Sunday, November 29

Blog

‘அக்யூஸ்ட்’ படத்தின் இரண்டாம் சிங்கிள் பிரியாணி டீஸர் ரம்ஜான் அன்று வெளியீடு!

‘அக்யூஸ்ட்’ படத்தின் இரண்டாம் சிங்கிள் பிரியாணி டீஸர் ரம்ஜான் அன்று வெளியீடு!

News
உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ பிரம்மாண்ட‌ திரைப்படத்தின் இரண்டாம் சிங்கிள் பிரியாணி டீஸர் ரம்ஜான் அன்று வெளியீடு* *நரேன் பாலகுமார் இசையில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி உற்சாகமிக்க பிரியாணி பாடலை பாடியுள்ளனர்* *'அக்யூஸ்ட்’ டப்பிங் மற்றும் இதர போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன* ஜேஷன் ஸ்டுடியோஸ் சச்சின் சினிமாஸோடு இணைந்து, ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமாக்கப்பட்டுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் முதல் முறையாக உதயா, அஜ்மல் மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தை கன்னட திரையுலகில் வெற்றி படங்களை இயக்கிய பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்குகிறார். பிரபல கன்னட நடிகை ஜான்விகா நா...
தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் ‘இத்திக்கர கொம்பன்’!

தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் ‘இத்திக்கர கொம்பன்’!

News
தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் 'இத்திக்கர கொம்பன்'! யானையை மையமாக வைத்து உருவாகும் 'இத்திக்கர கொம்பன்' குழந்தைகளைக் கவர வருகிறது.! திரைப்படங்களில் விலங்குகள் பங்கேற்கும் கதைகள், விலங்குகளை மையப்படுத்திய கதைகள் குழந்தைகளைக் கவரும் வகையில் அமைந்து பெரிய வெற்றிப் படங்களாக மாறி இருக்கின்றன.அவை மொழியைக் கடந்து மனங்களைக் கவரும். அந்த வகையில்'இத்திக்கர கொம்பன்' என்கிற மலையாளப்படம் உருவாகி வருகிறது. தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியாக உள்ளது. இப்படத்தில் சாது என்கிற ஒரு யானை பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளது.அந்த யானைக்குக் கதையில் உள்ள இடமும் காட்சிகளும் குழந்தைகள் மனதைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இப்படத்தை ஸ்ரீ லட்சுமி சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜன் பாப்பன், ஸ்ரீலா வடகரா தயாரித்துள்ளனர் மலையாளத்தில் அறிமுகமான நடிகர்களான டினி டோம், டோனி, கரீனா...
“செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் முன் திரையிடல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு !

“செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் முன் திரையிடல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு !

News
ZEE5 தளம் வழங்கும் "செருப்புகள் ஜாக்கிரதை" சீரிஸின் முன் திரையிடல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு ! இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி சீரிஸான "செருப்புகள் ஜாக்கிரதை" சீரிஸை வெளியிட்டுள்ளது. S Group சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த அதிரடி காமெடி சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சீரிஸின் முன் திரையிடல் பத்திரிகை ஊடக நண்பர்களுக்காகப் பிரத்தியேகமாகத் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இந்நிகழ்வினில் ZEE5 நிறுவனம் சார்பில் கௌசிக் நரசிம்மன்...
ஆர் பி எம் ( RPM ) படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டு, டேனியல் பாலாஜிக்கு நினைவஞ்சலி செலுத்திய படக்குழு!

ஆர் பி எம் ( RPM ) படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டு, டேனியல் பாலாஜிக்கு நினைவஞ்சலி செலுத்திய படக்குழு!

News
டேனியல் பாலாஜி நடித்த கடைசி படமான 'ஆர் பி எம் (RPM) ' படத்தின் டிரெய்லரை அவரது தாயார் வெளியிட்டார்! நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஆர் பி எம் - RPM 'படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதால்.. அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இயக்குநர் பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர் பி எம் ' ( R P M) எனும் திரைப்படத்தில் நடிகர் டேனியல் பாலாஜி, கோவை சரளா, ஒய் ஜி மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி , சுனில் சுகதா, ஈஸ்வர் கிருஷ்ணா, தயா பிரசாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனியன் சித்திரசாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெ. செபாஸ்டியன் ரோஸாரியோ இசையமைத்திருக்கிறார். பட...
கவிஞர் முத்துலிங்கத்திற்கு  பாராட்டு விழா!

கவிஞர் முத்துலிங்கத்திற்கு பாராட்டு விழா!

News
தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழாவில் திரைப் பிரபலங்கள் திரளாக பங்கேற்பு! *நடிகர் சிவகுமார், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விஸ்வநாதன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்* *முத்துலிங்கம் திரைப்பட முத்துக்கள் நூல் வெளியீடு*! தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழா சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல்துறை முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் திரளாக பங்கேற்றனர். முத்துக்கு முத்தான விழா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முத்துலிங்கம் திரைப்பட முத்துக்கள் எனும் ...
‘சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

‘சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

News
'சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு! ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் ரவிசங்கர் வர்மா தயாரிப்பில் இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி’. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 4, 2025 அன்று ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் இன்று நடைபெற்றது. நடிகை ஆராத்யா தேவி, “நான் கேரளா பொண்ணு. ‘சாரி’ படத்தின் டிரெய்லர், பாடல்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். ‘கேர்ள் நெக்ஸ்ட் டோர்’ கதாபாத்திரத்தில்தான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். சோஷியல் மீடியாவின் நெகட்டிவ் மற்றும் இருட்டு பக்கங்களை இந்தப் படம் பேசுகிறது. நிச்சயம் பெண்கள் இதை தங்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். ஆராத்யா என்ற கதாபாத்திரத்தில் எனக்கு நடிக்க வா...
“படையாண்ட மாவீரா”விற்கு ஐந்தாம் பாடலை வழங்கிய கவிப்பேரரசு வைரமுத்து!

