Sunday, November 29

Blog

ஹிட் 3 _ விமர்சனம்

ஹிட் 3 _ விமர்சனம்

Reviews
ஹிட் 3 _ விமர்சனம் போலீஸ் அதிகாரியான நானி கொடூரமாக ஒரு கொலை செய்வதுடன் அதை வீடியோவாகவும் எடுக்கிறார் என்று ஹிட் படம் துவங்கும் போது ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு இழுத்து வந்து விடுகிறது. அடுத்ததாக மீண்டும் ஒரு கொலையை இதே பாணியில் நானி செய்யும்போது அதை மற்றொரு பெண் போலீஸ் அதிகாரி பார்த்து விடுகிறார். இப்படி தொடர்ந்து வரும் பரபரப்பான காட்சிகள் படத்தின் விறுவிறுப்பை மேலும் மேலும் கூட்டுகின்றன.  இந்த இரண்டு கொலைகளையும் நான் ஏன் செய்தார் என்று தெரிய வரும்போது அதிர்ச்சியும் பரபரப்பும் இன்னும் அதிகரிக்கிறது. பிளாக் வேர்ல்ட் எனப்படும் கருப்பு உலகத்தைச் சேர்ந்த சீரியல் கில்லர்கலை கூண்டோடு பிடிக்கவே நானி இந்தக் கொலைகளை செய்து அவர்களுடைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறார். பின்னர் அந்தக் குழுவுக்குள் நுழைகிறார். பிளாக் வேர்ல்ட் சீரியல் கில்லர்களின் தலைவன் நானி போலீஸ் அதிகாரி என்பதை கண்டுபிடி...
நடிகர் சம்பத் ராமுக்கு விருது வழங்கி கெளரவித்த மலையாள புரஷ்கரம் சமிதி!

நடிகர் சம்பத் ராமுக்கு விருது வழங்கி கெளரவித்த மலையாள புரஷ்கரம் சமிதி!

News
மலையாள திரையுகினருக்கு வழங்கப்படும் சிறந்த விருதான ‘மலையாளம் புரஷ்காரம் 1200’ விருது வென்ற நடிகர் சம்பத் ராம்! தமிழ் சினிமாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சம்பத் ராம். பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தாலும், தனக்கு கொடுக்கப்படும் வேடத்தை சிறப்பாக செய்யக்கூடிய நடிகர்களில் ஒருவரான சம்பத் ராம், தற்போது தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் பிஸியான வில்லன் நடிகராக உருவெடுத்திருப்பதோடு, பான் இந்தியா படங்களில் நடிக்கும் பான் இந்தியா நடிகராகவும் வலம் வருகிறார். இந்த நிலையில், மலையாள திரையுலகம் மற்றும் எழுத்துலகில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வரும் மலையாள புரஷ்காரம் சமிதி, நடிகர் திலீப் நடித்த ’தங்கமணி’ என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்...
மே 23ல் அதிக அளவு திரையரங்குகளில் வெளியாகும் ‘வேம்பு’!

மே 23ல் அதிக அளவு திரையரங்குகளில் வெளியாகும் ‘வேம்பு’!

News
"மலையாளப் படங்களை கொண்டாடுகிறோம்.தமிழ்ப்படங்களை விட்டுவிடுகிறோம்"-இயக்குநர் ஜஸ்டின் பிரபு வருத்தம்! மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ் மற்றும் S.விஜயலட்சுமி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேம்பு’. அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி) ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மாரிமுத்து, ஜெயராவ், பரியேறும் பெருமாள், கர்ணன் புகழ் ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடைந்து தற்போது ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. நிறைய படங்களை திரையரங்குகளுக்கு கொண்டு வந்து வெற்றி காணும் "உத்ரா புரொடக்சன்ஸ்- (ஹரி உத்ரா ) 'வேம்பு' படத்தை மே-23ஆம் தேதி தமிழகமெங்கும் அதிக அளவு திரையரங்குகளில் வெளியிடுகிறது. இன்னொரு பக்கம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ளவும் ‘வேம்பு’ ...
யாளி விலங்கை முதல் முறையாக திரையில் காட்டும் ‘கஜானா’ திரைப்படம்!

யாளி விலங்கை முதல் முறையாக திரையில் காட்டும் ‘கஜானா’ திரைப்படம்!

