Blog
ஜல்லிகட்டை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் வீரத்திருவிழா
இறைவன் சினி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக c.செல்வகுமார் தயாரிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் படம் “ ஒரு கனவு போல “ அதை தொடர்ந்து இந்த பட நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக "வீரத்திருவிழா “ என்கிற படத்தையும் வெளியிட இருக்கிறார்கள்
சத்யா என்ற புதுமுகம் மற்றும் செல்வம், செல்வா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக தேனிகா அறிமுகமாகிறார். மற்றும் பொன்வண்ணன், சிந்தியா, நசிர், காதல் சுகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - ஹார்முக்
இசை - E.S.ராம் இவர் கோழிகூவுது, ஒரு கனவு போல போன்ற படங்களுக்கு இசையமைத்தவர்.
எடிட்டிங் - சதிஷ்
தயாரிப்பு மேற்பார்வை : கார்த்திக்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - விஜய்முரளிதரன் (எ ) வைரமணி
தயாரிப்பு : c.செல்வகுமார்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..
இப்படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு வாழ் மக்கள் இருக்கும் இடத்தை மையமாக வைத்து ...
எல்வி பிரசாத் ஃபிலிம் & டிவி அகடமியின் பட்டமளிப்பு விழா
எல்வி பிரசாத் ஃபிலிம் & டிவி அகடமியின் 11ஆவது பட்டமளிப்பு விழா சென்னை பிரசாத் பிரிவியூ தியேட்டரில் இன்று மாலை 4 மணிக்கு (ஆகஸ்டு 19) நடந்தது. விழாவில் இந்திப்பட இயக்குனர் ஹன்சல் மேத்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 34 மாணவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். மாணவர்கள் 4 மாதங்கள் உழைத்து உருவாக்கிய 16 டிப்ளமோ குறும்படங்களில் சிறந்த படங்களை 7 ஜூரி மெம்பர்கள் தேர்தெடுக்க அவற்றிற்கு விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
எல்.வி. பிரசாத் அவர்களால் தான் நாம் இங்கு கூடியிருக்கிறோம். அவர் ஒரு சிறந்த கதை சொல்லி. அவரின் படங்கள் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய வகையில் அமைந்திருக்கும். 100 ரூபாயை எடுத்துக் கொண்டு மொழி தெரியாமல், வெறும் சினிமா ஆர்வத்தோடு மும்பைக்கு பயணமானார். இன்று அவர் பெயரில் பிரசாத் அகடமி உட்பட பல மில்லியன் சதுரடியில் கட்டிடங்கள் இருக்கின்றன என வரவேற்புரை ஆற்ற...
Villain World – Song and Lyrics From Sathuranga Vettai 2
https://www.youtube.com/watch?v=sGGXV9KDH3M
ரஜினியின் புகழ் கிரீடத்தில் இன்னும் ஒரு வைரம் _ “12-12-1950”
ஜியோஸ்டார் நிறுவனம் சார்பில் கோட்டீஸ்வர ராஜு தயாரிக்க கபாலி செல்வா எழுதி இயக்கி நடித்திருக்கும் படம் 12 12 1950. இந்த படத்தின் டிரைலரை வெளியிட்ட கபாலி செல்வா, படத்தை பற்றிய சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
''இந்த ட்ரைலரின் வெற்றி ரஜினி சாரின் புகழுக்கு இன்னமொரு சான்றாகும். 'பேர கேட்டவுடனே சும்மா அதிருதுல்ல' என்பது மறுமுறை நிரூபணமாகியுள்ளது . அவரது ரசிகர்களுக்கு நன்றி . பல வருடங்களுக்கு முன்பே இந்த மாதிரி ஒரு படம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சமீபத்தில் தான் கதையை முடித்து கோட்டீஸ்வர ராஜு சாரிடம் சொன்னேன். கதையை கேட்டவுடன் ஓகே சொன்னார்.
தம்பி ராமையா ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்து 9 கெட்டப்பில் நடித்தார். யாருமே சம்பளத்தை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் எனக்காக நடித்துக் கொடுத்தனர். யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், குமரவேல், ஆதவன் ஆகியோரும் சிறப்பாக நடித்துக் கொடுத்...
ஹாலிவுட் தரத்தில் உருவாகியிருக்கும் தமிழ் படம் விவேகம் – விவேக் ஓபராய்
இந்திய சினிமாவில் இளம் பெண்களின் கனவு கண்ணன், காதலனாக வலம் வந்தவர் தான் விவேக் ஓபராய். தமிழ் மக்களின் மீது அளவு கடந்த அன்பையும், மரியாதையையும் வைத்திருப்பவர். சுனாமியால் தமிழகம் நிலை குலைந்திருந்த போது தமிழ் மக்களுக்கு அவர் நீட்டிய ஆதரவு கரம் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழ் சினிமாவில் நல்ல ஒரு அறிமுகத்துக்காக காத்திருந்த நேரத்தில் அவரின் ஃபேவரைட் ஹீரோ அஜித் படத்தில் நடிக்க அழைப்பு. விவேகம் படத்துக்கு நடிக்க கேட்ட மாத்திரத்திலேயே ஓகே சொல்லி, அஜித்துடன் நடித்தும் முடித்து விட்டார். ஆகஸ்டு 24ஆம் தேதி வெளியாக இருக்கும் விவேகம் படத்தை பற்றியும், தன் அபிமான அஜித்துடன் நடித்த அனுபவத்தை பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.
என்னுடைய நேரத்தை குடும்பம், குழந்தைகள், பிஸினஸ், தொண்டு நிறுவனங்களுக்கு செலவு செய்பவன். படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இயக்குனர் சிவா என்னை சந்தித்து கதை சொன்னபோது 1...
இயக்குனர் குடும்பத்திலிருந்து ஒரு நடிகை காயத்ரி
கலைப்புலி தாணு தயாரிப்பில் முதல் படமாக உருவாகி வெற்றி பெற்ற படம் "யார்"
அந்த படத்தின் இயக்குனர்களில் ஒருவர் தான் கண்ணன் ...பின்னர் யார் கண்ணன் என்ற பெயரில் பல படங்களை இயக்கியனார்...இயக்குனர் மகேந்திரனின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட அவர் நல்ல பாடலாசிரியரும் கூட.
அவர் எழுதிய "அள்ளித்தந்த வானம் அன்னையல்லவா
சொல்லித் தந்த பூமி
தந்தையல்லவா" என்ற பாடல் இன்றும் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று.
சமீபத்தில் நடிகரான இவர் பல படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்..
யார் கண்ணன் - ஜீவா தம்பதிகளின் வளர்ப்பு மகள் காயத்திரி நடிகையாக அறிமுகமாகிறார்..
சில விழாக்களில் காயத்திரியை பார்த்த பலர் ஏதோ நடிகை போலிருக்கிறது என்று காயத்திரியின் காது பட பேசப் போக நடிக்க வேண்டும் என்கிற ஆவல் அதிகமாகி விட்டதாக சொல்கிறார்.
16 வயது என்பது சினிமா அறிமுக கதாநாயகிகளுக்கு சரியான வயது என்கிற நடை முறையை இவர் புரிந்து கொ...





