Sunday, November 29

Blog

தமிழ் பியூச்சரிஸ்டிக் அதிரடி திரைப்படம் ‘ரெட் ஃப்ளவர்’!

தமிழ் பியூச்சரிஸ்டிக் அதிரடி திரைப்படம் ‘ரெட் ஃப்ளவர்’!

News
"ரெட் ஃப்ளவர்" - 2047AD வருடத்தில் இரக்கமற்ற எதிரிகளால் இந்திய இளம் பெண்களுக்கு நடக்கும் கொடூரமான சித்திரவதையை அம்பலப்படுத்துகிறது. நடிகர் விக்னேஷ் நடிக்கும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் பியூச்சரிஸ்டிக் அதிரடி திரைப்படமான ரெட் ஃப்ளவர், 2047 ஆம் ஆண்டு இந்திய இளம் பெண்கள் எதிர்கொள்ளும் திகில்களை சித்தரிக்கும் ஒரு தீவிரமான சினிமா அனுபவத்தை வழங்க உள்ளது. ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் கீழ் கே. மாணிக்கம் தயாரித்த இந்தப் படம், பாலியல் கடத்தல் மற்றும் போர்க்குற்றங்களின் கொடூரங்களை எடுத்துக்காட்டும் ஒரு உணர்ச்சிபூர்வமான ரோலர் கோஸ்டரில் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் என்று உறுதியளிக்கிறது. படத்தின் கடினமான காட்சிகளைப் பற்றிப் பேசிய இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன், "இளம் பெண்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கடத்தலுக்கு தள்ளப்படுவதை சித்தரிக்கும் காட்சிகள் மனதைப் பிழியும் வகையில் இருந்தன. அவர...
இந்தோ -கொரிய திரைப்படத்துறையில் கூட்டு முயற்சிகள் விரிவடைய வாய்ப்பு!

இந்தோ -கொரிய திரைப்படத்துறையில் கூட்டு முயற்சிகள் விரிவடைய வாய்ப்பு!

News
ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் , தென்கொரியாவின் ஃபிளிக்ஸ் ஓவனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தம் : இந்தோ -கொரிய திரைப்படத்துறையில் கூட்டு முயற்சிகள் விரிவடைய வாய்ப்பு! சென்னை, இந்தியா - ( தேதி - 03.04.2025) சென்னையைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட்,தென்கொரிய தயாரிப்பு நிறுவனமான ஃபிளிக்ஸ் ஓவனுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இதன் மூலம் இந்தோ- கொரிய திரைப்படத்துறையில் கூட்டு முயற்சிகளை அதிகரித்துக்கொள்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுளளது.இந்த கூட்டாண்மை இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் குறிப்பாக தமிழ் மற்றும் பான் இந்திய படைப்பாளிகள் தென்கொரியாவில் படப்பிடிப்பு நடத்த புதிய வழிகளை திறக்கும். அதே சமயத்தில் இந்திய பார்வையாளர்களுக்கு கொரியன் கன்டென்டுகளை வழங்குவதற்கும் உதவும். இரண்டு துடிப்பான திரைப்பட துறைகளின் இணைவு தென் கொரிய திரைப்படங்கள்...
ராம் கோபால் வர்மாவின் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படம் ’சாரி’

ராம் கோபால் வர்மாவின் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படம் ’சாரி’

News
இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ’சாரி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் படம் வரும் 4 ஆம் தேதி வெளியாகிறது! கிரி கிருஷ்ண கமல் இயக்கியுள்ள, இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான ’சாரி’ திரைப்படத்தில் சத்யா யது மற்றும் ஆராத்யா தேவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் பிரம்மாண்டமான ப்ரீ ரிலீஸ் நிகழ்வு ஹைதராபாத்திரல் நடைபெற்றது. இந்தப் படத்தை ரவிசங்கர் வர்மா, RGV - AARVI புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் தயாரித்துள்ளார். ’சாரி’ திரைப்படம் இந்த மாதம் 4 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இயக்குநர் கிரி கிருஷ்ண கமல் படம் பற்றி கூறியதாவது, "'சாரி' படத்திற்காக திறமையான புதிய குழு பணியாற்றியுள்ளது. ராம் கோபால் வர்மா எனக்கு படம் எப்படி உருவாக்குவது என்று ஒருபோதும் சொல்லிக் கொடுக்...
:எல்லாம் அவன் செயல்’ படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே (ராதாகிருஷ்ணன்)

