Blog
செயல் -குறும்படம்
நாம் செய்யும் செயல்களை திருப்பி செய்வதில் குழந்தைகளை அடித்துக் கொள்ள யாராலும் முடியாது. இதை எப்படி கற்றுக் கொள்கின்றனர் என்பதை யாராலும் அறிந்து கொள்ள முடியாது. வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் செய்யும் காரியங்களை மிக உன்னிப்பாக கவனிக்கும் சிறுவர்கள் நாம் இருக்கும் போதும் நாம் இல்லாத போதும் அதை செய்து பார்க்கின்றனர். போனில் பேசுவது, முகத்தில் பவுடர் பூசுவது போன்ற செயல்களை நம்மை பார்த்து கற்றுக் கொண்டு அதை திரும்பச் செய்கின்றனர்.
https://www.youtube.com/watch?v=ziEUf_YWnC4&feature=youtu.be...
‘என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா’
ராமலட்சுமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் நாகபாபு தயாரித்துள்ள படம் 'என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா'. அல்லு அர்ஜூன், அனு இம்மானுவேல், அர்ஜூன், சரத்குமார், நதியா, பொமன் இரானி நடித்திருக்கும் இந்த படம் வரும் மே 4 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. தமிழ்நாடு முழுக்க சக்தி ஃபிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
ஆந்திராவில் ஞானவேல்ராஜா ஒரு பிராண்ட். அவர் வெளியிட்ட அனைத்து படங்களுமே வெற்றிப்படங்கள் தான். அல்லு அர்ஜூன் நடிக்கும் அடுத்த படத்தை ஞானவேல் தான் தயாரிக்கிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு ராகவா லாரன்ஸ் நடித்த லட்சியம் படத்துக்கு பிறகு இந்த படத்தை . இந்த படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் எடுக்க ஆசைப்பட்டோம். சில காரணங்களால் டப் செய்து ம...
கோடையை குளிரவைக்க சென்னையை தேடிவரும் வாட்டர் வேர்ல்டு…!
சென்னையை பொறுத்தவரை கோடை விடுமுறை என்றாலே தீவுத்திடலில் பிரமாண்டமாக நடைபெறும் இந்திய சுற்றுலா பொருட்காட்சி தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். அந்தவகையில் சென்னையின் இந்த வருட கோடை விடுமுறை கொண்டாட்டமாக அமைய இருப்பது, ஏப்-27 ல் தொடங்கி ஜூன்-4 ஆம் தேதிவரை நடைபெற இருக்கும் 44வது இந்திய சுற்றுலா பொருட்காட்சியில் அமைந்திருக்கும் வாட்டர் வேர்ல்டு (Water World ) ஆகத்தான் இருக்கும்.
வழக்கமான ஜெயன்ட் வீல் மற்றும் அது சார்ந்த கொண்டாட்டங்கள் மட்டுமல்லாமல் இந்தமுறை, வாடிக்கையாளர்களுக்கு சலுகை தரும் விஷயமாக சத்யா எலெக்ட்ரானிக்ஸின் மின் சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் மேளா நடைபெற இருக்கிறது.
இந்தமுறை கோடையின் தீமாக நீர் உலகம் (water world) இருக்கும். ஆகையால் வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக ராட்சத நீர்வீழ்ச்சி இருக்கும் என்பதில் ஐயமில்லை.. நிஜ நீர்வீ...
விஜய்சேதுபதி – அஞ்சலி நடிக்கும் அதிரடி ஆக்ஷன் படம்
பாகுபலி 2 படத்தை வெளியிட்ட எஸ்.என்.ராஜராஜனின் கே புரொடக்ஷ்ன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட்
பட நிறுவனங்கள் இணைந்து தற்போது “ பியார் பிரேமா காதல் “ படத்தை தயாரித்துக்கொண்டு இருகிறார்கள்.
இதை தொடர்ந்து விஜய்சேதுபதி, அஞ்சலி நடிக்க “ பண்ணையாரும் பத்மினியும் “ “ சேதுபதி “ வெற்றிப் படங்களை இயக்கிய S.U.அருண்குமார் இயக்கத்தில் புதிய படத்தை தயாரிக்கிறார்கள். விஜய்சேதுபதி நடிக்கும் இந்த படம் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கப் பட உள்ளது.
இந்த படத்தில் மாறுபட்ட வில்லனாக லிங்கா நடிக்கிறார் மற்றும் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் விவேக் பிரசன்னா நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இயக்குனர் S.U.அருண்குமார் நாயகன் விஜய் சேதுபதி இருவரும் இணையும் மூன்றாவது படம் என்பது குறிபிடத்தக்கது.
இன்னும் பெயரிடப் படாத இந்த படத்திற்க...
ஹாரர் த்ரில்லராக மிரட்டவரும் ‘ஐல’..!
சினிமாவை பொறுத்தவரை என்றுமே வரவேற்பு குறையாதவை என்றால் அது ஹாரர் படங்களாகத்தான் இருக்கும்.. மினிமம் கியாரண்டி வசூலையும் வெற்றியையும் ஹாரர் படங்கள் பெற்றுத்தருவதால் அறிமுக இயக்குனர்கள் கூட ஹாரர் பக்கமே கவனத்தை திருப்புகின்றனர்..
அந்தவகையில் அறிமுக இயக்குனர் ஆர்.வி.சுரேஷ் இயக்கவுள்ள ஹாரர் த்ரில்லர் படம் ‘ஐல’ என்கிற ஐஸ்வர்ய லட்சுமி..! .. ரியங்கா பிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் தம்பி உன்னி கிருஷ்ணன் மற்றும் ஜே.ரவீந்திரன் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரு. தம்பி உன்னி கிருஷ்ணன் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர், ஜே.ரவீந்திரன் சுவிஸ் நாட்டு குடியுரிமை பெற்றவர்.
திரு. தம்பி உன்னி கிருஷ்ணன் ஏற்கனவே மம்மூட்டி , ரேவதி, சிவகுமார் மற்றும் முன்னனி நடிகர்களை வைத்து தமிழ் , மலையாள படக்களை தயாரித்தவர்.
தற்சமயம் இருவரும் பிரான்ஸ், சுவிஸ் & இந்தியாவில் Res...






