எந்த ஒரு படத்திற்கும் தகுந்த சென்சார் சான்றிதழ் என்பது மிக முக்கியமான அங்கீகாரம் ஆகும். உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'நிமிர்' படத்திற்கு 'யு' சான்றிதழ் தரப்பட்டுள்ளது. குடும்பங்களோடு ரசித்து கொண்டாடக்கூடிய படங்களை தருவதற்கு பெயர் போன பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிமிர்' படத்தை சந்தோஷ் T குருவில்லா தயாரித்துள்ளார். 'நிமிர்' படம் அவரது சிறப்பான சினிமா வாழ்க்கையில் மற்றுமொரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஏகாம்பரம் ஒளிப்பதிவில், ஐயப்பன் நாயர் M S படத்தொகுப்பில், சமுத்திரக்கனியின் வசனத்தில், தர்புகா சிவா மற்றும் அஜனீஷ் லோக்நாத் இசையில், மோகன் தாஸின் கலை இயக்கத்தில் 'நிமிர்' படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் M S பாஸ்கர், சமுத்திரக்கனி மற்றும் ஷண்முகராஜ் ஆகியோர் முக்கிய துணை க...
இன்றைய சினிமா உலகில், படத்தின் கதையும் அதன் நடிகர்கள் தேர்வு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது அப்படத்தின் விளம்பர யுக்திகள். விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் , ஆறுமுக குமார் இயக்கத்தில் , '7 C's Entertainment Private Limited' மற்றும் 'Amme Narayana Entertainment' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' இப்படத்தின் தயரிப்பாளர்கள் இதுவரை யாரும் செய்திராத ஒரு புதிய, மாபெரும் விளம்பர யுக்தியை கையாளவுள்ளனர். வரும் ஜனவரி 6 ஆம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திர கிரிக்கெட் விழாவில் பங்கேற்கவுள்ள அணிகளில் ஒன்றான 'Ramnad Rhinos' அணியை இவர்கள் வாங்கியுள்ளனர்.
இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்தின் விளம்பரத்திற்காக ஒரு நட்சத்திர கிரிக்கெட் அணியை வாங்குவது இதுவே முதல் முறை. இந்த 'Ramnad Rhinos' அணியின் கேப...
எத்தனையோ ஆன்ந்தம் இதுவரை வெளியாகி உள்ளது. எல்லா ஊர்க்காரங்களும் அவங்க அவங்க ஊர் புகழ் பாடி ஆன்ந்தம் உருவாக்கி ஆன்ட்ராய்டிலும்ஐபோனிலும் வெளியிடும் காலம் இது. இதோ அந்த ஆன்ந்தம் வகையறா வரிசையில் அதிரடியாக வந்து சேர்ந்திருக்கிறது, கெழவி ஆன்ந்தம்.
மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள மார்த்தாண்ட சக்கரவர்த்தி காமெடி வெப் சீரிஸ்க்காக இந்த கெழவிஆன்ந்தம் உருவாக்கியுள்ளனர். பிரபு ஜெயராம் இயக்கத்தில் இஷான் தேவ் இசையில் இந்த பாடல் உருவாகியுள்ளது. பாடலை முருகன் மந்திரம் மற்றும்ராஜேஷ் எழுதியுள்ளனர். பிரேம்ஜி பாடியுள்ளார். கார்த்திக் கிருஷ்ணா ஒளிப்பதிவில் அருண்கிருஷ்ணா எடிட் செய்துள்ளார்.
மார்த்தாண்ட சக்கரவர்த்தி வெப் சீரிஸ் பார்ப்போரை எல்லாம் இடைவெளி இல்லாமல் சிரிக்க வைத்துக்கொண்டிருக்க, சீரிஸ்-ன் ஸ்பெஷலாக இருக்கும்இந்த கெழவி ஆன்ந்தம் தனியாக வெளியிடப்பட்டுள்ளது. நம்...