:எல்லாம் அவன் செயல்’ படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே (ராதாகிருஷ்ணன்)

News
நடிகர் ஆர்கேவுக்கு மிக உயரிய டான் ஸ்ரீ விருது வழங்கி ATJEH DARISSALUM மன்னர் கௌரவம்! *400 வருட பழமை வாய்ந்த இரண்டு வாள்களை நடிகர் ஆர்கேவுக்கு பரிசளித்து கௌரவித்த ATJEH DARISSALUM மன்னர்* *டத்தோ ஸ்ரீ விருதைத் தொடர்ந்து மிக உயரிய டான் ஸ்ரீ விருதை பெற்ற நடிகர் ஆர்கே* ‘எல்லாம் அவன் செயல்’ படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே (ராதாகிருஷ்ணன்). தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட ஆர்கேவுக்கு, வெற்றிகரமான தொழிலதிபர் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. அந்தவகையில் கடந்த 15 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் விஐபி நிறுவனத்தின் மூலமாக பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அதில் வெற்றியும் கண்டவர் ஆர்கே.. குறட்டைக்கு மட்டுமல்ல கொரோனாவுக்கும் கூட இவரது நிறுவனம் தீர்வு கண்டுபிடித்தது. அதிலும் ஹைலைட்டாக ‘டை’ அடிப்பதில்...
‘சீயான்’ விக்ரம் ரசிகர்களால் ஸ்தம்பித்த கரூர்!

‘சீயான்’ விக்ரம் ரசிகர்களால் ஸ்தம்பித்த கரூர்!

News
கரூரில் திரண்ட 'சீயான்' விக்ரம் ரசிகர்கள், 'வீர தீர சூரன்- பார்ட் 2 '‌ படக் கொண்டாட்டம்! சீயான் விக்ரம் நடிப்பில், 'வீர தீர சூரன் 2 ' படம், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுக்க, ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் சீயான் விக்ரம். இதன் ஒரு பகுதியாக கரூர் சென்றபோது, ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூட, மொத்தப் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது. ரசிகர்களின் உற்சாக வரவேற்பில், மனம் நெகிழ்ந்த சீயான் விக்ரம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படம் கடந்த வாரம் வெளியான நிலையில், தமிழகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, பிளா...
ஜி.வி. பிரகாஷ் குமாரின் ‘பிளாக்மெயில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

ஜி.வி. பிரகாஷ் குமாரின் ‘பிளாக்மெயில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

News
ஜி.வி. பிரகாஷ் குமாரின் பரபர சஸ்பென்ஸ் த்ரில்லர், 'பிளாக்மெயில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! கோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ரவி மோகன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் வெளியிட்ட ஜி.வி. பிரகாஷ் குமாரின் 'பிளாக்மெயில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' மற்றும் 'கண்ணை நம்பாதே' போன்ற மிஸ்ட்ரி த்ரில்லர் படங்களை இயக்கிய இயக்குநர் மு. மாறனுடன் ஜி.வி. பிரகாஷ் குமார் இணைந்திருக்கும் இந்தப் படத்தை ஜேடிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் கீழ் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிக்கிறார். ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டதற்காக நடிகர்கள் ரவி மோகன் மற்றும் விஜய் சேதுபதி இருவருக்கும் படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. மேலும், முதல் பார்வைக்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பிற்காக பத்திரிகை ஊடகங்கள் மற்றும் ரசிகர்ளுக்கும் படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. மர்ம பின்னணியில் ஜி.வி....
கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் “சர்தார் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியீடு !

கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் “சர்தார் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியீடு !

