தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகிலுள்ள இளங்காடு எனது சொந்த ஊர்.சென்னையில் வசித்து வருகிறேன்.திரைப்பட இயக்குனராக பணியாற்றி வருகிறேன்.
2005ல் (7 நொடிகள்) அமெரிக்க நாட்டை சேர்ந்தவரால் இயக்கப்பட்ட soldier boy என்ற திரைப்படமே World Recordல் இடம்பெற்ற உலகின் சிறிய திரைப்படமாக இதுவரை இருந்துவந்தது.
16 வருடங்களுக்குப் பிறகு அச்சாதனையை முறியடித்துள்ளது., நாம் இயக்கிய Be Pretty (5 நொடிகள்) திரைப்படம்
உலகின் சிறிய திரைப்படம் என்ற சாதனையுடன் Noble World Record என்னும் நிறுவனம் விருது மற்றும் சான்றிதழ் எனக்கு வழங்கியுள்ளது.
Mask குறித்து விழிப்புணர்வு தரும் வகையிலும் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளேன்.
சமூகத்தோடு கை கோர்ப்பது ஒரு படைப்பாளியாக எனக்கு இருக்கும் பொறுப்பாக கருதுகிறேன்.
இத்திரைப்படத்தின் Posterஐ மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர் திரு.மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
இத்திரைப்படத்தை வெளியிடக்கோறி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் வேண்டுகோள் கடிதம் தரப்பட்டுள்ளது
தஞ்சை மக்களின் வாழ்வியலையும், விவசாய முறையையும், வட்டார மொழியையும் வெள்ளித்திரையில் பதிவிசெய்யும் வகையில் படப்பிடிப்பு சில மாதங்களில் தொடங்கவுள்ளது.
MCA முடித்து 2012வரை மென்பொருளில் பணியாற்றினேன்.பிறகு பணியிலிருந்து விலகி 2012 டிசம்பரில் விவசாயிகளின் வாழ்வியலை மையமாக கொண்டு தாகபூமி என்ற குறும்படத்தை இயக்கினேன்.
பசுமை போராளி நம்மாழ்வார் உறவு முறையில் எனது தாத்தா என்பதனால்., இக்குறும்படத்தை தாத்தா வெளியிட்டார்கள்.
அய்யா இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் நடுவராக பொறுப்பேற்ற மாநில அளவிலான நடைபெற்ற குறும்பட போட்டியில் தாகபூமி இரண்டாம் பரிசை வென்றது
ஆனந்த விகடன் இதழில் தாகபூமியை சிறப்பாக விமர்சனம் செய்து star ratingல் 5க்கு 4 ஸ்டார் அளித்திருந்தார்கள்.
நார்வே நாட்டில் நடைபெற்ற நார்வே தமிழ் திரைப்பட விழாவில் தாகபூமி தேர்ந்தெடுக்கப்பட்டு, திரையிடப்பட்டது.
கூடுதலாக தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் தாகபூமியை மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்த்தது.
India Book of Records எனும் நிறுவனம் தாகபூமி குறும்படத்தை இயக்கியதற்காக சமீபத்தில் விருது வழங்கியது.
தொடர்ந்து மெய்ஞானம், பலே போன்ற குறும்படங்களை இயக்கினேன்.
நன்றி.
-அன்புராஜசேகர்