Sunday, November 29

Blog

வளர்ந்துவரும் நடிகர் விநாயகராஜ்!

வளர்ந்துவரும் நடிகர் விநாயகராஜ்!

Uncategorized
தொடக்கத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த விநாயகராஜ், சில படங்களில் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார். தற்போது வில்லன் வேடங்களில் பல படங்களில் நடித்துவரும் விநாயகராஜ், வரும் வருடத்தில் கதையின் நாயகனாக நடிக்க, பல படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார்! ஆஞ்சநேயா, திருப்பதி, சிகரம் தொடு, புலி வருது, மாமனிதன், திருவின் குரல், பீட்சா 3', லைன்மேன் ஆகிய படங்கள் ஒவ்வொன்றிலும், தனது தனித்திறமையை காட்டி, வளர்ந்துவரும் நடிகர் விநாயகராஜை, இனி கதையின் நாயகனாக பல படங்களில் பார்க்கலாம்! _GovindarajPro...
டிசம்பர் 31வெளியாகும் நியூ இயர் 2025 ஆல்பம்!

டிசம்பர் 31வெளியாகும் நியூ இயர் 2025 ஆல்பம்!

News
நியூ இயர் 2025 ஆல்பம் பாடல் இசை டிசம்பர் 31 வெளியாக உள்ளதாகதாகவும், பாடல் வரிகளில் முப்பது வினாடி நடனம் அமைத்து rsgpicturesmusic@gmail.com என்ற ஈமெயிலுக்கு அனுப்புவும் சிறந்த நடனங்களை தேர்வு செய்து பாராட்டு, பரிசு வழங்கி கெரவிக்கப்படும் என சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமுக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் பாஜகவை சார்ந்த நடிகர் கோபி காந்தி தெரிவித்துள்ளார். சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமுக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் பாஜகவை சார்ந்த நடிகர் கோபி காந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, நியூ இயரை வரவேற்கும் விதமாக உலக மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் அனைவரும் அன்றாடம் உபயோகிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி பாடல் வரிகளை எழுதியுள்ளேன். அப்பாடல் வரிகளுக்கு இசையமைப்பாளர் டாக்டர் செல்வின் கிறிஸ்டோபர் இசை அமைத்து பாடல...
கோலாகலமாக நடந்த பாலா-25 & ‘வணங்கான்’ இசை வெளியீட்டு விழா!

கோலாகலமாக நடந்த பாலா-25 & ‘வணங்கான்’ இசை வெளியீட்டு விழா!

News
25வது ஆண்டு திரையுலக பயணத்தில் இயக்குநர் பாலா ; விழா எடுத்து கொண்டாடிய தமிழ் திரையுலகம்! 1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா. தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள வணங்கான் இசை வெளியீடும், சினிமாவில் பாலாவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் விழாவும் சென்னை வர்த்தக மையத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் முன்னிலையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள் சீமான், மிஷ்கின், சமுத்திரக்கனி, ஏ.எல். விஜய், லிங்குசாமி, ராம், மணிரத்னம், கே. பாக்கியராஜ், மாரி செல்வராஜ், விக்ரமன், ஆர். வி. உதயகுமார், கே. எஸ். அதியமான், வினோத் (கொட்டுக்காளி), பிருந்தா சாரதி, வசந்த பாலன், சீனுராமசாமி, கஸ்தூரி ராஜா, பேரரசு, பொன்ராம், V.Z...
விடுதலை-2′ பட ம் ஓடும் அரங்கில் “பன் பட்டர் ஜாம்” பட டீசர்!

விடுதலை-2′ பட ம் ஓடும் அரங்கில் “பன் பட்டர் ஜாம்” பட டீசர்!

News
250 திரையரங்குகளில், பிக்பாஸ் ராஜு கதாநாயகனாக அறிமுகமாகும் Gen Z தலைமுறை திரைப்படம் "பன் பட்டர் ஜாம்" பட டீசர்! பிக்பாஸ் புகழ் ராஜூ நடிப்பில், “பன் பட்டர் ஜாம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனுடைய டீசர் இந்த நாளை வெளியாகும் விடுதலை-2 படத்தினுடன் இணைந்து திரையரங்குகளில் வெளியாகிறது. Rain Of Arrows Entertainment சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில், பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆத்யா பிரசாத் & பவ்யா திரிகா நடிப்பில், இன்றைய Gen Z தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை ததும்பச் சொல்லும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “பன் பட்டர் ஜாம்'. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகிறது,விடுதலை 2. தமிழகமெங்கும் இப்படம் வெளியாகும் 250 த...
“‘கூரன் ‘ படத்திற்கு வரிவிலக்கு வழங்க வேண்டும்”_ மேனகா காந்தி வேண்டுகோள்!

“‘கூரன் ‘ படத்திற்கு வரிவிலக்கு வழங்க வேண்டும்”_ மேனகா காந்தி வேண்டுகோள்!

News
மனிதர்களை விலங்குகள் அறியும்; விலங்குகளை மனிதர்கள் அறிய மாட்டார்கள்: 'கூரன் 'திரைப்பட விழாவில் மேனகா காந்தி பேச்சு! ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'. இத் திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார். கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார். டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகிற இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 'கூரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்...
GV பிரகாஷின் சாதனைப் பயணம்!

GV பிரகாஷின் சாதனைப் பயணம்!

