Sunday, November 29

Blog

சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணையும் “மாமன்”!

சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணையும் “மாமன்”!

News
நடிகர் சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணையும், புதிய படத்திற்கு “மாமன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது ! Lark Studios சார்பில் K. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்கும் அடுத்த திரைப்படத்தை, விலங்கு வெப்சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்குகிறார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு “மாமன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று , படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள மிகக் கோலகலமாக பூஜையுடன், படப்பிடிப்பு இனிதே துவங்கியது. கருடன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு, Lark Studios தயாரிப்பில், சூரி நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது. விலங்கு வெப்சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், குழந்தைகள் முதல் பெரியவர்கள...
சீசா’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

சீசா’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

News
”கொத்தனார், சித்தாள் வேலையை விட சினிமா வேலை கடினமானது” - ‘சீசா’ தயாரிப்பாளரின் உருக்கமான பேச்சு! விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந்தில் வேலன் எழுதியிருக்கிறார். இதில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார். நாயகியாக பாடினி நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆதேஷ் பாலா, மூர்த்தி, தயாரிப்பாளர் செந்தில் வேலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சரண் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பெருமாள் மற்றும் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். வில்சி ஜெ.சசி படத்தொகுப்பு செய்திருக்கிறார். வரும் ஜனவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘சீசா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைல...
இருக்கை நுனியில் அமரவைகும் சைக்கோ த்ரில்லர் படம் ‘இரவின் விழிகள்’

இருக்கை நுனியில் அமரவைகும் சைக்கோ த்ரில்லர் படம் ‘இரவின் விழிகள்’

News
தேசிய விருது பெற்ற நடிகை நீமா ரே கதாநாயகியாக நடிக்கும் ‘இரவின் விழிகள்’ ! மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரா தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. இரவின் விழிகள் என்ற இப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார். மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் சிக்கல் ராஜேஷ் நடிக்கிறார். கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான பங்காரா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர். மேலும் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. ஒருவன் சைக்கோ ஆவதற்கு அவனுக்கென தனிப்பட்ட சொந்த ஒரு காரணம் இருக்கும். இங்கே அப்படி ஒருவன் சைக்கோ ஆ...
சைன்ஸ் ஃபிக்ஷன் திரில்லராக உருவாகும் ‘தி ஸ்டிங்கர்’ திரைப்படம்! .

சைன்ஸ் ஃபிக்ஷன் திரில்லராக உருவாகும் ‘தி ஸ்டிங்கர்’ திரைப்படம்! .

News
வீ.ஆர். சினி கிரியேஷன்ஸ் சார்பில் டாக்டர் அருண் பிரசாத் அவர்களின் முதல் தயாரிப்பில் விரைவில் படப்பிடிப்பு தொடங்க விருக்கும் சைன்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் திரைப்படம் தீ ஸ்டிங்கர் . P. ஹரி எழுதி இயக்கும் இந்த படத்தில் சாக்ஷி அகர்வால், அருண் பிரசாத், ஶ்ரீனிவாசன், தீபிகா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பிரபல நடிகை கதையின் நாயகியாக நடிக்க இருக்கிறார் என படக்குழு தெரிவித்துள்ளது. சைன்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் வகையை சார்ந்த, மிகவும் வித்தியாசமான கதையம்சம் உள்ள இந்த திரைப்படத்தை, தமிழ் சினிமாவில் கண்டிராத வகையில், உலக தரம் வாய்ந்த தொழில் நுட்பத்துடன் CGI மற்றும் VFX வேலைகளை பீனிக்ஸ் ஃபிலிம் மேக்கர் ஸ்டுடியோ மும்பையை சேர்ந்த அனுபவமிக்க கலைஞர்களை கொண்டு உருவாக்க பொருப்பெற்றீருக்கிறது. ஏலியனோடு இணைந்து மற்ற மிருகங்கள் மற்றும் கதைகளங்கள் பார்வையாளர்களுக்கு விஷுவல் டிரீட்டாக அமையும் என இயக்க...
Week end இல் வேகமெடுத்து பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கும் மிஸ் யூ…!

Week end இல் வேகமெடுத்து பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கும் மிஸ் யூ…!

News
Week end இல் வேகமெடுத்து பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கும் மிஸ் யூ...* என்.ராஜசேகர் இயக்கத்தில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் வெளியான மிஸ் யூ திரைப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனத்தின் சாமுவேல் மேத்யூ தயாரித்து இருக்கிறார்.. டிசம்பர் 13ஆம் தேதி, வெளியான மிஸ் யூ திரைப்படத்தின் முதல்நாள் காட்சிகள் ஓரளவு மக்களால் திரையரங்குகளில் பார்க்கப்பட்டது. ஆனால் பார்வையாளர்களுக்கு இத்திரைப்படம் கொடுத்த அனுபவம், அவர்களை நேர்மறையாக விமர்சனம் செய்ய வைத்தது.. பார்த்தவர்கள் கொண்டாடியதுடன், குடும்பத்துடன் பார்க்க இத் திரைப்படம் நல்ல தேர்வு என ஆதரவு தெரிவித்தனர். பெரிய அளவில் ரசிகர்களின் ஆரவாரக் கொண்டாட்டத்துடன் இத்திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி வெளியாகவில்லை என்றாலும், தற்பொழுது தரமான திரைப்படம் என்னும் மதிப்புடன் வார இறுதி நாட்களில் முன்பதிவை மும்மடங்கு பெருக்கி இருக்கிறது. குறிப்பாக, ஒட்டு மொ...
வெற்றி நடிக்கும் “ஹீலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

வெற்றி நடிக்கும் “ஹீலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!

