Blog
திரில்லர் கலந்த காதல் கதை எம்பிரான்
இயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்!
இப்படத்தை பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தின் மூன்று பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். யாகாவாராயினும் நா காக்க படத்திற்கு பின்னணி இசையமைத்த 'பிரசன் பாலா' இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவு புகழேந்தி, படத்தொகுப்பு மனோஜ் ,கலை மாயவன், சண்டை பயிற்சி டான் அசோக், பாடல்கள் கபிலன் வைரமுத்து,
நடனம் தீனா மற்றும் விஜி.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கிருஷ்ண பாண்டி. இவர் தடையற தாக்க, மீகாமன் போன்ற வெற்றி படங்களை தந்த மகிழ்திரு மேனியிடம் உதவியாளராக இருந்தவர்.
இப்படத்தின் நாயகன் ரேஜித். இவர் விக்ரமன் இயக்கிய நினைத்தது யாரோ படத்தில் நடித்தவர். நாயகியாக பெங்களூரைச் சேர்ந்த ராதிகா பிரித்தி நடிக்கிறார். இவர்களோடு சேர்ந்து மௌலி, கல்யாணி ...
இசைஞானி இளையராஜா இசையில் கு.கணேசன் இயக்கும் 18.05.2009
குருநாத் சலசானி தயாரித்திருக்கும் படம் “ 18.05.2009 “
சுபாஷ் சந்திர போஸ், பிரபாகரன். நாகிநீடு, தான்யா, ஜேக்கப், ஸ்ரீராம், பாலாஜி ஆகியோர் நடிக்கிறார்கள்.
எழுத்து – இயக்கம்: கு.கணேசன் ( இவர் ஏற்கனவே தமிழ் ஈழம் பற்றி “ போர்க்களத்தில் ஒரு பூ “ என்ற படத்தை இயக்கியவர் )
இசை: இசைஞானி இளையராஜா
ஒளிப்பதிவு: பார்த்திபன், சுப்பிரமணியன்
கலை இயக்கம்: பிரவீண்
பாடல்கள்: மு.மேத்தா, பழனிபாரதி, நா.முத்துக்குமார்
ஒலிக்கலவை: யுவராஜ்
மக்கள் தொடர்பு: மௌனம் ரவி
தயாரிப்பு: குருநாத் சலசானி
கதை...
தமிழின வரலாற்றில் மறக்க முடியாத நாள்
2008ம் ஆண்டு இலங்கை அரசால் திட்டமிட்டுத் தொடங்கப்பட்ட தமிழினப் படுகொலை, 18.05.2009 வரை நீடித்தது. சுமார் ஆறு மாதங்களில் ஒன்றரை லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டதையும், கடைசி நாளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் உள்பட 40,000 தமிழ்...
இரும்புத்திரை டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு முகத்தை காட்டும் படம் – இயக்குநர் P.S.மித்ரன்
விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ இரும்புத்திரை “ இதில் விஷால் – சமந்தா அக்கினேனி – அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் பாதி திரையிடல் இன்று நடைபெற்றது இதில் படத்தின் இயக்குநர் மித்ரன் , லைகா குழுமத்தை சேர்ந்த கருணா , அயுப் கான் , எடிட்டர் ரூபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஹாலிவுடில் திரையிடுவது போல இந்தியாவிலேயே முதன் முறையாக விஷாலின் “ இரும்புத்திரை “ திரைப்படத்தின் முதல் பாதி மட்டும் செய்தியாளர்களுக்கு திரையிடப்பட்டது. இந்த திரையிடலில் இயக்குநர் மித்ரன் பேசியது :- எப்போதும் புதுமையை விரும்புபவர் விஷால் சார். அவர் தன்னுடைய ஏதாவது ஒரு படத்தின் முதல் பாதியை செய்தியாளர்களுக்கு திரையிட்டு கருத்து கேட்க வேண்டும் என்று நினைத்துவந்தார். அது இரும்புத்திரை படத்துக்கு நடந்துள்ளது காரணம் இரும்புத்திரைக்கு படத்துக்கு சரியாக இருக்கும் என்பதால் தான். இரும்புத்திர...







