Sunday, November 29

Blog

காவல்துறைக்கும் அமலாபாலுக்கும் நடிகர் சங்கம் பாராட்டு!

காவல்துறைக்கும் அமலாபாலுக்கும் நடிகர் சங்கம் பாராட்டு!

News
சமீபத்தில் பிரபல நடிகை அமலாபால் தனக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். மேலும்  காவல்துறையிடம் புகாரும்அளித்தார். இதனை தொடர்ந்து சென்னை மாம்பலம் R1 காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் நேரடியாக விசாரித்து அந்த நபரை கைது செய்தது. காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு, பல நடிகைகள்  தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லை பற்றிவெளியில்          சொல்ல பயந்தாலும்                                                         நடிகை            அமலாபால் தைரியமாக புகார் செய்ததற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது. நன்றி   தங்கள் அன்புள்ள விஷால் (பொதுச் செயலாளர்) தென்னிந்திய நடிகர் சங்கம்...
தென்னிந்திய நடிகர் சங்கம் – இரங்கல் செய்தி

தென்னிந்திய நடிகர் சங்கம் – இரங்கல் செய்தி

News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நியமன செயற்குழு உறுப்பினர் காஜா மொய்தீன் திடீர் மரணம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், நியமன செயற்குழு உறுப்பினருமான காஜா மொய்தீன் (65) இன்று சனிக்கிழமை காலை விபத்தில் காலமானார். அவரது அகால மரணத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.  "தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், நியமன செயற்குழு உறுப்பினருமான காஜா மொய்தீன் (65) இன்று காலை சென்னையில் நடந்த விபத்தில் அகால மரணம் அடைந்ததை அறிந்து மிகவும் வேதனை அடைக்கிறோம். நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வந்த அவரது இழப்பு நடிகர் சங்கத்திற்கு ஈடுகட்ட இயலாத மாபெரும் இழப்பாகும், அன்னாரது மறைவால் மீளா துயரத்தில் வாடும் அவருடைய குடும்பத்தினர் துக்கத்தில் பங்குகொண்டு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு...
இசை வெளியீட்டு விழாவில் 100 நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிதியுதவி!

இசை வெளியீட்டு விழாவில் 100 நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிதியுதவி!

News
சிவா மனசில புஷ்பா... விரைவில் வரவிருக்கும் அரசியல் பரபரப்பு படம் இது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் புதன் கிழமை சென்னையில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட தமிழ் திரையுலகின் அத்தனை முன்னணி பிரபலங்களையும் பங்கேற்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் படத்தின் இயக்குநர் - ஹீரோ - தயாரிப்பாளர் வாராகி. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சம், நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள 100 நலிந்த கலைஞர்களுக்கு அந்த மேடையிலேயே கணிசமான நிதி உதவி வழங்குவதுதான். பெரிய தயாரிப்பாளர்கள், பெரிய பேனர் படங்களின் நிகழ்ச்சிகளில் கூட செய்யாத மிகப் பெரிய நிதி உதவி இது. தொகை எவ்வளவு என்பதை ஒரு சஸ்பென்சாக வைத்திருக்கிறார் வாராகி. நிதி உதவியுடன் அவர்கள் அனைவருக்கும் பிரமாதமான அசைவ விருந்து அளிக்கவும் தயாரிப்பாளர் வாராகி திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். பிப்ரவரி 7-ம் தேதி புதன்கிழமை ...
நா. முத்துக்குமார் கடைசியாக பாடல் எழுதிய ‘துலாம்’ படம்

நா. முத்துக்குமார் கடைசியாக பாடல் எழுதிய ‘துலாம்’ படம்

News
'வி மூவிஸ்' சார்பில் விஜய் விக்காஷ் தயாரிப்பில் ராஜ நாகஜோதி இயக்கியிருக்கும் படம் 'துலாம்' . இப்படம் போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர்களின் வாழ்வியலையும்,  மனச்சாட்சி உள்ள மனிதர்கள் இன்னும் நிறையபேர் உள்ளார்கள் என்பதையும் விவரிக்கும் படம் தான் இந்த துலாம் . இப்படத்தில் நாயகனாக புதுமுகம் நிவாத் நடிக்க நாயகியாக டெப்லினா ஜாக்சி நடிக்கிறார்கள் .  இவர்களுடன்  முக்கிய கதாபாத்திரத்தில் பொன்னம்பலம், மனோபாலா, பாலாசிங் , மோனா பிந்ரே மற்றும் 'ஈரமான ரோஜாவே' புகழ் சிவா ஆகியோர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முழுவதும்  சென்னை, பாண்டிச்சேரி மற்றும் ஊட்டியில்  நடந்து முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுகிறது. இதில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் விஜய் விக்காஷ்  நடிக்கிறார். கானா பாலா ஒரு பாடலை எழுதி பாடி நடித்தும் உள்ளார். இந்த படத்தில் தான் நா. முத்துக்குமார் கடைசியாக பாடல் எழுதியுள்ளார்...
திரைக்கு வரும் திரையரங்கம்

திரைக்கு வரும் திரையரங்கம்

News
டிரான்ஸ் இண்டியா மீடியா சார்பில், ராஜேந்திர M ராஜன் தயாரிப்பில், தனது முதலாவது திரைப்படத்தை ஒரே ஷாட்டில் எடுத்து, கின்னஸ் சாதனை புரிந்த, இயக்குநர் இசாக் இயக்கத்தில், உருவாகி இருக்கும் திரைப்படம் “நாகேஷ் திரையரங்கம்”. ”நெடுஞ்சாலை” ஆரி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட், மாசூம் சங்கர், அதுல்யா, எம்.ஜி.ஆர் லதா, மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு, “பழைய சோறு பச்ச மிளகா” பாடல் புகழ், இசையமைப்பாளர் ”ஸ்ரீ” அவர்கள் இசையமைத்திருக்கிறார். பாடல்களை தாமரை, “மாயநதி” உமாதேவி, முருகன் மந்திரம், வேல்முருகன், மற்றும் ஜெகன் சேட் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் பாடல்கள் பிப்ரவரி 2-&ல் சூரியன் பண்பலையில் வெளியிடப்பட்டது. இசை வெளியீட்டில், ஆரி, ஆஷ்னா சவேரி, மாசூம் சங்கர் அதுல்யா மற்றும் இயக்குநர் இசாக் ஆகியோர் கலந்து கொண்டனர். ”நாகேஷ் திரையரங்கம்” வரும் பிப்ரவரி 16-ல் திரைக்கு வர இருக்கிறது...
CLOSE
CLOSE