Blog
போராடும் விவசாயிகளுடன் சுதந்திர தினத்தை கொண்டாடிய அபிசரவணன்..!
நம்நாடு சுதந்திரம் பெற்று, 70வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் அதே வேளையில், தங்கள் வாழ்க்கையில் ஒரு விடியலை தேடி, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து தலைநகர் டில்லியில் சாகும் வரை போராட்டம் நடத்தி வருகிறார்கள் நம் தமிழக விவசாயிகள். அரை நிர்வாண கோலத்தில் மத்திய அரசின் கவனத்தையும் மக்களின் கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்பும் விதமாக இந்த போராட்டத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர் விவசாயிகள்.
இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி டில்லியில் போராட்டத்தில் இருந்த விவசாயிகளை, சந்திக்க சென்றிருந்த அபி சரவணன், அங்கு விவசாயிகள் கைது செய்யப்படுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக நமது விவசாயிகளுக்கு சட்ட உதவிகள் செய்துவரும் வழக்கறிஞர் ராஜா ராம் மற்றும் ரீகன் அவர்கள் அலுவலகம் சென்று அவர்களை அழைத்து கொண்டு பார்லிமெண்ட் போலீஸ் நிலையம் சென்றார். பின்னர் விவசாயிகள் பாதுகாப்பு காரணங்களுக்க...
ஹாலிவுட் தரத்தில் தமிழ் படம் – விவேக் ஓபராய்
இந்திய சினிமாவில் இளம் பெண்களின் கனவு கண்ணன், காதலனாக வலம் வந்தவர் தான் விவேக் ஓபராய். தமிழ் மக்களின் மீது அளவு கடந்த அன்பையும், மரியாதையையும் வைத்திருப்பவர். சுனாமியால் தமிழகம் நிலை குலைந்திருந்த போது தமிழ் மக்களுக்கு அவர் நீட்டிய ஆதரவு கரம் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழ் சினிமாவில் நல்ல ஒரு அறிமுகத்துக்காக காத்திருந்த நேரத்தில் அவரின் ஃபேவரைட் ஹீரோ அஜித் படத்தில் நடிக்க அழைப்பு. விவேகம் படத்துக்கு நடிக்க கேட்ட மாத்திரத்திலேயே ஓகே சொல்லி, அஜித்துடன் நடித்தும் முடித்து விட்டார். ஆகஸ்டு 24ஆம் தேதி வெளியாக இருக்கும் விவேகம் படத்தை பற்றியும், தன் அபிமான அஜித்துடன் நடித்த அனுபவத்தை பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.
என்னுடைய நேரத்தை குடும்பம், குழந்தைகள், பிஸினஸ், தொண்டு நிறுவனங்களுக்கு செலவு செய்பவன். படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இயக்குனர் சிவா என்னை சந்தித்து கதை சொன்னபோது 15...
கதைபிடித்ததால் இசையமைக்க ஒப்புக் கொண்ட இசைஞானி இளையராஜா..!
கதை பிடித்துப்போன பிறகே இசையமைக்க ஒப்புக் கொண்ட இசைஞானி இளையராஜா!
கதை பிடித்துப்போன பிறகே இசையமைக்க ஒப்புக் கொண்டு இசைஞானி இளையராஜா ‘களத்தூர் கிராமம்’ படத்துக்கு இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.
கிராமம் அதன் மண் , மக்கள் வாழ்க்கையைப் பற்றி செயற்கைப் பூச்சின்றி சொல்லப்பட்ட கதைகள் தமிழ்த் திரையுலகில் வெற்றி பெற்றுள்ளன. அவ்வரிசையில் இடம் பெறும் வகையில் உருவாகியுள்ள படம் தான் ‘களத்தூர் கிராமம்’ . இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் சரண் கே. அத்வைதன். ஏ.ஆர். மூவி பேரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ளார். டட்டூ சினிமா ஆரூர் சுந்தரம் தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியிடுகிறார்.
கிஷோர் கதை நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக வருகிறார் யக்னா ஷெட்டி . இவர் ஏற்கெனவே சில கன்னடப் படங்களில் நடித்திருப்பவர். இவர்கள் தவிர ‘தகராறு
‘சுலீல் குமார், அஜய் ரத்னம் , தீரஜ் ரத்னம்ர, ஜினி மகா ...





