Nadigar Sangam Urgent Press Release
அமரர் ”அசோக்”அவர்களை ( கம்பெனி புரடக்ஷன்ஸ் அலுவலக நிர்வாகி ) இழந்து ஆற்றமுடியா துயரில் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர் சசிகுமாருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஒரு பக்கம் சர்வதேச விருதுகள்… மறுபக்கம் மனஅழுத்தத்தால் மரணம் நாம் எங்கிருக்கிறோம், எதை நோக்கி பயணிக்கிறோம்? இலக்கு என்ன எதை மறைத்து எதை வெளிப்படுத்துகிறோம்… யாருக்காக படைப்புகள் எது படைப்பு… படைப்பில் பணம் எப்படி பந்தயமாகிறது? பந்தயத்தில் பலன் பெறுவோர் யார் பலியாவதோ யார்…. என இன்னமும் பல கேள்விகள் தொடர் சங்கிலியாய் நீண்டு போகிறது.
மரத்துப் போன நம் மனதை உலுக்கியெழுப்பி மறைந்த அசோக்கின் பொருட்டு, மறைவாகவும் இலைமறை காயாகவும் இருக்கும் வியாபார வழக்கங்களை விட்டொழிப்போம். அசோக்கின் முடிவு திரைப்படத்துறைக்கு கேள்வியை வித்திட்டுச் சென்றிருக்கிறது… திரைப்படத்துறை தன்னை சூயஆய்வு செய்து கொள்வதற்கான ஒரு அபாய...









