Friday, November 27

Blog

டிரஸ்ட் குழந்தைகளுடன்  பிறந்த நாள்  கொண்டாடிய ராகவா லாரன்ஸ்

டிரஸ்ட் குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய ராகவா லாரன்ஸ்

News
அனாவசிய செலவுகளுடன் ஆடம்பரமாக பிறந்த நாளைக் கொண்டாடும் சினிமா நட்சத்திரங்களுக்கு மத்தியில் பிறந்த நாளைக்கூட அழகுமிகு அர்த்தமுள்ள நாளாக மாற்றிக் கொள்வதில் ராகவா லாரன்ஸுக்கு இணை ராகவா லாரன்ஸ்தான். இன்று ராகவா லாரன்ஸின் பிறந்த நாள். தன் தாயாரிடம் ஆசி பெற்றுக் கொண்டு அம்பத்தூரில் தான் கட்டியிருக்கும் ராகவேந்திரா கோவிலில் வழிபாடு செய்துவிட்டு தன்னுடைய ட்ரஸ்ட் குழந்தைகளுடன் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார் ராகவா லாரன்ஸ். வாழ்த்துக்கள் ராகவா லாரன்ஸ்.... தங்கள் நற்பணி மென்மேலும் தொடரட்டும்....  ...
மூன்று மாதம் போராடி சென்ஸார் வாங்கினேன் “உறுதிகொள்”  இயக்குனர் அய்யனார்

மூன்று மாதம் போராடி சென்ஸார் வாங்கினேன் “உறுதிகொள்” இயக்குனர் அய்யனார்

News
APK பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள உறுதிகொள் திரைப்படம் அக்டோபர் 6 அன்று திரைக்கு வரவிருந்தது, GST பிரச்சனையால் புதிய படம் வெளியிடக்  கூடாது என்ற முடிவால் வெளிவரவில்லை. நவம்பர் 3 அன்று திரையிட்டுக் கொள்ளலாம்  என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவை ஏற்று திரைக்கு வருகிறது. சிறிய பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு படம் எடுத்து ரிலீஸ் பண்ணுவது மிகப்பெரிய சவாலாக இன்றைக்கு இருக்கிறது. படத்தோட தலைப்பை "எதிர்கொள்" என்றுதான் பதிவு செய்தோம். எங்களுக்கும் டைட்டில் ரிஜிஸ்ட்ரேஷன் சான்றிதழ் குடுத்தாங்க பப்ளிசிட்டி செய்து வரும்போது அதே தலைப்பை இன்னும் இரண்டு பேர் பதிவு செஞ்சிருக்கிறதா சொன்னாங்க, சரி நம்ம இவங்ககிட்ட போட்டி போட முடியாதுன்னு தலைப்பை "உறுதிகொள்"னு மாத்தி பதிவு செய்தோம். ஒரு வழியா படத்தை முடிச்சி சென்ஸாருக்கு  கொண்டுபோனா முதல்  கமிட்டி படத்தை ரிஜெக்ட் பண்ணாங்க, வன்முறை மற...
ஹார்வேர்டு பல்கலைக்கழக  தமிழ் இருக்கைக்கு விஷால் 10 லட்சம் ரூபாய் நன்கொடை

ஹார்வேர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு விஷால் 10 லட்சம் ரூபாய் நன்கொடை

News
380 ஆண்டுகளாக இயங்கி வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமான ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக ஓர் இருக்கை அமைய அமெரிக்கவாழ் தமிழர்களான மருத்துவர்கள் சம்பந்தமும் ஜானகிராமனும் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள்.அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.      மூன்று கோடிப் பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும் ஒன்றரைக் கோடிப் பேர் பேசும் செல்டிக் மொழிக்கும் ஹார்வேர்டில் இருக்கைகள் உள்ளன. ஹீப்ரூ, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கும் இருக்கின்றன. ஆனால் 8 கோடிப் பேர் பேசும் தமிழுக்கு இல்லை என்பது நாம் கவலைப்பட வேண்டியது. தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு நன்றிகள்!      தமிழுக்கு அங்கே ஓர் இருக்கை அமைக்க சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில் இதுவரை சுமார் 17 கோடி ரூபாய் தான் சேர்ந்துள்ளது. எனது சார்பில் 10 லட்சம் ரூபாய் செலுத்துகிறேன். உலகளாவிய...
ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கு ஒரு லட்சம்! -கருணாஸ் வழங்கினார்

ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கு ஒரு லட்சம்! -கருணாஸ் வழங்கினார்

News
அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளில் உலகத் தமிழர்கள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தனர். அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சிகளில் இறங்கி நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டனர். அந்த இருக்கையை அமைக்க பல்கலைக்கழகத்துக்கு 45 கோடி ரூபாய் நிதியாகக் கொடுக்க வேண்டும். பலர் இதற்காக நிதி கொடுத்தபோதும், கிட்டத்தட்ட10 கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை நிலவிவந்தது. அதையடுத்து தமிழக அரசு, 10 கோடி ரூபாயைத் தமிழ் இருக்கை அமைக்க நிதியாக தர ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் பத்து லட்சம் வழங்கினர்.. இந்நிலையில் நடிகரும் , முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தின் தலைவரும், எம்.எல்,ஏ-வுமான சே. கருணாஸ் இன்று வெளிய...
நவம்பர் 24 ஆம் தேதி  ‘சென்னை 2 சிங்கப்பூர்’

நவம்பர் 24 ஆம் தேதி ‘சென்னை 2 சிங்கப்பூர்’

News
படத்தின் ஆறு பாடல்களை ஆறு நாடுகளில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நாளிலிருந்தே 'சென்னை 2 சிங்கப்பூர்' படம் எல்லோரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தது. ஜிப்ரானின் இசை இப்படத்தின் தூணாக இருக்கும் என கருதப்படுகிறது. அவரது இப்பட பாடல்கள் இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இப்படத்திற்கான எதிர்பார்ப்பை   பல மடங்கு கூறியுள்ளது. புதுமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன் ரிலீஸ் செய்யப்பட்டது. ரிலீஸ் செய்யப்பட்ட தினத்திலிருந்து  சினிமா ரசிகர்களிடையே இந்த ட்ரைலர் அசத்தலான வரவேற்பை பெற்றுவருகிறது. மிக  சுவாரஸ்யமாக, வித்யாசமாக இருக்கும் இந்த ட்ரைலரை   ரசிகர்கள் மட்டுமின்றி வணிக தரப்பினரும் ரசித்து பாராட்டியுள்ளனர். ''இந்த ட்ரைலருக்கு கிடைத்துள்ள வரவேற்பு எங்களது உழைப்பிற்கு கிடைத்துள்ள சன்மானமாகும். நான் எ...
CLOSE
CLOSE