News
அனைவருக்கும் வணக்கம்... #ஜீவிபி100 எனும் சாதனை பயணத்திற்கு பாதை அமைத்து தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. 'வெயில்' படத்தின் மூலம் தமிழ் திரையிசையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானேன். இப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு அளித்த இயக்குநர் வசந்தபாலனுக்கும், தயாரிப்பாளர் ஷங்கருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களுடைய அறிமுகத்திற்கு பிறகு ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். ரஜினிகாந்த் - அஜித் - விஜய் - விக்ரம் - சூர்யா - தனுஷ்- சிலம்பரசன் டி. ஆர்.- பிரபாஸ் - ரவி தேஜா - சித்தார்த் - கார்த்தி - ஆர்யா- விஷால் - ஜெயம் ரவி- சிவ கார்த்திகேயன் - துல்கர் சல்மான் - ராம் பொத்தனேனி - அதர்வா- ராகவா லாரன்ஸ் - அருண் விஜய் - பரத் - பசுபதி- என திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கும் பல திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினையும் பெற்றேன். இதற்காக இப்பட...
திரு.மாணிக்கம் திரைப்பட முன் வெளியீட்டு விழா!

திரு.மாணிக்கம் திரைப்பட முன் வெளியீட்டு விழா!

News
GPRK சினிமாஸ் வழங்கும் P. சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் திரைப்பட முன் வெளியீட்டு விழா! இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரகனி நடிப்பில் “எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, திரையுலக முன்னணி பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… நடிகர் சாம்ஸ் பேசியதாவது… இம்மாதிரி ஒரு நல்ல படத்தைத் தயாரித்ததற்காக ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இப்படத்திற்குப் பிறகு என் நண்பர் இயக்குநர் நந்தா பெரியசாமி அவர்கள் மோஸ்ட...
Ui’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு

Ui’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு

News
’Ui’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! 'லஹரி பிலிம்ஸ் எல்.எல்.பி' & 'வீனஸ் என்டர்டெய்னர்ஸ்' சார்பில் ஜி.மனோகரன் & கே.பி.ஸ்ரீகாந்த் தயாரிப்பில். நடிகர் உபேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’Ui’. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இது வரும் டிசம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் இணைத்தயாரிப்பாளர் நவீன், "இந்தப் படம் எங்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய கனவு. உபேந்திரா சார் இதை அழகாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார். இந்தக் கதையை எந்த ஜானரிலும் அடைக்க முடியாது. தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணி புரிந்துள்ளனர்" என்றார். தயாரிப்பாளர் சமீர், "ஒரு சிலருக்கு மட்டும்தான் தனித்துவமான சினிமா மொழி கைவரும். அதில் உபேந்திராவும் ஒருவர். டிரெய்லர் அருமையாக வந்துள்ளது. படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள்!". பாட...
‘ருதிரம்’ மலையாளப்படத்தில் அறிமுகமாகி கவனம் ஈர்த்த புதுமுகம் பி.கே.பாபு!

‘ருதிரம்’ மலையாளப்படத்தில் அறிமுகமாகி கவனம் ஈர்த்த புதுமுகம் பி.கே.பாபு!

News
மலையாளத் திரைப்படமான ருதிரத்தில் ஜேஸன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் கவர்ந்திழுக்கும் புதுவரவாக மாறியுள்ளார் பி கே பாபு! மலையாள சினிமாவில் நினைவு கூறத்தக்க புது வரவான பி. கே. பாபு டிசம்பர் 13,2024-அன்று திரைக்கு வந்த "ருதிரம்" திரைப்படத்தில் ஜேசன் என்ற கதாபாத்திரத்தில் அவர் கொடுத்த அசத்தலான நடிப்பால் கவனம் ஈர்த்துள்ளார். இந்த படத்தை ஜிஷோ லான் ஆண்டனி இயக்கியிருக்கிறார், அதில் அபர்ணா பாலமுரளி மற்றும் ராஜ் பி ஷெட்டி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் வெளியான பிறகு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. ஜேசனாக பி. கே. பாபு அளித்த அழுத்தமான மற்றும் ஆழமான நடிப்பு, "ருதிரம்" திரைப்படத்தின் சிறந்த அம்சங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தனது பாணியை கொண்டு கதாபாத்திரத்திற்கு உயிரூட்டிய அவர், அவரது இயல்பான நடிப்பும் திரையுலகில் பெரும் பாராட்டுகளை பெற்றிருக்கிறது. தன் ம...
‘முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

‘முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

News
’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'தி லயன் கிங்' வெற்றியைத் தொடர்ந்து ’முஃபாசா: தி லயன் கிங்’ டிசம்பர் 20, 2024 அன்று வெளியாகிறது. தமிழில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு நடிகர்கள் அர்ஜுன் தாஸ், டாக்காவுக்கு அசோக் செல்வன், ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி முறையே பும்பா மற்றும் டிமோன், ரஃபிக்கியின் இளைய பதிப்பிற்கு நடிகர் விடிவி கணேஷ் மற்றும் கிரோஸின் குரலாக நடிகர் எம். நாசர் ஆகியோர் குரல் கொடுத்திருக்கின்றனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. நடிகர் நாசர், “நடிகனாகவும் டப்பிங் கலைஞராகவும் பல படங்கள் பணிபுரிந்து விட்டேன். சிவாஜி சார், அமிதாப் பச்சன் சார், ராஜா அண்ணன் இவர்கள் குரல் எல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதில் சிவாஜி சார் குரல் எனக்கு ஆதர்சம். உங்களுக்கு எத்தனை வயதானாலும் உ...
CLOSE
CLOSE