Sunday, November 29

Blog

பிப்ரவரி 2 ஆம் தேதி ரிலீசாகும்  ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ‘

பிப்ரவரி 2 ஆம் தேதி ரிலீசாகும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ‘

News
கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் அசத்தலான படங்களை தர நடிகர் விஜய் சேதுபதி தயாராகிக்கொண்டிருக்கின்றார். ஆறுமுக குமார் இயக்கத்தில்  'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ' இந்த ஆண்டின் அவரது முதல் ரிலீசாக  அமையவுள்ளது. இப்படத்தில் கவுதம் கார்த்திக் மற்றொரு கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை '7C's Entertainment Private Limited' நிறுவனமும் 'Amme Narayana Entertainment' நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தில் போஸ்டரும் டீசரும் மிகப்பெரிய ஹிட்டாகி இப்படத்தின் எதிர்பார்ப்பை பலமடங்கு கூட்டியுள்ளது. காயத்ரி மற்றும் நிஹாரிகா ஆகியோர் இப்படத்தின் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் , கோவிந்தராஜின் படத்தொகுப்பில் இப்படம் உருவாகியுள்ளது.  ...
கோலாகலமாகத் தொடங்கிய ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2

கோலாகலமாகத் தொடங்கிய ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2

News
மூவிபஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும் பட போட்டி குறித்த தொடக்கவிழா இன்று சென்னை ஜி ஆர் டி கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது.   இந்த விழாவில் முன்னணி இயக்குநர்களான ராம், கார்த்திக் நரேன், நித்திலன், அருண் பிரபு புருஷோத்தமன் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.   இந்த போட்டி குறித்து க்யூப் சினிமா டெக்னாலாஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி அரவிந்த் பேசுகையில்,‘ தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த குறும் பட போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியின் தொடக்கவிழாவிற்கு வருகைத்தந்த அனைத்து இளந் தலைமுறை இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புதிய கதை களம், புதுமையான கதை சொல்லல், திறமையான படைப்பாளிகளை அடையாளம் காணுதல் போன்ற நோக்கங்களைக் கொண்டே இந்த குறும் பட போட்டியை தொடங்கியிருக்கிறோம்.   ...
மலேசியாவில் பரவசமான  தேவிஸ்ரீபிரசாத்

மலேசியாவில் பரவசமான தேவிஸ்ரீபிரசாத்

News
விக்ரம் நடிப்பில் ஹரியின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்திற்காக பணியாற்றிக் கொண்டிருந்த இசையமைப்பாளர் *தேவி ஸ்ரீபிரசாத் வழக்கத்தை விட கூடுதலான மகிழ்ச்சியுடன் வேலை செய்து கொண்டிருந்தார். இது குறித்து அவரிடம் கேட்ட போது, ‘தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய நட்சத்திர கலைவிழாவில் நான் மேடையில் பாட்டுப் பாடிக் கொண்டே நடனமாடினேன். விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்ற என்னுடைய நிகழ்ச்சியை, அனைத்து திரையுலக நட்சத்திரங்களுடன் முன் வரிசையில் அமர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் ரசித்து கேட்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பலரும் எழுந்து நின்று மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர். இது என்னுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. அப்போது நான் மேடையிலிருந்து இறங்கி சூப்பர் ஸ்டார் மற்றும் உலகநாயகனின் பாராட்டிற்கு நன்றி தெரிவித்த போது, அவர்கள் தங...

“தறியுடன்” நாவல் “ சங்கத்தலைவன் “ என்ற பெயரில் திரைப்படமாகிறது

News
தமிழ்ச்சூழலில் சமீபத்தில் வெளியான ஒரு முக்கிய, சமூக அக்கறையுள்ள நாவல் பாரதிநாதனின் “ தறியுடன் “. நாவலாசிரியரின் சொந்த அனுபவங்களின் அடிப்படையில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான சேலம், கோவை, ஈரோடு மாவட்டங்களின் முக்கிய தொழிலான விசைத்தறித்தொழில் மற்றும் அத்தொழிலாளர்களின் பிரச்சனையை ஒரு முற்போக்கு இயக்கத்தின் பின்னணியில் விவரிக்கிறது இந்த நாவல். இந்த நாவலை இயக்குனர் மணிமாறன் இயக்க, சமுத்திரக்கனி, கருணாஸ், அறம் படத்தில் நடித்த சுனுலட்சுமி மற்றும் விஜய் TV தொகுப்பாளினி ரம்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, GRASSROOT FILM COMPANY சார்பில் இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கிறார். இம்மாதம் 22 ந்தேதி இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது....
மு.களஞ்சியம் இயக்கும் “ முந்திரிக்காடு “

மு.களஞ்சியம் இயக்கும் “ முந்திரிக்காடு “

News
தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு                “ முந்திரிக்காடு “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக  கதையின்  முக்கிய  கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான C.மகேந்திரனின் மகன்.   கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன் , பாவாலட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு           -        G.A. சிவசுந்தர் இசை                    -        A.K. பிரியன். ( இவர் A.R.ரகுமானின் இசைப்பள்ளி மாணவர் 17 வயது கொண்ட இளைஞர் ) பாடல்கள்                       -        கவிபாஸ்கர்  /     எடிட்டிங்         -          எல்.வி.கே.தாஸ் கலை                    -        மயில்கிருஷ்ணன்  /    ஸ்டன்ட்   ...
மன்சூரலிகானின்   “ கடமான்பாறை “

மன்சூரலிகானின் “ கடமான்பாறை “

News
      பிரபு நடித்த வேலை கிடைச்சுருச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார்.                                                                          அடுத்ததாக அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “ கடமான்பாறை “ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூர்ரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார்.                                                                                                                       கதாநாயகியாக அனுராகவி நட...
CLOSE
CLOSE