Blog
இயக்குநர் அவதாரம் எடுத்த ஜே எஸ் கே!
தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் ஜே எஸ் கே இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள திரில்லர் திரைப்படமான 'ஃபயர்' இசை வெளியீடு!
பல்வேறு வெற்றி படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, 'அநீதி', 'வாழை', உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்துள்ள ஜே எஸ் கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள 'ஃபயர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம் புலி, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பத்மன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தால் உந்தப்பட்ட விறுவிறுப்பான திரில்லர் ஆகும்.
ஜே எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் பேனரில் தயாராகும் 'ஃபயர்' திரைப்படத்திற்கு டி கே (அறிமுகம்) இசையமைத...
சசிகுமார் – சிம்ரன் கூட்டணியில் உருவாகும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’!
சசிகுமார் - சிம்ரன் கூட்டணியில் உருவாகும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு!
*இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர்*
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு 'டூரிஸ்ட் ஃபேமிலி' என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகி வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி' எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்தி...
டிச-13ல் வெளியாகும் ‘மிஸ் யூ’!
”டிச-13 நல்ல தேதி தான்” ; ‘மிஸ் யூ’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து சித்தார்த் அறிவிப்பு!
7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் N.ராஜசேகர் இயக்கத்தில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமாண்டிக் பீல் குட் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை இயக்கிய N. ராஜசேகர் இயக்கியுள்ளார்.
ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தபடத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. ஏற்கனவே நவ-29ல்...
100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த ‘பிரதர்’ திரைப்படம்!
ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில், "பிரதர்" திரைப்படம், ZEE5 இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது !
*ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த, ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம் !!*
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான “பிரதர்” திரைப்படம், குறுகிய காலத்தில், 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது.
தமிழின் முன்னணி நட்சத்திரம் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில், கலக்கலான காமெடி, பொழுது போக்கு திரைப்படமாக
ZEE5 இல் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி பிரதர் திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களிடம், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ZEE5 இல் வெளியான வேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
கமர்ஷ...
PVR LANKA CELEBRATES 5 GLORIOUS YEARS OF CINEMA EXCELLENCE!
PVR LANKA CELEBRATES 5 GLORIOUS YEARS OF CINEMA EXCELLENCE WITH THE RELEASE OF PUSHPA 2: THE RULE
Chennai: PVR INOX Limited, the largest and the most premium cinema exhibitor in India, proudly marks the five-year anniversary of PVR Lanka, the premier destination for immersive movie experiences in Sri Lanka. This milestone marks a half-decade of PVR Lanka delivering world-class cinematic entertainment, exceptional hospitality, and state-of-the-art technology to movie enthusiasts in the country. The milestone coincides with the much-anticipated release of Pushpa 2: The Rule, adding to the celebratory fervour.
Since opening its doors at One Galle Face Mall in 2019, PVR Lanka has transformed itself as a pioneer in the country's entertainment sector, becoming a cultural hub for luxury cinema ...
பொங்கல் பண்டிகை ரேஸில் களமிறங்கிய ‘வணங்கான்’!
பொங்கல் பண்டிகை ரேஸில் முதல் படமாக களமிறங்கிய ‘வணங்கான்’
*தமிழர் திருநாள் கொண்டாட்டமாக ஜனவரி-10 ல் வெளியாகும் வணங்கான்*
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வணங்கான்’. அருண்விஜய் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். நாயகி ரித்தா மற்றொரு நாயகியாக நடித்தூள்ளார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், ராதாரவி, ஜான் விஜய், ரவிமரியா, சிங்கம்புலி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
வரும் பொங்கல் பண்டிகை வெளியீடாக வரும் ஜன-10 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் ‘வணங்கான்’ திரைப்படம் ரிலீஸாக இருக்கிறது. பொங்கல் வெளியீட்டு பட்டியலில் எந்தெந்த படங்கள் இடம்பிடிக்க இருக்கின்றன என்கிற அறிவிப்புகள் எதுவும் இதுவரை உறுதியாகாத நிலையில் ‘வணங்கான்’ படத்தின் ரிலீஸ் முதல் அறிவிப்பாக வெளியாகி உள்ளது குறிப்படத்தக்கது.
அ...
சோசியல் மீடியா திரைப்பட விமர்சனங்களுக்கு ஆதரவு தரும் தயார் தயாரிப்பாளர்!
சோசியல் மீடியா நண்பர்கள் திரைப்படங்களை விமர்சனம் செய்ய அனுமதியுங்கள்.. 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' பட தயாரிப்பாளர் கோரிக்கை!
அன்பு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர்,செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு வணக்கம்..
வரும் டிசம்பர் 13 அன்று எனது ஃப்ரைடே ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிப்பில் பரத், அபிராமி, அஞ்சலி நாயர் நடிப்பில் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' எனும் திரைப்படம் வெளிவரவிருக்கிறது.
தற்போது திரைப்படங்களின் விமர்சனங்களை பேஸ்புக் , எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் என்ற உங்களின் அறிக்கை என் போன்ற சிறுபட தயாரிப்பாளர்களுக்காக சற்று பரிசீலனை செய்ய வேண்டும் என்றே தோன்றுகிறது.
ஆம் பல சிறு படங்கள் இது போன்ற சோசியல் மீடியா மற்றும் இணையதளங்களினால் மட்டுமே வெளியே தெரிகிறது.
எனவே தயாரிப்பாளர்கள் அனுமதியோடு அவர்கள் பரிந்துரைக்கும் யூடியூ...
மிர்ச்சி சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’!
மிர்ச்சி சிவா நடிக்கும் 'சூது கவ்வும் 2' படத்தின் முன்னோட்டம் வெளியீடு!
திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சூது கவ்வும் 2' திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இயக்குநர் பா. ரஞ்சித் முன்னோட்டத்தை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
அறிமுக இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சூது கவ்வும் 2' திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், வாகை சந்திரசேகர், ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மற்ற...
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நடிக்கும் சிரஞ்சீவி!
மெகாஸ்டார் சிரஞ்சீவி, ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் நானியின் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் வழங்கும், சுதாகர் செருக்குறி, SLV சினிமாஸ் இணையும், புதிய படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரம், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் வல்லவர். அவரது கெரியரில் தொடர்ச்சியாக அறிமுகத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கி வந்துள்ளார். நம்பிக்கைக்குரிய வளரும் இயக்குநர்களைக் கண்டறிந்து அவர்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் திறன், அவரது தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். சிரஞ்சீவியின் அடுத்த படம், அவரது தீவிர ரசிகரான ஸ்ரீகாந்த் ஒடேலா என்ற மிகவும் திறமையான இயக்குநருக்கு ஒரு அற்புதமான புதிய அத்தியாயத்தை வழங்கியுள்ளது. இயக்குநரின் முதல் படமான “தசரா” மாபெரும் வெற்றி பெற்றது, வணிகரீதியாக மாபெரும் வெ...


