வனமகன் – விமர்சனம்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி – சாயீஷா சைகல் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் படம் ‘வனமகன்’. ஹாரீஸ் ஜெயராஜ் இசையில், அவரது ஐம்பதாவது படமாக வெளிவந்திருக்கும் ‘வனமகன்’ படம் என்ன சொல்ல வருகிறது?
கதைப்படி, கோடீஸ்வர பெண்ணான நாயகி சாயீஷா, தனது நண்பர்களுடன் அந்தமான் நிக்கோபர் தீவுக்கு சுற்றுலா செல்கிறார். அப்போது அங்கு எதிர்பாராமல் ஒரு விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தில் பழங்குடி இனத்தவரான நாயகன் ஜெயம் ரவிக்கு அடிப்பட, அவரை வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் கடத்தி வந்து சென்னையில் சிகிச்சை அளித்து பிழைக்க வைக்கின்றனர்.
தன் இனத்தையும், ஊரையும் விட்டுவந்த ஜெயம் ரவி பிரம்மை பிடித்தவர் போல் எதிர்படும் எல்லோரையும், எல்லாவற்றையும் அடித்து நொறுக்குகிறார். சாயீஷா வீட்டில் அவர் செய்யும் சேட்டை நம் வயிறுகளில் கிச்சு கிச்சு மூட்டுகிறது, அதிலும் குறிப்பாக தம்பி ராமையாவி...









