Blog
ஏப்ரல் 20 முதல் திரைபடங்களின் படபிடிப்பும் , வெளியீடும் ஆரம்பம் – விஷால்
நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தைக்கு பின் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது . இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் , பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு , கௌரவ செயலாளர் கதிரேசன் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்களிடம் விஷால் பேசியது :- தயாரிப்பாளர் சங்க வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு க் கொடுத்த FEFSI தொழிலாளர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். தமிழ் திரைத்துறை ஜூன் மாதம் முதல் முழுமையாக கணினிமயமக்கபடும் இனி முழு வெளிப்படைத்தன்மையோடு இருக்கும். தயாரிப்பாளர் சங்கமே டிக்கெட் விற்பனை இணையதளத்தை தொடங்கும். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகப்பட்ச டிக்கெட் விலைக்கு மேல் எங்கும் விற்கப்படாது. அது கண்காணிக்கப்படும். அதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது . தமிழ் சினிமா வெளியீட்டை முறைப்படுத்த ஒரு க...
சீயான் விக்ரம் பிறந்த நாள் விழா
ஏழை எளியவர்களுக்கு நலதிட்ட உதவி வழங்கிய தலைமை ரசிகர் மன்றம்.
சீயான் என்று ரசிகர்களால் அன்புடன் அழைப்படுபவர் நடிகர் விக்ரம். அவரின் 53 ஆவ து பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விக்ரம் தலைமை ரசிகர் மன்றத்தின் சார்பாக ஏழைகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் மற்றும் அதன் நிர்வாக தயாரிப்பாளர் ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் ஏழை எளியவர்களுக்கு அயர்ன் பாக்ஸ், தையல் இயந்திரம், முச்சக்கர வாகனங்கள் என நலத்திட்ட உதவிகளும், கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையும் வழங்கினர். இதனை தயாரிப்பாளர் மதன் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் ஜேம்ஸ் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை விக்ரம் தலைமை ரசிகர் மன்றம் செய்திருந்தது...
ஜோதிகா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை பார்க்க வேண்டுமா…
துமாரி சுலு என்று இந்தியில் வெற்றிகரமாக ஓடியப் படத்தை தமிழில் இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். ஜோதிகா - விதார்த் இன்னும் பலர் நடிக்கின்றனர். நீங்கள் அனைவரும் படப்பிடிப்புத் தளத்துக்கு வரவேற்கப்படுகிறீர்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்.. படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்பதை யூகித்துச் சொல்ல வேண்டும்.
அதற்கான் க்ளூ பின்வருமாறு:
1. தலைப்பு இரு வார்த்தைகள் கொண்டது.
2. ஒரு வார்த்தை ராதாமோகன் மற்றும் ஜோதிகாவுடன் தொடர்புடையது.
3. மற்றுமொரு வார்த்தை எஃப்.எம்., ரேடியோவின் பெயர்.
இப்போது விளையாட்டைத் தொடங்குங்கள். எத்தனை முறை வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
சரியான பதில்களை யூகித்துச் சொல்லும் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு படப்பிடிப்பு தளத்துக்கு அழைக்கப்படுவார்கள். ஒருநாள் முழுவதும் படப்பிடிப்பு தளத்தில் நீங்கள் இருக்கலாம். மேலும், நடிகர், நடிகை மற்றும் படக்குழுவின...
அஜித் புகழ் பாடும் பாடலை வெளியிடுகிறார் யுவன் சங்கர்ராஜா
அஜித் ரசிகனாக R.K.சுரேஷ் நடிக்க K.C.பிரபாத் தயாரிக்கும் "பில்லாபாண்டி " திரைப்படம் இறுதி கட்டப்பணிகள் முடிவடைந்து அஜித் பிறந்தநாளான மே -1 அன்று அஜித் புகழ் பாடும் விதமாக " எங்க குல தங்கம் , எங்க தல சிங்கம் " என்ற பாடல் single track- ஐ திரு. யுவன் சங்கர் ராஜா அவர்கள் வெளியிடுகிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் , R.K.சுரேஷ் , சாந்தினி , இந்துஜா , தம்பிராமையா , மாரிமுத்து , அமுதவானன் , மாஸ்டர் மிதுன் சக்கரவர்த்தி , மாஸ்டர் தர்மேஷ் போன்றோர் நடித்துள்ளனர் . முக்கிய கதாபாத்திரத்தில் K.C. பிரபாத் நடித்திருக்கிறார் . இத்திரைப்படம் தல ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ளது .
