Sunday, November 29

Blog

இந்தியாவின் முதல் நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல் படம் பிரியதர்ஷன் இயக்கிய ‘சில சமயங்களில்’

இந்தியாவின் முதல் நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல் படம் பிரியதர்ஷன் இயக்கிய ‘சில சமயங்களில்’

News
விமர்சகர்களால் பாராட்டப்படும் படங்களை கொடுக்கும் பிரியதர்ஷன், தனது பாணியில் நல்ல கலைப்படங்களை செதுக்குவதில் ஒரு முன்னோடி. தனித்துவமான கதை சொல்லலில் வித்தகரான பிரியதர்ஷன், அனைத்து விதமான கதைகளிலும் அவர் பெற்ற வெற்றி, அவருக்கு இந்திய சினிமாவில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இதுபோன்ற வெற்றிகளால் உந்தப்பட்ட அவரது திரை பயண மகுடத்தில் இன்னொரு வைரக்கல் சேர்ந்திருக்கிறது. ஆம், அவர் இயக்கிய 'சில சமயங்களில்' இந்தியாவின் முதல் நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல் படமாக வெளியாகிறது. டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவற்றில் உலகம் முழுக்க முதன்மையானதாக தன்னை நிரூபித்துள்ளது நெட்ஃபிளிக்ஸ். இந்தியாவின் முன்னணி கலைஞர்கள் டிஜிட்டல் நிறுவனங்களோடு கைகோர்த்திருக்க, பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் சில சமயங்களில், உலகம் முழுக்க சென்று சேரும் விதமான கதையை கொண்டிருப்பதால் ...
தமிழாற்றுப்படை வரிசையில் தொல்காப்பியர் கவிஞர் வைரமுத்து அரங்கேற்றுகிறார்

தமிழாற்றுப்படை வரிசையில் தொல்காப்பியர் கவிஞர் வைரமுத்து அரங்கேற்றுகிறார்

News
‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் ஒவ்வொரு கட்டுரையையும் அவரே வாசித்து அரங்கேற்றி வருகிறார். இதுவரை திருவள்ளுவர் - இளங்கோவடிகள் - கம்பர் - அப்பர் –  திருமூலர் - ஆண்டாள் –– வள்ளலார் – மறைமலையடிகள் - உ.வே.சாமிநாதையர் - பாரதியார் – பாரதிதாசன் - புதுமைப்பித்தன் – கலைஞர் - கண்ணதாசன் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியவர்களைப் பற்றிய கட்டுரைகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.  அந்த வரிசையில் இப்போது தொல்காப்பியர் பற்றிய ஆய்வுக் கட்டுரையை எழுதியிருக்கிறார். இது இவரது 16ஆவது கட்டுரையாகும். தமிழ் நூல்களில் மிகப் பழைமையானதும், தமிழ் மொழியின் ஆதி இலக்கணமாக அறியப்படுவதும் தொல்காப்பியம்தான் என்றும், இன்றுவரைக்குமான தமிழ்மொழி தொல்காப்பியத்தின் மீதுதான் ...
எஸ்.பி. தவறான தகவல்அளிக்கிறார் கருணாஸ் எம்.எல்.ஏ.

எஸ்.பி. தவறான தகவல்அளிக்கிறார் கருணாஸ் எம்.எல்.ஏ.

News
இராமநாதபுரம், மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிபவர் ஓம் பிரகாஷ்மீனா. அம்மா அவர்களின் ஆசியுடன் திருவாடனை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவுடன், தென்மாவட்டங்களில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் (சாதி ரீதியாக) இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்ததால் துப்பாக்கி ஏந்திய போலீசார் (PSO) எனக்கு பாதுகாப்பு அளிக்க அம்மா உத்தரவிட்டார். அதன் பிறகு தொகுதிக்குச் செல்லும் போது ஒரு ஜீப்பில் உதவி ஆய்வாளர் தலைமையில், துப்பாக்கி ஏந்திய 5 போலீசார் அம்மா உத்தரவின் பேரில் எனக்கு பாதுகாப்பு அளித்தனர். இதனை அச்சமயம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த உயர் திரு. மணிவண்ணன் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வந்தார். அவர் மாறுதலுக்குப் பிறகு அமைச்சர் மணிகண்டன் சிபாரிசில் வந்த ஓம் பிரகாஷ் மீனா, எனக்கு பாதுகாப்பு அளிக்க மறுத்தார். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நடராஜன், உளவுத்துறை ஆய்வாளர் மாரியப்பன், ...
ஒரே நாள் இரவில் நடக்கும் கதை ‘விடியாத இரவொன்று வேண்டும்’

ஒரே நாள் இரவில் நடக்கும் கதை ‘விடியாத இரவொன்று வேண்டும்’

News
பேட்லர்ஸ் சினிமா சார்பாக ‘யானை மேல் குதிரை சவாரி’ படத்தை தயாரித்து இயக்கிய இயக்குநர் கருப்பையா முருகன், தனது அடுத்த படத்துக்கு ‘விடியாத இரவொன்று வேண்டும்’ என்று பெயர் வைத்திருக்கிறார். ‘பிடிச்சிருக்கு’, ‘முருகா’, ‘கோழி கூவுது’ படங்களில் நடித்த அசோக் கதாநாயகனாக நடிக்க, முன்னாள் கதாநாயகி ஆம்னியின் தம்பி மகள்  ஹிரித்திகா  ஸ்ரீனிவாஸ் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் ‘வழக்கு எண்’ முத்துராமன், ஈ.ராமதாஸ், சௌமியா, முத்துக்காளை, பிரபாகரன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இசை – V.கோகுலகிருஷ்ணா, ஒளிப்பதிவு – வினோத் காந்தி, படத் தொகுப்பு – ப்ரீத்தி மோகன், இணை தயாரிப்பு – R.S. பிரேமலதா, ரேகா கணேஷ். படம் பற்றிப் பேசிய இயக்குநர் கருப்பையா முருகன், “எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படும்போது விபத்தில் சிக்கியவர்களை நாம் காப்பாற்றுகிறோமா அல்லது பிரச்சனைகள் வருமென்று ஒதுங்கி போகிறோமா என்பதை பற்றி த்ர...
வைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட் ரியா நடிக்கும் “ கா “

வைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட் ரியா நடிக்கும் “ கா “

News
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது  “ பொட்டு “ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். பொட்டு படம் மே மாதம் வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ கா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். உலக மக்களுக்கான படம் இது. இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது. கா என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளதால் “ கா “ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கி...
CLOSE
CLOSE