Thursday, September 24

நம்பிக்கை தரும் நாயகன் அர்ஜுன் தாஸ்

Loading

நம்பிக்கை தரும் நாயகன் அர்ஜுன் தாஸ்

தென்னகத் திரை வானில் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் அர்ஜுன் தாஸ் ஒரு பன்முக திறமைசாலி என்றே சொல்லலாம்.

தனித்தன்மை மிக்க இவரது ‘பேஸ் வாய்ஸ்’ வேறெந்த இந்திய நடிகருக்கும் இல்லை என்று தாராளமாக சொல்லலாம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கைதி’ படத்தில் அன்பு என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம், ரசிகர்களின் பேரன்பை பெற்றவர் அர்ஜுன் தாஸ்.

இதுவரை இவனர் நடித்த படங்களின் பட்டியல் இரு கை விரல்களிலேயே அடங்கிவிடும் என்றாலும், நிஜத்துக்கு நெருக்கமாக நின்று யதார்த்த நடிப்பை வழங்கியதால் ரசிகர்களின் கவனத்தை தன்பால் ஈர்த்திருப்பவர் அர்ஜுன்தாஸ்.

வழக்கமான கதாநாயகனாக அல்லாமல் மொத்த கதையையும் தாங்கிப் பிடிக்கும் கதையின் நாயகனாக நடித்த ‘ரசவாதி’ திரைப்படம் அர்ஜுன் தாஸ் குணச்சித்திர நடிப்புக்கு சான்று.

ஒற்றை வேடத்திலேயே ஓங்கி உயர்ந்து நிற்கும் அர்ஜுன் தாஸ் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் ஏற்றது இரட்டை வேடம் என்றால் கேட்கவா வேண்டும்?

ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் இரட்டை விருந்தாக அல்லவா அப்படம் அமைந்தது?

சமீபத்தில் திரைக்கு வந்த ‘பாம்’ படத்தில் ஜாதியின் பெயரால் மோதிக்கொண்டிருக்கும் மக்களை ஒன்றிணைக்கும் அழுத்தமான வேடத்தில் அற்புதமாக நடித்து பாராட்டுதல்களை பெற்று வருகிறார் அர்ஜுன் தாஸ்.

கழுத்து நரம்புகள் புடைக்க உணர்ச்சிகரமாக காட்சியில் இவர் பேசும் வசனங்கள் ரசிகர்களின் ஆரவாரமான கரவொலிகளை அள்ளுகின்றன.