தென்னிந்திய நடிகர் சங்கத்தின் “ நட்சத்திர கலை விழா “
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் “ நட்சத்திர கலை விழா “ வருகிற ஜனவரி 6 2018 அன்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது ! இவ்விழாவில் கலை நிகழ்ச்சி , நடனம் , நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் புகழ்பெற்ற நடிகர்களின் பேச்சு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இது தவிர ஆறு அணிகள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த கிரிக்கெட் போட்டிக்கு வழக்கம் போல் சூர்யா , விஷால் , கார்த்தி , ஜெயம்ரவி , ஜீவா ஆகியோர் தலைமை தாங்குவார்கள். ரஜினி , கமல் உட்பட 100க்கும் மேற்ப்பட்ட நடிகர் , நடிகைகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் மலேசிய நடிகர்கள் பங்கேற்கும் FootBall போட்டி ஒன்றும் நடைபெறவுள்ளது. FootBall போட்டியில் மலேசிய நடிகர்கள் நமது தமிழ் சினிமா நட்சத்திரங்களுடன் மோதவுள்ளனர். எதிர்காலத்தில் மலேசிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக...








