Blog
Actor Suriya thanks everyone for wishing him for his 20years of successful career in film Industry
என்னுடைய கடந்த 20 வருட சினிமா வாழ்க்கை என்பது சாதிக்காததை சாதிக்க வேண்டும் என்பது தான். உங்களுடைய கரகோஷங்கள் எனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை தந்தது....உங்களுடைய பாராட்டுக்கள் என்னுடைய தரத்தை உயர்த்திக்கொள்ள உதவியாக இருந்தது.... நீங்கள் தப்பு என்று எனக்கு சுட்டிக்காட்டிய விஷயங்கள் எனக்கு நல்ல படிப்பினையாக இருந்தது.... உங்கள் ஆதரவு என்னை சினிமாவை தானி பயணிக்க வைத்தது ( Agaram Foundation )… எல்லாவற்றையும் தாண்டி உங்கள் அன்பு தான் என்னுடைய என்ஜின் வேகமாக ஓட முக்கிய காரணம்... என்னுடைய கடந்த 20வருட பயணத்தை நான் உங்களுக்கு சமர்பிக்கிறேன். இன்னும் பல மையில்கள் தாண்டி பயணிக்க வேண்டியுள்ளது... அனைவருக்கும் நன்றி.......
திரையுலகத்தை காப்பாற்றுவதுதான் எனது ஒரே குறிக்கோள் – விஷால்
"துப்பறிவாளன்" இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவரும் விஷால் படமாக இருக்கும். விஷால் நடக்கும் போது இப்படி தான் இருக்க வேண்டும் , சிரிக்கும் போது , ரொமனஸ் செய்யும் போது இப்படி தான் இருக்கும் வேண்டும் என்று அவருடைய பாணியில் தான் இத்திரைப்படம் உருவாகியுள்ளது...வழக்கமாக நான் என்னுடைய படங்களில் கை , கால்களை ஆட்டி வசனம் பேசி தான் பழக்கம். ஆனால் துப்பறிவாளனில் நான் ஏற்று நடித்திருக்கும் கணியன்பூங்குன்றன் கதாபாத்திரம் எப்போதும் அமைதியாக தான் இருக்கும். அதிபுத்திசாலிகள் அதிகம் பேசமாட்டார்கள் அதை போல் தான் இந்த கதாபாத்திரம் இருக்கும். துப்பறிவாளன் டிடெக்டிவ் ஜானர் படம். துப்பறிவாளன் Sherlock Holmes மாதிரியான ஒரு படம். பழம்பெரும் நடிகர் ஜெயசங்கர் நடித்த துப்பறியும் படங்கள் , தெலுங்கில் கிருஷ்ணா நடித்த துப்பறியும் படங்கள் போன்ற ஒரு படமாக இது இருக்கும். என்னுடைய வாழ்க்கையிலேயே பாடல்கள் இல்லாமல் வெளிய...
விவசாயி மகளுக்கு ‘திருமாங்கல்யம்’ பரிசளித்த அரசு பிலிம்ஸ் கோபி; உதவிய அபி சரவணன்
கடந்தமுறை டெல்லி விவசாய போராடடத்தின் போது அறிமுகமான இளங்கீரன் அண்ணா ...தமிழகம் முழுவதும் தொடர்ந்து விவசாயிகளுக்கான போராட்ட களக்களில் குரல் கொடுப்பவர்....
இளங்கீரன் அண்ணன் என்னை சமீபத்தில தொடர்புகொண்டு மன்னார்குடியை சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் திருமணத்திற்கு உதவ கேட்டுக்கொண்டார்....
விவசாயிகளுக்கு உணவளிக்கவே முழுவீச்சாக செயல்படுவதால் இதற்கு யாரை அணுகுவது என்று யோசித்த வேளையில் நடிகர் திரு.விமல் அவர்களின் பிறந்தநாள் விழாவில் கே.எஸ்.கே . செல்வா சகோ என்னை அரசு பிலிம்ஸ் உரிமையாளர் திரு. கோபி அவர்களிடம் அறிமுகபடுத்தினார்....
அவரிடம் அறிமுகமாகி மூன்று நிமிடம் மட்டுமே பேசியநிலையில் உடனடியாக விவசாயி மகளின் திருமண உதவியை பற்றி பேசினேன் .... பேசிய மூன்று வினாடியில் உடனே ஒகே... எனக்கூறி இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் நிதி உதவி அளித்தார்...
விவரம் எதுவுமே கேட்கவில்லை.... உடனடியாக இளங்கீரன் ...