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளையும் முன்னிலைப்படுத்தி பாரத் நிதி என்ற அமைப்பு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையுடன் இணைந்து நடத்தும் 'இந்திய பொழுதுபோக்கு துறை: உலகளாவிய தலைமையாக உருவாக்கம்' என்ற தலைப்பில் ஒரு கான்ஃபெரன்ஸை வரும் ஜனவரி 6ஆம் தேதி சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடத்த இருக்கிறது. அது குறித்து விழா அமைப்பாளர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கி பேசினர்.
இந்த மாதிரி ஒரு கான்ஃபெரன்ஸ் முதன்முறையாக தென்னிந்திய சினிமாவில் நடத்தப்பட இருக்கிறது. இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம், மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு மொழி சினிமா துறைக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. பைரஸி மிக முக்கியமான பிரச்சினை. அதேபோல இந்தி சினிமாவுக்கு இருப்பதை போல ஓவர்சீஸ் மார்க்கெட் தென்னிந்திய படங்களுக்கு இல்லை. தமிழ் படங்கள் 25 நா...
எதார்த்த சினிமா வரிசையில் தமிழில் வரும் "சாவி" திரைப்படம், பழகிய திசையில் பயணிக்கும் கதைக்கு புதிய திசைகளைத் திறக்கிறது.
ராசுமதுரவனின் முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் படங்களில் அறிமுகமான பிரகாஷ் சந்திரா இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
அறம் படத்தில் தனது நடிப்பாற்றலால் அனைவரையும் கவர்ந்த சுனுலெட்சுமி துருதுருவென விழிகளுடன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மதுரையில் வாழும் இளைஞன் ஒருவன் வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பங்களே சாவி படத்தின் கதை. சாவி உங்களின் இதயங்களையும் திறக்கக்கூடும். "சாவி" திரைப்படத்தின் இயக்கனர் இரா.சுப்பிரமணியன்.
ஜனவரி 5ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.
Actors
Hero : Prakash Chandra
Heroine : Sunulakshmi
Villan : Rajalingam
Characters : Udhaya banu maheshwaran,
Stills Kumar, Kavingar Nandhalala & Others
Technician List
...
வாஷிங்டன்: நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை அவருடைய அமெரிக்க ரசிகர்கள் வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். ஆயிரம் கரங்கள் கூப்பி அன்புத் தலைவர், மக்கள் தலைவர் ரஜினியை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்
இது குறித்து வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவையின் நிர்வாகிகள் டல்லாஸ் இர.தினகர், சிகாகோ ரஜினி ராஜா, ஃப்ரிஸ்கோ அன்புடன் ரவி, வாஷிங்டன் எஸ்.ஸ்ரீனிவாசன், டல்லாஸ் எம்.ஆனந்த், ஃப்ரிஸ்கோ என்.ராம்குமார், இர்விங் கே.ஆர்.கிருஷ்ணகுமார் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“அன்புத் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ‘அரசியல் வருகை’ பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறோம்.
ஆயிரம் கரங்கள் கூப்பி அன்புத் தலைவர், மக்கள் தலைவர் ரஜினியை வரவேற்கிறோம்.
இனி, தல...
வணக்கம்.
பொது வெளிகளில் என்னுடைய பேச்சிலும் பேட்டியிலும் நான் சொல்லாத செய்திகளைச் சொல்லியதாகப் பதிவிடுவதில் சில அன்பர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அது உண்மை என்று கருதிவிடும் அபாயமும் இருக்கிறது. அதனால் என்னுடைய சுட்டுரைப் பக்கத்திலும் என் பெயரில் வெளிவரும் மெய்யான அறிக்கைகளிலும் தொலைக்காட்சியின் உண்மையான பதிவுகளிலும் நான் சொல்லியது மட்டுமே உண்மை என்று தமிழ் உலகம் நம்பும் என்று நம்புகிறேன்.
உண்மைக்கு வெளியே தங்கள் வாக்கியங்களை என் வாக்கியங்களாக வெளியிட்டுக்கொள்ளும் நண்பர்கள் நகைச்சுவைக்காக அப்படிச் செய்திருக்கக்கூடும். அவர்கள்மீது எனக்கு எந்த வகையிலும் வருத்தம் இல்லை. நகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை அவர்களும் அறிவார்கள்; தமிழர்களும் புரிவார்கள்.
நன்றி....