இசையமைப்பாளராக மாறிய பாடகி!

0

 267 total views,  1 views today

இசையோடு கலந்த வார்த்தைகளை இனிமையான குரலில் கேட்கும் போதுதான் ஒரு பாடல் உயிர் பெறுகிறது. அப்படி மயக்கும் குரலால் தமிழ்சினிமாவில் பிரபலமான பாடகியாக வலம் வருபவர் பாடகி ஸ்வாகதா.

அவரின் குரலில் காற்றிமொழி படத்தில் ‘டர்ட்டி பொண்டாட்டி’, லட்சுமி படத்தில் ‘ஆலா ஆலா’  பாடல்கள் உள்ளிட்ட நிறைய பாடல்களை பாடி இருக்கிறார். இப்போது வெளிவரவுள்ள பல படங்களிலும் பாடி இருக்கிறார்.

 தற்போது அவருக்குள் இருக்கும் இன்னொரு பரிணாமமும் வெளிப்பட்டுள்ளது. இசையையும் வார்த்தைகளையும் உள்வாங்கி அற்புதமான குரலில் பாடல்களை வெளிப்படுத்தும் ஸ்வாகதா தற்போது ஒரு பாடலுக்கு இசை அமைத்து, பாடி அந்தப்பாடலை வீடியோவாகவும் வெளியிட்டிருக்கிறார். வீடியோவில் அவரே தலைமை நாயகியாக நடிக்கவும் செய்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவரே, இசை, குரல், நடிப்பு என முழுப்பொறுப்பையும் ஏற்று அடியாத்தே என்ற இசை ஆல்பத்தை யூட்யூபில் வெளியிட்டிருக்கிறார். இளைஞர்களிடையே அப்பாடல் மிகச்சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. இசை அமைப்பாளர்கள் கதாநாயகர்களாக நடிப்பதைப் போன்று ஒரு பாடகியான ஸ்வாகதா இசை அமைப்பாளராக பரிணாமம் அடைந்துள்ளார். முகிலன் முருகேசன் இயக்கியுள்ள இந்த பாடலின்  துவக்கத்தில், “நிலா வரும் சாமம் தோறும் மாமன் ஞாபகம்” என்ற வரிகளில் இசையும் அவரது குரலும் மெஸ்மரிசம் செய்கிறது.

ஸ்வாகதா இசையமைத்து , நடித்த அடியாத்தே பாடலை கெளதம் வாசுதேவ் மேனன் , யுவன ஷங்கர் ராஜா , ரா. பார்த்திபன் , விக்னேஷ் சிவன் , இயக்குனர் திரு ,  அசோக் செல்வன், பாடகி சின்மயி , ஹரீஷ் கல்யாண் உள்ளிட்ட பல பிரபலங்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது வாழ்த்துக்களை   தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Adiyathe Music Video Link : https://youtu.be/rwcxpVDiIrQ 
 

Share.

Comments are closed.