பிரபலமான ஒரு நபர் கடினமான ஒரு காரியத்தைச் செய்துவிட்டு, அதைப்போல் வேறு சிலரை செய்யத் தூண்டி சவால் விடுவது சமீபகாலமாக பிரபலமடைந்து வருகிறது.
ஐஸ் போன்ற குளிர்ந்த நீரை உடலில் ஊற்றிக் கொள்ளும் அபத்தமான சவாலில் ஆரம்பித்து, தலையணையை ஆடையாக்கி உடலை மறைத்துக் கொள்ளும் அசிங்கமான சவால்கள்வரை ஏராளமான சவால்களை ரசிகர்கள் பார்த்துவிட்டார்கள்.
பொது நல நோக்கிலும், பலருக்கும் பயன்படும் விதத்திலுமான மிகச் சில சவால்களை அவ்வப்போது பலரும் முன்னெடுப்பதுண்டு.
அப்படிப்பட்ட சவால்களில் ஒன்றுதான் மரக் கன்று நடுவது. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு மரக் கன்றுகளை நட்டதுடன் அதைப் படம் பிடித்துப்போட்டு, நடிகர் விஜய்க்கு சவால் விடுத்திருந்தார். அதை ஏற்று விஜய் இப்போது மரக் கன்றுகளை நட்டிருக்கிறார். விஜய் நட்ட மரக்கன்று என்பதால் கண்டிப்பாக நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு, மரமாக உயர்ந்து வளரும் என நம்பலாம்.