும் தன்னுடைய அலுவலகத்தில் 50 நபர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். கடந்த 250 நாட்களாக தொடந்து உணவு வழங்கி வரும் நிலையில் இன்று 251 வது நாளை எட்டியுள்ளது.
ஆண்டின் 365 நாட்களும் தனது அலுவலகத்தில் தான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தினமும் 50 நபர்களுக்கு கண்டிப்பாக உணவு வழங்கப்படும், அது ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை, பண்டிகை நாட்களாக இருந்தாலும் சரி எல்லா நாட்களிலும் உணவு வழங்கப்படும் அதில் எந்த தடையும் இருக்காது அதற்கான ஏற்பாடுகளை தான் செய்துள்ளதாகவும், வரும் காலங்களில் இந்த உதவி மேலும் பலருக்கு சென்றடையும் வண்ணம் விரிவுபடுத்த தன்னுடைய வெற்றிக்கு மக்களின் ஆதரவை என்றும் நாடியிருப்பதாக நடிகர் புகழ் தெரிவித்துள்ளார்.