142 total views, 1 views today
மனிதகுல வரலாற்றில் 10000 வருடங்களாக, மனிதனின் உற்ற தோழனாக இருந்து வருகிறது நாய். அது வீட்டின் பாதுகாவலன். அனைவர் வீடுகளிலும் நாய் ஒரு குடும்ப உறுப்பினராக தான் இருக்கும். அதை யாரும் பிரித்து பார்க்க மாட்டார்கள். உலகம் முழுக்க நாயை உறவாகவே கொண்டாடி வருகிறார்கள். நாயுடான மனிதனின் இந்த அழகிய உறவை அட்டகாசமாக சொல்லியிருக்கிறது, “அன்புள்ள கில்லி” திரைப்படம். இப்படத்தின் டீஸர் 2021 ஜூலை 3 அன்று காலை பாலிவுட் உச்ச நட்சத்திரம் சுனில் ஷெட்டி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி ஆகியோரால் வெளியிடப்பட்டது. இணையத்தில் வெளியான இப்படத்தின் டீஸருக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு தந்து வருகிறார்கள்.
இயக்குநர் ராமலிங்கம் ஶ்ரீநாத் இது குறித்து கூறியதாவது…
எங்கள் படத்தின் டீஸரை பெரும் ரசிகர் கூட்டத்திடம் கொண்டு சேர்த்த, பாலிவுட்டின் முடிசூடா அரசன், உச்ச நட்சத்திரமான சுனில் ஷெட்டி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி ஆகியோருக்கு எங்கள் குழுவினர் சார்பில் பெரும் நன்றியினை தெரிவித்து கொள்கிறென். டீஸருக்கு ரசிகர்கள் தந்து வரும் பேராதரவு எங்கள் படத்தின் வெற்றி மீதான நம்பிக்கையை பெருமளவில் உயர்த்தியிருக்கிறது. திரையரங்கில் குடும்பங்கள் கொண்டாடும் படைப்பாக “அன்புள்ள கில்லி” திரைப்படத்தை வழங்க ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றார்.
“அன்புள்ள கில்லி” திரைப்படத்தை இயக்குநர் ராமலிங்கம் ஶ்ரீநாத் எழுதி, இயக்கியுள்ளார். Rise East Entertainment Pvt Ltd மற்றும் Master Channel சார்பில் ஶ்ரீநிதி சாகர், E. மாலா இப்படத்தினை தயாரிக்கிறார்கள். இப்படத்தில் மைத்ரேயா ராஜசேகர், துஷாரா விஜயன் மற்றும் சாந்தினி தமிழரசன் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள் மேலும் மைம் கோபி, VJ ஆஷிக், நாஞ்சில் விஜயன், இளவரசு, பூ ராமு, இந்துமதி, ஶ்ரீரஞ்சனி மற்றும் பேபி கீர்த்திகா முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.