Monday, April 20

அறிவான் _ விமர்சனம்

Loading

அறிவான் _ விமர்சனம்

நடிகர்கள் :- அனந்த் நாக், ஜனனி குணசீலன், பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கவுரி சங்கர், குருமூர்த்தி
தொழில் நுட்பக் கலைஞர்கள்:-
தயாரிப்பு நிறுவனம் : எம்டி பிலிம்ஸ்
தயாரிப்பு: துரை மகாதேவன்
இயக்கம் : அருண் பிரசாத்
இசை: கார்த்திக் எரா
ஒளிப்பதிவு இயக்குனர்: யஸ்வந்த் பாலாஜி
பிஆர்ஓ: ஏ ராஜா

நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டரான ஆனந்த் நாக் தற்காலிக பணி நீக்கத்திற்கு பின் நெய்வேலி காவல் நிலையத்தில் பணியில் சேர்கிறார்.

சாலையோரத்தில் இறந்து கிடக்கும் ஒரு உடல் ‘ஹிட் அண்ட் ரன் கேஸ்’போல் தோன்றினாலும் கொலையாக கொலையாக இருக்குமோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்துகிறது.

விசாரணை தொடரும் போது அதே பகுதியில் மற்றொருவர்  கொலை செய்யப்படுகிறார்.

  பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண் இந்த கொலையில் தொடர்புடையவள் என சந்தேகித்து அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டர் ஆனந்த் நாக்.

அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டு, விசாரணை வளையத்திலிருந்த  பெண் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.

தொடர் கொலைகள் மேலும் மேலும் வழக்கை சிக்கல் ஆக்கிக் கொண்டே செல்கிறது.

கொலையுண்ட அனைவரும் கழுத்தறுபட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பதுதான் இவர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை.

புலனாய்வு செய்திகளை வெளியிடும் பிரபல யூ ட்யூபர்  ஜனனி, தான் மனக்கவிருக்கும் இன்ஸ்பெக்டர் ஆனந்த் நாகுக்கு  உதவ முன் வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் கழுத்தறுபட்டு நடந்த கொலை ஒன்று ஜனனியின் கவனத்திற்கு வருகிறது.

இந்தத் தகவலை நூல் பிடித்தாற்போல் சென்று புலனாய்வு மேற்கொண்டால் பல திடுக்கிட வைக்கும் உண்மைகள் தெரிய வருகின்றன.

தொடர்ந்து மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்குகின்றன.

படத்தின் துவக்கத்திலிருந்து இறுதிவரை விறுவிறுப்பாக செல்லும் அறிவான் படத்தை அருண் பிரசாத் இயக்கியிருக்கிறார்.

யஷ்வந்த் பாலாஜியின் தரமான ஒளிப்பதிவு சஸ்பென்ஸ் திரில்லர் வகை படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

கார்த்திக் எராவின் பின்னணி இசை உயிரோட்டமாக அமைந்து படத்தை இன்னொரு தளத்துக்கு உயர்த்த உதவுகிறது.

வன்முறை மற்றும் பலாத்காரத்துக்கு எதிராக பெண்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலவச தொலைபேசி எண்ணை கொடுத்து, அதன் பயன்பாட்டை விவரித்து,
பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் படத்தை முடித்திருப்பது கவனத்தை ஈர்க்கிறது.

இதற்காகவே இயக்குனரை தாராளமாகப் பாராட்டலாம்.

சஸ்பென்ஸ் திரில்லர் வகை படங்களை ரசிப்பவர்களுக்கு இந்த படம் நல்லதொரு விருந்தாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

மதிப்பெண் 3.25/5