‘சர்வைவ பாடல் ஒரு மைல் கல்’ — யோகி B
ஒரு பாடல் வெளியான ஓரிரு தினங்களிலேயே எல்லா தரப்பினர் மத்தியிலும் ஏகோபித்த ஆதரவு மற்றும் வரவேற்பு பெறுவது முக அரிது. 'விவேகம் ' படத்தின் ''சர்வைவ ' பாடல் இந்த அரிய காரியத்தை செய்துள்ளது . உலக புகழ் பெற்ற தமிழ் ராப்பர் யோகி B மற்றும் அனிருத் சேர்ந்து அமைத்துள்ள இப்பாடல் வெளியான நிமிடத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது . இதை பற்றி யோகி B பேசுகையில் , '' 'சர்வைவ ' எனக்கு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி . அஜித் அவர்களின் நடிப்புக்கும் , அனிருத்தின் இசைக்கும் ரசிகனான எனக்கு இப்பாடலின் மூலம் இருவருடனும் சேர்ந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த சந்தோஷம் . எனது இசை வாழ்க்கையில் 'சர்வைவ ' ஒரு மைல் கல்லாகும் . இப்பாடலை EDM என்ற மேற்கத்திய இசை பாணியில் அமைத்துள்ளோம் . இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும் என உறுதியாக நம்புகிறோம் . அஜித் அவர்களுடனும் ...









