Friday, November 27

Blog

முற்றிலும் புதுமையான போலீஸ் படம் – “தீரன் அதிகாரம் ஒன்று

முற்றிலும் புதுமையான போலீஸ் படம் – “தீரன் அதிகாரம் ஒன்று

News
தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை பற்றி கார்த்தி :- நம்ம எல்லாரும் போலீசை சூப்பர்மேன் போன்றும் , வேற்று கிரகத்தில் இருந்து இறங்கிவந்தவர்கள் போன்றும் பார்க்கிறோம். நமது வீட்டில் அண்ணனோ , தம்பியோ அல்லது நண்பர்களோ போலீசாக இருப்பார்கள். போலீஸ் அதிகாரிகள் அனைவரும் நம்மில் ஒருவர் தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். போலீஸ் அதிகார்கள் எங்கிருந்து வருகிறார்கள். என்ன மாதிரியான குடும்ப சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள் என்ற விஷயம் தான் அவர்களை ஒரு வகையான போலீஸ் அதிகாரியாக மாற்றுகிறது. போலீஸ் டிரைனிங்கில் அவர்கள் போலீசாக மாற மட்டும் தான் பயிற்சி அளிக்கிப்படுகிறது. அவர்கள் எப்படிபட்ட போலீசாக இருக்கிறார்கள் என்பது அவர்களுடைய சூழ்நிலை தான் தீர்மானிக்கிறது. நான் தீரன் படத்துக்காக சந்தித்த போலீஸ் அதிகாரி ஒருவர் முதலில் கல்லூரியில் பேராசிரியராக ஆக வேண்டும் என்று தான் முயற்சி செய்துக்கொண்டிருந்திருக்கிற...
குழந்தைகளோடு “குழந்தைகள் தின“ விழாவை கொண்டாடிய “பிக்பாஸ்“

குழந்தைகளோடு “குழந்தைகள் தின“ விழாவை கொண்டாடிய “பிக்பாஸ்“

News
  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகர் வையாபுரிக்கு அனைவரிடமும் நல்ல வரவேற்பு உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரை ரசிக்காத ஆளே இல்லை எனலாம்.                நடிகர் வையாபுரி திருவாரூரில் உள்ள “ நியூ பாரத் மேல்நிலை பள்ளி “ 25வது ஆண்டு விழா மற்றும் குழந்தைகள் தின விழா சிறப்பு நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு குழந்தைகளோடு உரையாடினார். விழாவில் குழந்தைகள் நடிகர் வையாபுரியிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் அடிக்கடி பேசும் “ காலையானால் ஈ தொல்லை , இரவு ஆனால் கொசு தொல்லை , அது எல்லாவற்றையும் விட இவங்க தொல்லை “ என்ற வசனத்தை பேச சொல்லியும் , பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பேசிய மற்ற விஷயங்களை பேச சொல்லியும் கோரிக்கை வைத்து. அவர் பேசியதும் அதை கேட்டு கை தட்டி ரசித்து சிரித்துள்ளனர். இதுவரை வையாபுரியிடம் ஜெமினி திரைப்படத்தில் இடம்பெற்ற “ ஏக் மார் தோ துக்கடா “ வசனத்தை பேச சொல்லி தான் அனைவரும் கே...
பொது நலன் கருதி

பொது நலன் கருதி

News
பணத்தை வைத்து  பெரும் பின்புலத்துடன் பணம் சோ்த்துக்கொண்டிருக்கும்  அதிகாரவர்க்கத்திடம் தங்களின் ஒட்டுமொத்த வாழ்கையையும் ஒப்படைத்துவிட்டு,அவர்களிடமிருந் து அன்பையும் நம்பிக்கையையும் எதிர்பார்த்து காத்திருக்கும் எளிய மனிதர்களை பற்றிய கதையே பொது நலன் கருதி. '' இங்கே பொதுநலன் என்ற பெயரை குறியீடாய் வைத்து நடந்துகொண்டிருக்கும் அத்தனை செயல்களுக்கும் காரணமாய் இருப்பது அதிகாரவர்க்கத்தின் சுயநலன்தான்,காலம் காலமாக ஒரு நம்பிக்கையை மக்களிடம் திணிப்பது,பின்பு அதை உண்மை என நம்பவைப்பதற்காக அவர்களையும், அவர்களின் நிறுவனத்தையும் பொது சந்தையில் விளம்பரப்படுத்தி, பிரம்மாண்டாமாய் பிரபலபடுத்திக்கொண்டு, அதன் பின்பு அவர்களை எளிய மனிதர்கள் தங்களின் கோபத்தால் எதுவுமே செய்ய முடியாதபடி கட்டமைத்துக்கொண்டு எப்படி செல்வாக்குள்ள மனிதர்களாய் தங்களை உருவாக்கிகொள்கிறார் என்பதினை திரைக்கதையின் மூலமாக எவ்விதமான சமரசத்திற்க...
“6 அத்தியாயம் பார்த்து மிரண்டு போனேன்”; இயக்குனர் பாரதிராஜா.

“6 அத்தியாயம் பார்த்து மிரண்டு போனேன்”; இயக்குனர் பாரதிராஜா.