தொழில் நுட்ப கலைஞர்கள் : எடிட்டிங் - ராஜா முகமது , ஒளிப்பதிவு - ஜீவன் , இசை - இளையவன் , எழுத்து - எம் .எம்.எஸ். மூர்த்தி , இயக்கம் - ராஜ் சேதுபதி .
இத்திரைப்படத்தை J.K.Film Productions...
சாஹோ திரைப்படத்திற்காக உருவான மாபெரும் கூட்டணி
இந்தியாவின் வடமாநிலங்களில் பாகுபலி இரண்டாம் பாகத்தின் (தி கண்க்ளூஷன்) மிகப் பிரம்மாண்டமான வெற்றி, பிரபாஸின் அடுத்த திரைப்படமான சாஹோவிற்கு மிக பிரம்மாண்டமான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் தயாரிப்பாளரான பூஷன் குமார், சாஹோ திரைப்படத்தை வட இந்திய மாநிலங்களில் வெளியிடும் நோக்கில் தென்னகத்தின் முன்னனி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸுடன் இணைகிறார்.
இது தொடர்பாக பூஷன் குமாரின் TT-சீரீஸ் நிறுவனம், வட மாநிலங்களில் சாஹோ திரைப்படத்தை இந்தி ரசிகர்களுக்காக வெளியிட UV கிரியேஷன்ஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
பிரபாஸின் அடுத்த திரைபடத்திற்கான இந்த ஒப்பந்தம், இந்திய திரை உலகில் ஒரு மாபெரும் திருப்புமுனை ஒப்பந்தமாக பார்க்கப்படுகிறது.
முதல்முறையாக சாஹோ திரைப்படத்திற்காக, இரண்டு மாபெரும் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து, கூட்டாக ஒரு அதிநவீன அதிரடி திரைப்படத்தை ரசிகர்களுக்காக வழங்க முடிவ...
பூர்ணா நடிக்கும் பிரமாண்ட பேய் படம் “ குந்தி “
அன்னை திரைக்களம் சார்பில் மே.கோ.உலகேசு குமார்,
மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இணைந்து
தயாரிக்க SFF TV வழங்கும் படம் “ குந்தி “
இந்த படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பூர்ணா ஜோடியாக அபினவ் நடித்திருக்கிறார். ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அபிமன்யூ சிங் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் பேபி தன்வி, பேபி கிருத்திகா இருவரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பலர் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - கர்ணா
இசை - யஜமன்யா
எடிட்டிங் - SFF TV காளிராஜ், சந்திரபிரகாஷ்
பாடல்கள் - வலங்கைமான், நூர்தின், முருகானந்தம், வள்ளுவர்தேவன்
இணை தயாரிப்பு - மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம்
இயக்கம் ...
மண் சார்ந்த படைப்பாக உருவான தொரட்டி
மண்ணும் மரபும் சார்ந்த கதைகளுக்கு எப்போதும் மவுசு அதிகம் தான். அப்படிபட்ட உண்மை கதைகள் திரைப்படம் ஆகும் போது வெற்றிகள் இலகுவாகும். அப்படிப்பட்ட ஓரு உண்மை சம்பவம் தொரட்டி எனும் தலைப்பில் திரைப்படம் ஆகிறது. 1980 காலகட்டத்தில் தென் மாவட்டத்தில் நடந்த ஓரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தொரட்டி. கிடை போட்டு வெட்ட வெளிகளில் பொழைப்பு நடத்தும் கீதாரி குடும்பங்களின் வாழ்வியலை கண் முன் நிறுத்தும் திரைப்படம் தான் தொரட்டி. ராமநாதபுரத்தில் இருந்து கிடை போட்டு பொழைப்பு நடத்த வரும் ஓரு கீதாரி குடும்பத்தின் வாழ்க்கையில் வெந்த சோறு சுட்ட கறி பட்ட சாரம் இவற்றிக்காக எந்த பழி பாவத்தையும் செய்ய துடிக்கும் காவாலி கூட்டம் ஏற்படுத்தும் துடி துடிக்கும் நிகழ்வுகள் தான் தொரட்டி. இதில் மாயன் எனும் கதாபாத்திரத்தில் கதை நாயகனாக வாழ்ந்திருக்கிறார் ஷமன் மித்ரூ... இவருக்கு இணையாக செம்பொன்ன...