News, Uncategorized
கோடை விடுமுறைக்கு ஏற்ற பிரமாண்ட திரைப்படமாக மே 9 ஆம் தேதி வெளியாகும் ‘கஜானா’! வியக்க வைக்கும் VFX காட்சிகள் மூலம் உருவாகியுள்ள ‘கஜானா’! - மே 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது மே 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கஜானா’ திரைப்படத்தை டி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் திருமலை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். ஹாலிவுட் திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு மற்றும் வியாபாரம் இருப்பதற்கு முக்கிய காரணம், அப்படங்களின் பிரமாண்டம் மற்றும் பிரமிக்க வைக்கும் VFX காட்சிகளே. அப்படிப்பட்ட ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் அளவுக்கு தமிழ் சினிமாவில் உருவாகியிருக்கும் படம் தான் ‘கஜானா’. மொழிகளை கடந்த கதைக்களத்துடன் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படம் வியக்க வைக்கும் VFX காட்சிகளுடன் உருவாகியுள்ளது. ‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘நேஷ்னல் டிரஸ்சர்’ போன்ற ச...
புதிய களத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “நாக் நாக்” !

புதிய களத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “நாக் நாக்” !

News
ஃபேன்டஸி திரில்லர் திரைப்படம் "நாக் நாக்" பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! பன்முகத் திறமை கொண்ட ராகவ் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் புதிய மர்மம் மற்றும் ஃபேன்டஸி கலந்த திரில்லர் திரைப்படம் "நாக் நாக்". இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ராகவ்வின் முதல் இயக்க முயற்சியான இந்தப் படம், அதன் வெளியீட்டு தருணத்திலேயே ஒரு முக்கிய வலு சேர்க்கும் விதமாக, தேஜாவு, தருணம் போன்ற தரமான படங்களை இயக்கியவரும், இயக்குநருமான அரவிந்த் ஸ்ரீனிவாசன், தனது "ஆர்கா என்டர்டெய்ன்மெண்ட்ஸ்" நிறுவனம் வாயிலாக வெளியிட உள்ளார். ஒரு புதிய சினிமா அனுபவத்தை 'நாக் நாக்' திரைப்படம் நிச்சயம் தரும். இந்தப் படத்தின் தனித்துவமான கதைக்கருவும், தரமான உருவாக்கமும் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் அவர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த அவர், இந்தப் படத்துடன் கைகோர்த்துள்ளார். இதுகுறித்து அர...
மரண தெய்வமாக ஜகதீஷ் நடிக்கும் ‘யமன்’

மரண தெய்வமாக ஜகதீஷ் நடிக்கும் ‘யமன்’

News
ஜகதீஷ் ஆமாஞ்சியின் ‘யமன்’ புதிய போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது! இப்போது பாக்ஸ் ஆஃபிஸில் புராண அடிப்படையிலான திரைப்படங்கள் வெற்றி பெறுவது ஒரு வெளியறிய ரகசியமல்ல. இந்த ஒரு அலை மீது சவாரி செய்கிற படம் தான் யமன், ஜகந்நாதா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஒரு புதுமையான திரைப்படம். இதில் நடிகர் ஜகதீஷ் ஆமாஞ்சி முக்கிய கதாப்பாத்திரத்துடன் இயக்குநராகவும் பணியாற்றுகிறார். “தர்மோ ரக்ஷதி ரக்ஷித꞉” எனும் சக்திவாய்ந்த வாசகம் படத்துக்கு அடையாளமாக இருக்கிறது. ஜகதீஷுக்கு ஜோடியாக நடிகை ஸ்ராவணி ஷெட்டி நடித்துள்ளார். இப்போது இப்படத்திற்கான புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது, இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு முன்பு வெளியான தலைப்பு போஸ்டர்கள் மற்றும் தீபாவளி சிறப்பு பதிப்புகள் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. ஆனால் இந்த புதிய போஸ்டர் அதன் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது. புதிய ...
‘ஆண்டவன்’ படத்தில் கலெக்டர் வேடத்தில் நடிக்கும் பாக்கியராஜ்!

‘ஆண்டவன்’ படத்தில் கலெக்டர் வேடத்தில் நடிக்கும் பாக்கியராஜ்!

