Blog
24 PM’ என்ற பெயரில் சினிமா விநியோகத்தில் கால் பதிக்கும் ’24 AM ஸ்டுடியோஸ்’
எந்த ஒரு நிறுவனத்தின் வெற்றியும் அதன் வளர்ச்சியை பொறுத்தே இருக்கும். இந்த வளர்ச்சிக்கு நேரம் காலம் பாராத கவனம், அர்ப்பணிப்பு மற்றும் கடும் உழைப்பு அவசியம். சினிமா தயாரிப்பிலும், அதன் விளம்பர யுக்திகளிலும் எல்லோரையும் திரும்பி பார்க்க செய்து கொண்டிருக்கும் நிறுவனம் தற்பொழுது சினிமா விநியோகத்தில் '24 PM' என்ற பெயரில் தனது காலை பாதிக்கவுள்ளது.
'' சினிமாவின் ஒரு முக்கிய அம்சம் விநியோகம். எந்த வித ஒளிவு மறைவும் இல்லாத எங்களது அணுகுமுறையை கொண்டு சினிமா வினியோகத்தில் கால் பாதிக்கவுள்ளோம். 'Axess Film Factory' நிறுவனத்தின் அருள்நிதி நடிக்கும் ''இரவுக்கு ஆயிரம் கண்கள் '', விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் நடிக்கும் ''ராட்சஸன்'' ஆகிய படங்களோடு எங்கள் விநியோகம் பயணத்தை தொடங்கவுள்ளோம். திரு. டில்லி பாபுவோடு இணைந்து எங்கள் விநியோகத்தை ஆரம்பிப்பதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. சமீபத்தில் 'மரகத நாணய...
“வேலைக்காரன்” படப்பிடிப்பு நிறைவடைந்ததை ஒட்டி ஒரு விழா
நன்றி நவில்தல் என்பது இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக திரை உலகில் , காண கிடைக்காத, கேட்க கிடைக்காத, உணர முடியாத வார்த்தையாகி விட்டது என்பதை பொய்யாக்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
மோகன் ராஜா இயக்கத்தில் , சிவகார்த்திகேயன் நயன்தாரா முதன்முறையாக ஜோடியாக நடிக்கும் "வேலைக்காரன்" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை ஒட்டி அந்த படத்தின் கடை நிலை ஊழியர்கள் உள்ளிட்ட தொழில் நுட்ப கலைஞர்களை கவுரவிக்கும் வகையிலும், நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒரு விழா நடந்தது.
" திரைப்படம் என்பது கலை சம்மந்தப்பட்டது மட்டுமல்ல. மனித உணர்வுகளும், நன்றி உணர்வும் மேலோங்கி இருக்க வேண்டிய துறை கூட. இரவு பகல் பாராமல் இந்த படத்துக்காக உழைத்த இந்த உன்னத நெஞ்சங்களுக்கு நன்றி சொல்ல தருணம் கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி. பணம் என்ற விஷயத்தை தாண்டி எந்த ஒரு கலைஞனுக்கும் கவுரவம் ஒரு முக்கிய விஷயம். நானும் அடிப்படையில் ஒரு தொழிலாளி...
சந்தோஷ் தியாகராஜன் இயக்குநராக அறிமுகமாகும் “சீமத்துரை”.
புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் “சீமத்துரை”.
இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் கதாநாயகன் கீதன், கதாநாயகி வர்ஷா பொல்லம்மா, இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க்ளின் என இந்த விழாவில் கலந்து கொண்ட அத்தனை பேரும் இளையோர்களாக இருந்தாலும் அவர்களை வாழ்த்த தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் மிஷ்கின், வசந்தபாலன், இயக்குனர் நடிகர் மனோபாலா, பொன்வண்ணன், தயாரிப்பாளர்கள் “அம்மா கிரியேஷன்ஸ்” சிவா, தனஞ்செயன், நடிகர்கள் கலையரசன், கதிர் மற்றும் எழுத்தாளர் நடிகர் வேலா ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை பிரம்மாண்டமாக்கினார்கள். குறிப்பாக இந்த படத்தில் நடித்ததோடு நின்று விடாமல், இசை வெளியீட்டு விழாவில் இவ்வளவு பிரபலங்களும் கலந்து கொள்வதற்கு முக்கி...
எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கும் சீமைத்துரை
அடுத்து வெளிவரும் படங்களில் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கும் படம் சீமைத்துரை.
கீதன், விஜி சந்திரசேகர், வர்ஷா எனறு பல பதுமுகங்களும், ரசிகர்களுக்கு பெரிய அளவில் அறிமுகமில்லா நடிக நடிகையர் பலர் நடித்திருந்தாலும் இப்படம் மிகுந்த ஏற்படுத்தியிருப்தன் காரணம், புதுமையான கதைக்களம் மற்றும் கதை சொல்லப்பட்ட விதம்தான்.
இயக்குநர் மிஷ்கின், வசந்தபாலன், ஒரு நாள் கூத்து இயக்குநர் நெஸல்சன், மரகத நாணயம் படத்தின்மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஏ.ஆர்.கே.சரவண், தயாரிப்பாளர்கள் தனஞ்ஜெயன், டி.சிவா, போன்றவர்களின் வாழ்த்துரையுடன் நாளை சீமைத்துரை படத்தின் பாடல் ஒலி நாடா வெளியிடப்பட இருக்கிறது.
திரையரங்க உரிமையாளர்கள் பலரும் இந்தப் படத்தை தங்கள் அரங்கில் வெளியிட போட்டி போடுகின்றனராம்....