News
D.R பிக்சர்ஸ் தயாரிப்பில் சத்யவதி அன்பலகன் மற்றும் தனுஷ் ராஜ்குமார் தயாரிப்பில் உருவான “ஹீலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே தொடங்கியது. இதில் வெற்றி, ராதிகா ப்ரீத்தி,அபினயா, வினோத் சாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் பேரரசு,தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான திரு.பழக்கருப்பையா, நடிகர் சரண்ராஜ், நடிகர் கூல் சுரேஷ் , இயக்குனர் சுப்ரமணியம் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு (15.12.2024) பிரசாத் லேப்பில் இனிதே துவங்கியது. நடிகர்கள் : வெற்றி, ராதிகா ப்ரீத்தி, பேரரசு, பழக்கருப்பையா, சரண்ராஜ், வினோத் சாகர், சுப்ரமணியம் சிவா, அபினயா தொழில்நுட்ப கலைஞர்கள்: தயாரிப்பு நிறுவனம் : D.R பிக்சர்ஸ் தயாரிப்பாளர் : சத்யவதி அன்பலகன், தனுஷ் ராஜ்குமார் இயக்கம் : தனுஷ் ராஜ்குமார் இசை : ஜுபின் ஒளிப்பதிவாளர் : இ...
சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜையில் கலந்து கொண்ட நடிகர் சௌந்தரராஜா!

சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜையில் கலந்து கொண்ட நடிகர் சௌந்தரராஜா!

News
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வரும் இவர், மரம் நடுவது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த சேவைகளையும் செய்து வருகிறார். இந்த நிலையில், மதுரையில் நடைபெற்ற தவத்திரு டி.டி. சங்கரதாஸ் சுவாமிகளின் 102-வது குருபூஜை விழாவில் நடிகர் சௌந்தரராஜா கலந்து கொண்டார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் துணை தலைவர் திரு. பூச்சி முருகன் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் நடிகர் சௌந்தரராஜா கலந்து கொண்டனர். சங்கரதாஸ் சுவாமிகளின் குருபூஜை விழாவில் மதுரை நாடக நடிகர் சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். த...
சரத்குமார் நடிக்கும் 150ஆவது திரைப்படம் “தி ஸ்மைல் மேன்”!

சரத்குமார் நடிக்கும் 150ஆவது திரைப்படம் “தி ஸ்மைல் மேன்”!

News
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்கும் 150 வது பிரமாண்ட திரைப்படம் “தி ஸ்மைல் மேன்” (The Smile Man) டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது! மேக்னம் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் சலீல் தாஸ் தயாரிப்பில், இயக்குநர்கள் ஷ்யாம் - பிரவீன் இயக்கத்தில், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிப்பில், அவரது 150 வது சிறப்பு திரைப்படமாக உருவாகியுள்ளது “தி ஸ்மைல் மேன்” (The Smile Man)திரைப்படம். இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அம்னீஷியா நோயால் பாதிக்கப்படும், ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் காவலதிகாரி, தனது நினைவுகள் முழுதாக மறந்து போகுமுன், ஒரு சிக்கலான, மிக முக்கியமான வழக்கை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார். முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், எட்டு தோட்டாக்கள் வெற்றி நடிப்பில் மெமரீஸ் படத்தினை இ...
BOFTA தனஞ்ஜெயன்G. வெளியிடும் ‘காதல் என்பது பொதுவுடமை’

BOFTA தனஞ்ஜெயன்G. வெளியிடும் ‘காதல் என்பது பொதுவுடமை’

News
காதலர் தினத்தன்று வெளியாகிறது 'காதல் என்பது பொதுவுடமை ' திரைப்படம். BOFTA G. தனஞ்ஜெயன் வெளியிடுகிறார். இயக்குனர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல், வினித், ரோகிணி, கலேஷ், தீபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'காதல் என்பது பொதுவுடமை' . மனிதர்களுக்குள் காதல் வருவது இயல்பானதாக இருந்தாலும் காதலுக்கென்று வரைமுறைகளை வகுத்துவைத்துள்ள இந்த சமூகத்தில் இயல்பானதாக இருக்கும் காதலுக்குள் மிகமுக்கியமான உளவியல் சிக்கலை பேசும் படமாக உருவாகியுள்ளது 'காதல் என்பது பொதுவுடமை' நடிகர் வினித் பல வருடங்களுக்குப்பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். காதல் என்பது பொதுவுடமை அவரது நடிப்பில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் ஜெயப்பிரகாஷ். ரோகிணி, லிஜோமோல் , வினித் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படம் சர்வதேச திரைப்படவிழாக்களிலும் சிறந்த வரவேற்பையும் , அனைவரும் ...
‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’ படக்குழுவினரை பாராட்டிய விஜய் சேதுபதி!

‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’ படக்குழுவினரை பாராட்டிய விஜய் சேதுபதி!

News
‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி! நான் லீனியர் பாணியில் நான்கு வெவ்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி விறுவிறுப்பாக வெளியாகி உள்ள படம் தான் தற்போது திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’. இதற்கு முன் அப்படி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் தான் லோகேஷ் கனகராஜுக்கு முகவரி தந்த அவரது முதல் படமான ‘மாநகரம்’. அந்தவகையில் ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மெட்ராஸ்’.படம் பார்த்த பலரும் தியேட்டரை விட்டு வெளியே வரும்போது மீண்டும் ஒரு மாநகரம் படத்தை, அதேசமயம் வேறு ஒரு கதைக்களத்தில் வேறு ஒரு கோணத்தில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது என்கிற கருத்தை தவறாமல் வெளிப்படுத்தினார்கள். இப்படி மவுத் டாக் மூலம் படம் பற்றிய செய்தி வெளியே பரவ, தற்போது திரையரங்குகளில் காட்சிகளின் எண்ணிக்க...
CLOSE
CLOSE