News
"ஆண்டவன்" இசை விழாவில் இயக்குனர் கே.பாக்யராஜ், ஜாகுவார் தங்கம், கேந்திரன் முனியசாமி, கஞ்சா கருப்பு, முத்துக்காளை, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் கலந்துக் கொண்டு, இயக்குனர் வில்லிதிருக்கண்ணன், கதாநாயகன் மகேஷ், கதாநாயகி வைஷ்ணவி மற்றும் படக்குழுவினரை வாழ்த்தினார்கள்! ஆளில்லாத கிராமங்கள் அதிகரித்து வருகிறது, கிராமங்களை காப்பாற்றுங்கள்! எதார்த்தமான கதைக்களத்தில், வில்லியம் பிரதர்ஸ் நிறுவனம் "ஆண்டவன்" என்ற திரைப்படத்தை உருவாகியுள்ளது. இதில் கலெக்டராக கே.பாக்யராஜ் நடிக்கிறார். கதாநாயகனாக யூடியூப்பர் மகேஷ் நடிக்கிறார். கதாநாயகியாக வைஷ்ணவி நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, முத்துக்காளை, ஹலோ கந்தசாமி, ஆதிரா, டாக்டர் முத்துச்செல்வம் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு மகிபாலன், இசை கபிலேஷ், பின்னணி இசை சார்லஸ் தனா, எடிட்டிங் லட்சுமணன், நடனம் பவர் சிவா, சண்டை பயிற்சி சரவெடி சரவணன், பிஆர்ஓ க...
யோகி பாபு பற்றிய சர்ச்சை கருத்து _ கஜானா தயாரிப்பாளர் சொல்வது என்ன?

யோகி பாபு பற்றிய சர்ச்சை கருத்து _ கஜானா தயாரிப்பாளர் சொல்வது என்ன?

News
யோகி பாபு பற்றிய சர்ச்சை கருத்து! - ‘கஜானா’ பட இயக்குநரும், தயாரிப்பாளருமான பிரகதீஸ் சாம்ஸ் வருத்தம் யோகி பாபு எங்கள் படத்திற்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார் - ‘கஜானா’ திரைப்பட தயாரிப்பாளர் விளக்கம் ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் (Four Square Studios) சார்பில் பிரபதீஸ் சாம்ஸ் தயாரித்து, இயக்கியிருக்கும் ’கஜானா’ திரைப்படம் வரும் மே 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டவர்களில் ஒருவரான தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ராஜா, பேசும் போது, ”பணம் கொடுத்தால் தான் யோகி பாபு படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியும், என்று கூறுகிறார். இது தவறானது, இதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்”, என்று பேசினார். அவர் பேசிய வீடி...
தீபாவளிக்கு திரைக்கு வருகிறது துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’!

தீபாவளிக்கு திரைக்கு வருகிறது துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’!

News
துருவ் விக்ரம் நடிக்கும், “பைசன் காளமடான்” திரைப்படம், வரும் அக்டோபர் 17, தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் வெளியாகிறது ! இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில், தமிழ் திரையுலகில் மிகவும் எதிபார்க்கப்படும், ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பைசன் காளமாடன்” திரைப்படம், வரும் 2025 அக்டோபர் 17 அன்று, தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், துணிவும் தைரியமும் நிறைந்த ஒரு விளையாட்டு வீரனின், ஆழமான கதையை சொல்ல வருகிறது. நடிகர் துருவ் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர் ஆமீர், இயக்குநர் லால், பசுபதி, மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். அப்ள...
அனிருத் பாடிய அஜாலுக்கா உஜாலா பாடல்!

அனிருத் பாடிய அஜாலுக்கா உஜாலா பாடல்!

News
வண்ணம் கொண்ட வெண்ணிலவே படத்தில் அனிருத் பாடிய அஜாலுக்கா உஜாலா பாடல் வெளியீடு ஆர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் அனுஷா மகாராஜன் & தயானி பாலா தயாரித்து இருக்கும் படம் 'வண்ணம் கொண்ட வெண்ணிலவே'. சச்சின், வகீஷா சல்காடோ நடித்து இருக்கும் இப்படத்தை தனுஷான் சந்திரசேகர் இயக்கி இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தற்போது நிலுக்ஷன் யோகேஸ்வரன் இசையில் அனிருத் பாடி இருக்கும் அஜாலுக்கா உஜாலா பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
CLOSE
CLOSE