Blog
தில்லுக்கு துட்டு ராம்பாலா, கயல் சந்திரன் இணையும் டாவு
சுவாரஸ்யமான தலைப்புகள் மக்கள் மத்தியில் என்றுமே நல்ல வரவேற்பை பெறும். காமெடிக்கு பெயர் போன ஒரு இயக்குனர் ஒரு சுவாரஸ்யமான தலைப்போடும், அதற்கு தகுந்த அணியையும் அமைத்தால் அந்த படம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.
'தில்லுக்கு துட்டு' படத்தில் மாபெரும் வெற்றியை ருசித்த இயக்குனர் ராம்பாலா, எல்லா தரப்பான மக்களும் கொண்டாடக்கூடிய காமெடியை தருவதில் வல்லுநர். அவர் தற்பொழுது நடிகர் 'கயல்' சந்திரனுடன் இணைந்து 'டாவு' என்ற முழு நீள காமெடி படமொன்றை தொடங்கியுள்ளார்.
'' இந்த காதல்-காமெடி கதைக்கு சந்திரன் நிச்சயம் பெரும் பலம் சேர்ப்பார். தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க அவர் முனைப்போட்டுள்ளார். அவரது தீவிரமும், எங்களது தயாரிப்பாளர் ரகுநாதன் P S அவர்களின் தொலைநோக்கு பார்வையும் இணைந்து 'டாவு' படத்தை சிறப்பாகவுள்ளது. இந்த கதைக்கு 'டாவு' தான் பொருத்தமான தலைப்பு. இன்றைய சினிமாவை ஆதரவளித்த...
சூரியா தயாரிப்பில் கார்த்தி – (பசங்க) பண்டிராஜ் இணையும் புதிய படம்
நடிகர் சூர்யா வழங்கும் 2D என்டர்டெயின்மென்ட் PRODUCTION NO: 5 கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று ஆரம்பமானது. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தின் படபிடிப்பை சூர்யா தாயார் லட்சு
மி சிவகுமார் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். தொடர்ந்து படப்பிடிப்பு ஐந்து நாள் சென்னையில் நடைபெறும்.
இதையடுத்து தென்காசியில் 40 நாட்கள் தொடர் படப்பிடிப்பு நடைபெறுகிறது. விழாவில் சிவகுமார், சூர்யா, கார்த்தி,சத்யராஜ், சாயிஷா சாய்கல், பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், மாரிமுத்து, பானுப்ரியா, ரமா, மௌனிகா, இளவரசு,சௌந்தர்ராஜா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், டைரக்டர் மனோஜ்குமார், சுசீந்திரன், சுதா கங்கோரா,இசையமைப்பாளர் D.இமான்,2D இணை தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன், தயாரிப்பாளர்கள் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு, பிரின்ஸ் பிச்சர்ஸ் லட்சுமண், சக்தி பிலிம்ஸ் சக்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்....
குரு உச்சத்துல இருக்காரு இசை வெளியீட்டு விழா
அறிமுக இயக்குநர் தண்டபாணி இயக்கத்தில், தனசண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'குரு உச்சத்துல இருக்காரு'. குரு ஜீவா கதா நாயகனாகவும் பைசா திரைப்படத்தில் நடித்த ஆரா கதா நாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில், பாண்டியராஜன், MS பாஸ்கர், நமோ நாராயணன்,இமான் அண்ணாச்சி, மனோ மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
குரு உச்சத்துல இருக்காரு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் வசந்த்,திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் ஆரி,பின்னணிப் பாடகர் வேல் முருகன் மற்றும் பிக் பாஸ் புகழ் சினேகன் வருகை தந்திருந்தனர்.
இவர்கள் முன்னிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் படத்தில் வரும் இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டது. வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இயக்குநரை, தயாரிப்பாளரை, படத்தில் பணிபுரிந்த கல...
தகுதி மிக்கவர் கைகளிலேயே இந்த சமூகம் இயங்க வேண்டும் – வைரமுத்து
"நெஞ்சில் துணிவிருந்தால்" இயக்குநர் சுசீந்திரனின் அடுத்த படைப்பு. இயக்குநர் சுசீந்திரன் சலிக்காத உழைப்பாளி, அழுக்காத போராளி, ஒரு கலையாளி. தன் படைப்புக்குள் ஓர் உள்ளடக்கம் இருக்க வேண்டும் என்ற துடிப்பு தான் சுசீந்திரனின் பலம். இதுவரைக்கும் அவர் படைத்த படைப்புகள் பெரும்பாலும் வெற்றியை மட்டுமே தொட்டு இருக்கின்றன அல்லது தோல்வியை தொட்டது இல்லை அந்த வரிசையில் இன்னொரு வெற்றிப்படைப்பான சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் வெளிவருகிறது. இந்த படைப்பு சமூகத்திற்க்கு ஒரு செய்தி சொல்லும் படைப்பாக இருக்கும். தகுதிமிக்கவர் கைகளிலேயே இந்த சமூகம் இயங்க வேண்டும். இந்த மையத்தை வைத்து இந்த படைப்பு இயங்குகிறது. அரசியல், கலை, சமூகம், அரசாங்கம், கல்வி, நீதி, மருத்துவம் எல்லா துறைகளிலும் தகுதிமிக்கவர்கள் தகுதி மிக்க இடத்தை அடைய வேண்டும் என்ற உன்னத இலட்சியத்தை உள்ளடக்கமாக கொண்டு இந்த படம் இயங்குகிறது. இதில் நானும...
Kamal Speaks About Pallipparuvathilae Tamil Film
https://www.youtube.com/watch?v=sCdslgTYv_M&feature=youtu.be
Pallipparuvathilae Official Trailer
https://www.youtube.com/watch?v=efffuUNpM4k&feature=youtu.be



