Blog
தங்கர் பச்சான் அவசர அறிக்கை
பாஜக கட்சியின் நேர்மையற்ற அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்திற்கு இழைத்து வந்த துரோகத்திற்கும், அநீதிக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.
இதுவரை தங்களுக்கு எதிராக எது நடந்தாலும் அனைத்தையும் சகித்துக் கொண்ட மக்களும், நமக்கு இதில் என்ன பலன் கிடைக்கும் என்று நடந்து கொண்ட அரசியல் கட்சிகளும் இனியாவது மாற வேண்டும்.
தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வை முடக்கும் அடுத்தத் திட்டங்களில் ஒன்று தான் "நீட்" தேர்வு. இந்த சதியை மாணவர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். இப்போது அவர்களுக்கு பக்க பலமாக இருந்து இனி எக்காலத்திலும் தமிழகத்திற்குள் அனுமதிக்காத முறையில் சட்டத்தை உருவாக்கி மாநில அரசின் உரிமையை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. இதை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு போராட்டம் நடத்தி வேலை நிறுத்தம் செய்து தமிழக மக்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் பகையை மறந்துவிட்டு ...
பாடலாசிரியராக மாறிய இயக்குநர் சேரன்!
பெரிய நட்சத்திரங்கள் இல்லை... கவர்ச்சியான பிரமாண்டங்கள் இல்லை... ஆனாலும் ஒரு படம் இன்றைக்கு மீடியாவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது என்றால் அது மிக மிக அவசரம்.
கதை, இன்றைய சூழலுக்கு அதன் அவசியம்தான் அந்தப் படத்துக்கு இப்படியொரு எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
பெண் போலீசார் குறித்து இதுவரை பேசப்படாத ஒரு விஷயத்தை மையமாக வைத்து மிகவும் விறுவிறுப்புடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி. இயக்குநராக அவருக்கு இது முதல் படம். ஆனால் தயாரிப்பாளராக மூன்றாவது படம். ஏற்கெனவே அமைதிப்படை 2, கங்காரு படங்களை இயக்கியவர்.
"இந்தக் கதையை எழுதியவர் இயக்குநர் ஜெகன். கதையைப் படித்ததுமே, இதுதான் இயக்குநராக எனக்கு முதல் படமாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்து களமிறங்கினேன். திட்டமிட்டபடி படத்தை எடுத்து முடித்துவிட்டோம். திருப்தியாக வந்திருக்கிறது படம்.
இந்தப் படத்தின் கதையை...
இயக்குனர் பாரதிராஜா தலைமையில் திருமுருகன் மோகனப்ரியா திருமண விழா
"களவாணி" படத்தில் நடிகராக அறிமுகமானவர் திருமுருகன். யதார்த்தமான தஞ்சாவூர் வில்லனாக நடித்து புகழ்பெற்றார். அதன் பிறகு அரவாண், என்னமோ நடக்குது, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், 49 ஓ, ஈட்டி, பென்சில், கட்டப்பாவ காணோம் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது ஓணான், அடங்காதே, டார்ச்லைட் படங்களில் நடித்து வருகிறார்.
திருமுருகனுக்கும் அவரது உறவுக்கார பெண் மோகனப்ரியாவுக்கும் திருமணம். மோகனப்ரியா, வருவாய் துறையில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருகிறார். நேற்று 4ந் தேதி தஞ்சை அருகில் உள்ள பாப்பாநாடு கிராமத்தில் திருமணம் நடைபெற்றது. இயக்குனர் பாரதிராஜா விழாவுக்கு தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்துள்ளார். திருமண.விழாவில் இயக்குநர் சற்குணம் நடிகர் விமல் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்....
மாநில தேர்தல் மற்றும் பிரச்சாரத்தை மையமாக கொண்ட படம் ‘தப்பு தண்டா’
தேர்தல் ஓட்டுக்கு பணம் வாங்குவதும் கொடுப்பதும் மன்னிக்கமுடியாத குற்றம்'' என்ற 'உலகநாயகன்' கமல் ஹாசனின் பிரபல வாக்கியம் மக்களின் மனத்திலும் ஆழமாக பதிந்துள்ளது. இதனை மையமாக வைத்து செப்டம்பர் 8 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் படம் 'தப்பு தண்டா'
மாநில தேர்தல் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தை மையமாக கொண்ட படம் வெளியாவதற்கு உகந்த காலம் இது என பலரால் கருதப்படுகிறது.
பல பிரபல இயக்குனர்களுக்கு ஆசானாக கருதப்படும் மறைந்த இயக்குனர் பாலு மகேந்திரா சினிமா பட்டறையிலிருந்து பயின்று வெளிவந்த ஸ்ரீகண்டன் இயக்கியுள்ள 'தப்பு தண்டா' திரைப்படம் செப்டம்பர் 8 அன்று ரிலீஸாகவுள்ளது. 'மாநகரம்' , 'ஜோக்கர்' போன்ற காமெடி /திரில்லர் படங்களுக்கு கிடைத்த வெற்றி அதே வகையான சினிமாவை சார்ந்த 'தப்பு தாண்டா' படத்துக்கும் பெரிதளவு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீகண்டன் பேசுகையில், '' ...