News
பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் “சர்தார் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (ப்ரோலாக்) முன்னுரை வீடியோ வெளியீடு ! பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சர்தார் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் PS மித்ரன் இயக்கத்தில், அதன் இரண்டாம் பாகமாக “சர்தார் 2” உருவாகியுள்ளது. முதல் பாகத்தை விட பரபரப்பான திரில்லராக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வினில்.., நடிகர் கார்த்தி பேசியதாவது… சர்தார் பெயர் வைத்ததிலிருந்தே அந்தப்படத்தின் மீது, எனக்கு நிறைய பிரியம் இருந்தது. நம் கிராமத்தில் இருந்து ஒருவனை தேர்ந்தெடுத்து, அவனுக்கு ...
பஹத் பாசில் – வடிவேலு இணைந்து மிரட்டும் ‘மாரீசன்’!

பஹத் பாசில் – வடிவேலு இணைந்து மிரட்டும் ‘மாரீசன்’!

News
ஜூலையில் வெளியாகிறது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 'மாரீசன்'! நடிகர்கள் பஹத் பாசில் - வடிவேலு இருவரும் இணைந்திருக்கும் 'மாரீசன்' எனும் திரைப்படத்தின் வெளியீடு குறித்த புதிய தகவலை படக் குழுவினர் பிரத்யேக போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாரீசன்' எனும் திரைப்படத்தில் பகத் பாசில், வடிவேலு, விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீஜித் சாரங் மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். டிராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில...
பா.இரஞ்சித் முன்னெடுக்கும் வானம் கலைத்திருவிழா 2025

பா.இரஞ்சித் முன்னெடுக்கும் வானம் கலைத்திருவிழா 2025

News
இயக்குனர் பா.இரஞ்சித் முன்னெடுக்கும் வானம் கலைத்திருவிழா 2025 , ஏப்ரல் 1 முதல் துவக்கம்! இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதம் தலித் வரலாற்று மாதமாக கொண்டாடிவருகின்றனர். கலை மக்களுக்கானது, கவனிக்கப்படாத கலைஞர்கள் கலைகளை கவனப்படுத்துவதும், அங்கீகாரம் கொடுப்பதும் நம் கடமை என்கிற முனைப்போடு கலை மற்றும் இலக்கிய விழாவாக முன்னெடுத்து வெற்றிகரமாக நடத்திவருகின்றனர் பா.இரஞ்சித் மற்றும் நீலம் குழுவினர். இந்த வருடம் ஏப்ரல் 1 ம் தேதி துவக்கவிழா சென்னை எழும்பூர் நீலம் புத்தக அரங்கில் துவங்குகிறது. ஏப்ரல் 2 ம் தேதி முதல் 6 ம் தேதிவரை பி கே ரோசி திரைப்படவிழா நடைபெறுகிறது, இதில் உலகத்திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. திரையிடல் நடைபெறும் இடம் - பிரசாத் லேப் தியேட்டர் சாலிகிராமம். சென்னை. ஏப்ரல் - 3 முதல் 6 வரை பி கே ரோசி ஆவணப்ப...
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும், பான் இந்தியத் திரைப்படம் !

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும், பான் இந்தியத் திரைப்படம் !

News
இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும், பான் இந்தியத் திரைப்படம் ! பூரி ஜெகன்நாத், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சார்மி கௌர்,பூரி கனெக்ட்ஸ் இணையும்,பான் இந்திய பிரம்மாண்டத் திரைப்படம் ஜூனில் படப்பிடிப்பு தொடக்கம்!! பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரின் மரண மாஸ் காம்பினேஷனில், புதிதாக உருவாகவிருக்கும், புதிய படம், வித்தியாசமான களத்தில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகவுள்ளது. கதாநாயகர்களை மாஸ் அவதாரத்தில், கமர்ஷியல் கொண்டாட்டமாக உருவாக்கும், இயக்குநர் பூரி ஜெகன்நாத் கைவண்ணத்தில், விஜய் சேதுபதி இதுவரை பார்த்திராத கோணத்தில் இப்படத்தில் தோன்றவுள்ளார். இப்படம் ஒரு மிகப்பெரிய பான் இந்தியா திருவிழாவாக இருக்கும். இப்படத்தை பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து, பூரி கனெக்ட்ஸ் பட நிறுவத்தின் கீழ், பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். ...
CLOSE
CLOSE