News
  '6 அத்தியாயம்' திரைப்படம் சமீபத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இந்தப்படத்தை பார்த்துவிட்டு பாரதிராஜா பேசியதாவது..   “பொதுவாக திரைப்படங்களை பார்க்க அழைக்கிறவர்கள் படம் முடிந்து செல்லும்போது என் முன் மைக்கை நீட்டிவிடுவார்கள்.. சம்பிரதாயத்திற்காக ஏதோ ஒன்றை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் பெரும்பாலும் நழுவிவிடுவேன்.. ஆனால் இந்த ‘6 அத்தியாயம்’ படத்தை பார்த்து முடித்ததுமே, நானே இந்தப்படத்தை பற்றி பேசிவிட்டுத்தான் போகவேண்டும் என முடிவு செய்துவிட்டேன்.   இந்தப்படம் திரையிடப்பட்டு முதல் அத்தியாயம் முடிந்ததுமே, எங்கேயோ ஒரு குரூப் கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறதே என நினைத்தேன்.. இரண்டாவது, மூன்றாவது எபிசோடுகளில் அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, கடைசி அத்தியாயத்தில் அப்படியே மிரண்டு விட்டேன்.   பொதுவாக பெங்காலிகள் உட்பட வடக்கில் உள்ள படைப்பாளிகளை நான...
நீட் என்பது ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் மட்டுமே சந்திக்கப் போகிற பிரச்சினை இல்லை –  இயக்குநர் பா.இரஞ்சித்

நீட் என்பது ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் மட்டுமே சந்திக்கப் போகிற பிரச்சினை இல்லை – இயக்குநர் பா.இரஞ்சித்

News
பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் "கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்" (Challenges In Education - Way Forward) என்ற  தேசிய கருத்தரங்கம் இன்று சென்னையில் நடைபெற்றது.   இந்தியா முழுவதிலும் இருந்து பல கல்வியாளர்கள்,  மருத்துவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மாணவர் அமைப்பினர் கலந்து கொண்ட அந்த கருத்தரங்கில் சில முக்கிய தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு  நிறைவேற்றப்பட்டன.   அந்த தீர்மானங்கள்: சமத்துவ சமூகம் உருவாக கல்வி அனைவருக்கும் அடிப்படைத் தேவை. இதை உணர்ந்தே உலகிலுள்ள பல நாடுகளில், குறைந்தது மேல்நிலைப் பள்ளிக்கல்வி வரையிலுமாவது கட்டணமில்லா கல்வியை அரசு தன் பொறுப்பில் வழங்கி வருகின்றது. சிலநாடுகளில் பல்கலைக்கழக உயர்கல்வி கூட கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில் மகாத்மா ஜோதிபா பூலே, சாவித்திரிபாய் பூலே “கல்வி கற்றல் வாய்ப்ப...
சாதியக் கட்டமைப்பை உடைக்க, மாணவர்களை அரசியல் படுத்த வேண்டும் – இயக்குநர் பா.இரஞ்சித்-

சாதியக் கட்டமைப்பை உடைக்க, மாணவர்களை அரசியல் படுத்த வேண்டும் – இயக்குநர் பா.இரஞ்சித்-

News
நீலம் பண்பாட்டு மையம் சார்பில் "கல்வி முன்னுள்ள சவால்களை எதிர்கொள்ளல்" (Challenges In Education - Way Forward) என்ற  தேசிய கருத்தரங்கம்  சென்னையில் நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து பல கல்வியாளர்கள், மருத்துவர்கள், எழுத்தாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், மாணவர் அமைப்பினர் கலந்து கொண்டு இந்த கருத்தரங்கில் உரையாற்றினர். கருத்தரங்கின் இறுதியாக உரை நிகழ்த்தினார், இந்த கருத்தரங்கை ஒருங்கிணைத்திருந்த இயக்குநர் பா.இரஞ்சித். அவர்பேசியதாவது, இன்று தமிழகத்தின் மிக முக்கியமான தேவையாக இந்த நிகழ்வு. ஏனென்றால் இந்த சமூக நீதியற்ற, சமத்துவமற்றகல்விச் சூழலில்  ப்ரின்ஸ் கஜேந்திர பாபு, ஆதவன் தீட்சண்யா போன்ற சமூக ஆர்வலர்கள் நமக்குத் தேவை என்று நான் நினைக்கிறேன். இவர்கள் எல்லோரும் தான் நமக்கு ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு என்மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தோழர...
தினேஷ்  நந்திதா நடிப்பில் ‘உள்குத்து’

தினேஷ் நந்திதா நடிப்பில் ‘உள்குத்து’

News
தினேஷ் மற்றும் நந்திதா நடிப்பில் , கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'உள்குத்து'. 'திருடன் போலீஸ்' படம் மூலம் ஹிட் கொடுத்த இயக்குனர்  கார்த்திக் ராஜு நடிகர் தினேஷோடு இணைவதும் , 'அட்டகத்தி' படத்திற்கு பிறகு நடிகர்கள் தினேஷும் நந்திதாவும் இணைவதும் இது இரண்டாவது முறையாகும். 'உள்குத்து' படத்தை 'P K Film Factory' G விட்டல் குமார் அவர்களும் G சுபாஷினி தேவி அவர்களும் தயாரித்துள்ளனர். 'உள்குத்து' படம் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திரு. G விட்டல் குமார் பேசுகையில், '' தரமான படங்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களின் ஆதரவு பெருமளவு கிடைத்து வருகிறது.  சமீபத்தில் கூட வெற்றிபெற்ற தரமான படைகள் இதற்கு சான்று. இந்த நிலையில்  'உள்குத்து' படத்தை ரிலீஸ் செய்வதற்கு இதுவே  சரியான நேரமாக நாங்கள் கருதுகிறோம். இப்படத்தின் கதையையு...
CLOSE
CLOSE