Sunday, November 29

Blog

திகிலான ரேடியோ ரூமில் நடிகர் சத்யராஜ் !!!

திகிலான ரேடியோ ரூமில் நடிகர் சத்யராஜ் !!!

News
தென்னிந்திய சினிமாவின் ஜாம்பவான்களில்  ஒருவரான நடிகர் சத்யராஜ் எந்த ஒரு கதாபாத்திரத்திலும் அசத்தக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்ததே. 'பாகுபலி' படத்தில் 'கட்டப்பா' கதாபாத்திரத்தின் மூலம் இந்தியா முழுவதும் பெரும் ரசிகர் கூட்டத்தை ஈர்த்தவர் சத்யராஜ். அவர் தற்பொழுது ஒரு முழு நீள திகில் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார். இந்த படத்தை 'கள்ளப்படம்' புகழ் வேல் இயக்கவுள்ளார். இது குறித்து இயக்குனர் வேல் பேசுகையில் , ''பொருத்தமான நடிகர்கள் தேர்வு மிக முக்கியம் என்பதை நம்புபவன் நான். சத்யராஜ் சார் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டவுடனே எனது பாதிக்கும் மேற்பட்ட வேலை முடிந்ததாக உணர்ந்தேன். இந்த கதாபாத்திரத்திற்கு அவரை விட பொருத்தமான நடிகர் யாரும் இல்லை. ஒரு FM ரேடியோ ஸ்டேஷனை மையமாக கொண்ட சூப்பர் நாச்சுரல் திரில்லர் தான் இந்த படம். ஒரு ரேடியோ ஸ்டேஷனில் ஒரு குறிப்பிட்ட இரவில் நடக...
“கடைக்குட்டி சிங்கம் ” படத்தின் முதல் பார்வை

“கடைக்குட்டி சிங்கம் ” படத்தின் முதல் பார்வை

News
சூர்யாவின் 2D Entertainment நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் பான்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் "கடைக்குட்டி சிங்கம் " படத்தின் முதல் பார்வை நேற்று  வெளிவந்துள்ளது.  தமிழர் திருநாள் தை பொங்கல் தினத்தை முன்னிட்டு "கடைக்குட்டி சிங்கம்" படத்தின் First Look மற்றும் டைட்டில் நேற்று  வெயிடப்பட்டுள்ளது. படத்தின் First Look போஸ்டரை சூர்யா நேற்று மாலை Twitter-ல் வெளியிட்டார். போஸ்டரில் "பயிர் செய்ய விரும்பு "  "விவசாயி " போன்ற வாசகங்களை காணமுடிந்தது. படத்தில் சாயிஷா சாய்கல், சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானு ப்ரியா, மௌனிகா, மற்றும் பலர் நடிக்கிறார்கள். D.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிபதிவு வேல்ராஜ். 2018 கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகவுள்ளது....
சமுத்திரகனி – M.சசிகுமார் கூட்டணி மீண்டும் இணையும்  “நாடோடிகள் 2”

சமுத்திரகனி – M.சசிகுமார் கூட்டணி மீண்டும் இணையும் “நாடோடிகள் 2”

News
2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் M.சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் புரட்சி செய்தது. மீண்டும் சமுத்திரகனி - M.சசிகுமார் வெற்றி கூட்டணி இணையவுள்ளது. நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க சமுத்திரகனி இயக்கத்தில் M.சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் "நாடோடிகள் 2" திரைப்படம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம், கலை இயக்கம் - ஜாக்கி, படத்தொகுப்பு - A.L.ரமேஷ். தமிழர் திருநாளன்று இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட படக்குழுவினர், நாடோடிகள் படத்தை போன்றே நாடோடிகள் 2 படமும் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்படி சிறந்த விருந்தாக ...
CLOSE
CLOSE