“படையாண்ட மாவீரா”விற்கு ஐந்தாம் பாடலை வழங்கிய கவிப்பேரரசு வைரமுத்து!

News
வ.கௌதமன் இயக்கி நாயகனாக நடிக்கும் "படையாண்ட மாவீரா"விற்கு ஐந்தாம் பாடலை வழங்கினார் கவிப்பேரரசு வைரமுத்து! வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படையாண்ட மாவீரா திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார் வ.கௌதமன். கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் படையாண்ட மாவீரா. மண்ணையும் மானத்தையும் காக்க வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படைப்பின் நெருப்பு தகிக்கும் ஐந்தாவது பாடலை இயக்குநர் வ.கௌதமனிடம் தந்ததோடு அப்பாடலைப் பற்றி ஆகப் பெரும் நெகிழ்வோடு தனது எக்ஸ் தளப் பதிவில் கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார். கௌதமன் இயக்கும் புரட்சிப் படம் படையாண்ட மாவீரா அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறேன் ஒவ்வொரு பாடலையும் ...
வீர தீர சூரன் பார்ட் 2 _ விமர்சனம்

வீர தீர சூரன் பார்ட் 2 _ விமர்சனம்

Reviews
வீர தீர சூரன் 2விமர்சனம் ஒரு நல்ல திரைப்படம் முதல் காட்சியிலேயே பார்வையாளர்களை தன்னுள் இழுத்துக்கொண்டு படத்தின் கடைசி காட்சி வரை ஒன்ற வைக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வகையில் பார்த்தால் வீரதீர சூரன் பார்வையாளர்களை கட்டிப்போட்டு படம் பார்க்க வைத்திருக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும். பெரியவர் என்றழைக்கப்படும் மாருதி பிரகாஷ் ராஜும், அவரது மகன் சூரஜ் வெஞ்சரமூடும் மதுரை பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் தாதாவாக வலம் வருகின்றனர். அந்த ஊருக்கு மாற்றலாகி வரும் போலீஸ் அதிகாரி எஸ் ஜே சூர்யா இருவரையும் என்கவுண்டரில் போட்டு தள்ள திட்டமிடுகிறார். அதற்கேற்றவகையில் சந்தர்ப்பம் ஒன்றும் அமைகிறது. இருவரும் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள பழைய விசுவாசி விக்ரம் உதவியை நாடுகின்றனர். தற்போது அடிதடி வம்புகளுக்கெல்லாம் போகாத விக்ரம் மளிகை கடை ஒன்றை நடத்திக் கொண்டு, மனைவி மக்களுடன் வசித்து வருகிறார். ...
டோர் _ விமர்சனம்

டோர் _ விமர்சனம்

Reviews
டோர் _ விமர்சனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் படங்களில் நடிக்க வந்திருக்கும் பாவனா டோர் படத்தின் மூலம் மிகச் சிறந்த கம் பேக் கொடுத்திருக்கிறார். நடிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ள அழுத்தமான பாத்திரம் என்பதால் நடிப்பில் அழகாக ஸ்கோர் செய்கிறார் பாவனா. கட்டிடக்கலை நிபுணராக இருக்கும் பாவனா ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்காக பழைய கட்டடம் ஒன்றை இடிக்கும் போது, அதில் உள்ள கோவிலையும் அகற்ற நேரிடுகிறது. இதைத்தொடர்ந்து மதுரையில் வசிக்கும் பாவனாவின் தந்தை பைக்கில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு மரணம் அடைகிறார். அந்த கட்டுமான பணிகள் நடக்கும் இடத்திலும் தொடர் மரணங்கள் ஏற்படுகின்றன. பாவனாவும் அவரது தோழியும் தங்கியிருக்கும் வீட்டிலும் சில அமானுஷ்ய விஷயங்கள் நடக்கின்றன. பாவனாவின் தோழி காரணமே இல்லாமல், திடீரென்று சுவரில் தன் நெற்றியை மோதிக்கொண்டு காயத்தை ஏற்படுத்திக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் பாவனாவ...
கொஞ்சநாள் பொறு தலைவா” டிரெல்யர் வெளியீட்டு விழா!

கொஞ்சநாள் பொறு தலைவா” டிரெல்யர் வெளியீட்டு விழா!

News
“கொஞ்சநாள் பொறு தலைவா” டிரெல்யர் வெளியீட்டு விழா! ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், S.முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் “கொஞ்ச நாள் பொறு தலைவா”. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்.... *நடிகை சுதா பேசியதாவது...* மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பது பெருமை, எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள் நன்றி. *நடிகை சாந்தி பேசியதாவது...* மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதலில் இயக்குநருக்கு நன்றி, என் முதல் படம் என்னை நம்பி சான்ஸ் தந்ததற்கு நன்றி. படம் மிக நன்றாக வந்துள்ளது, படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தாருங்...
CLOSE
CLOSE