Sunday, November 29

Blog

ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் யோகி பாபு!

ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் யோகி பாபு!

News
திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட டெல் கே.கணேசனின் 'டிராப் சிட்டி' மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் யோகி பாபு! *நெப்போலியன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோரை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய டெல் கே. கணேசன், தற்போது யோகி பாபுவை அவரது புதிய படத்தில் நடிக்க வைக்கிறார்* திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட‌ டெல் கே.கணேசன், கைபா பிலிம்ஸ் பேனரில் தடைகளைத் தகர்த்து இந்தியத் திறமைகளை உலகப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, ஹாலிவுட்டில் முக்கிய ஆளுமையாக‌ உருவெடுத்துள்ளார். ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களைத் தயாரிப்பதில் தொடங்கி சிறந்த இந்திய மற்றும் மேற்கத்திய சினிமாவை ஒன்றிணைப்பது வரை, கணேசனின் பயணம் தமிழ்நாடு மற்றும் ஹாலிவுட் இடையே ஒரு கலாச்சாரப் பாலத்தை உருவாக்குவதற்கான அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. கணேசனின் முயற்சிகள் சர்வதேச அரங்கில் இந்திய திறமைகளை தொடர்ந்து வெ...
“விஜய்க்கு விருது வழங்குவேன்” _தயாரிப்பாளர் ஜான் அமலன்!

“விஜய்க்கு விருது வழங்குவேன்” _தயாரிப்பாளர் ஜான் அமலன்!

News
நான் விரும்பியது போல் ‘இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’ மூலம் விஜய் சாருக்கு விருது வழங்குவேன் - தயாரிப்பாளர் ஜான் அமலன் அறிவிப்பு! 3 வது ’இந்தியன் விருதுகள் 2024’ (INDIAN AWARDS 2024) - டிசம்பர் 21,22 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது 3 வது ‘இந்தியன் விருதுகள் 2024’ நிகழ்ச்சியுடன் நடைபெறும் ‘Mr Miss & Mrs தமிழகம்’ அழகிப் போட்டி சினிமாத் துறையில் கால் பதிக்கும் ‘இந்தியன் மீடியா ஒர்க்ஸ்’-ன் புதிய தயாரிப்பு நிறுவனத்தை அறிமுகம்! கோலிவுட்டின் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ’லயோனா & லியோ பிக்சர்ஸ்’ (LIONA & LEO Pictures)! - பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அறிமுகமானது வாழ்க்கையில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்பதை தான் ஒவ்வொருவரும் லட்சியமாக கொண்டு பயணிப்பார்கள். ஆனால், சாதனைப் படைத்தவர்களையும், உழைப்பால் உயர்ந்தவர்களையும் அங்கீகரித்து மக்களின் வெளிச்சத்தில் அவர்களை ...
‘புஷ்பா 2’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தமிழில் பேசி அசத்திய அல்லு அர்ஜுன்!

‘புஷ்பா 2’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தமிழில் பேசி அசத்திய அல்லு அர்ஜுன்!

News
”என்னைப் பிறப்பித்து வளர்த்த தமிழ் மண்ணுக்கு எனது பணிவான மரியாதையும் அன்பும்” - சென்னையில் நடந்த 'புஷ்பா2' படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வின் போது எமோஷனலாகப் பேசிய பான் இந்தியன் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்! பாட்னாவில் நடந்த 'புஷ்பா 2: தி ரூல்' டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியின் மூலம் தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜூன் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் நிகழ்வை கண்டுகளித்தனர். இந்த நிகழ்வு 'புஷ்பா' திரைப்படம் எந்தளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. தனது நடிப்பால் மட்டுமல்லாது திறமையான நடனம் மூலமும் புஷ்பா கதாபாத்திரத்தின் மூலமும் உலகம் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் நடிகர் அல்லு அர்ஜூன். படத்திற்கான புரோமோஷன்களின் ஒரு பகுதியாக கடந்த நவம...
தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம்

தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம்

News
தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள், வலைக்காட்சித் தொடர்கள் மற்றும் நான்பிக்சன் நிகழ்ச்சிகள் தயாரிக்கும் நடப்புத் தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் என்னும் புதிய சங்கத்தைத் தொடங்கியுள்ளனர். இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது சங்கத்தின் கெளரவத்தலைவர்கள் திரு.சத்யஜோதி தியாகராஜன், திருமதி ராதிகா சரத்குமார் ஆகியோர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் சின்னத்திரை தயாரிப்பாளர்களின் பல்வேறு பிரச்னைகள் மற்றும் அதைத் தீர்க்கும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.. சங்கத்தின் நிர்வாகிகள் பின்வருமாறு- தலைவர்- உதயசங்கர் பொதுச்செயலாளர் - ராஜவேலு பொருளாளர்- A.குருபரன் துணைத்தலைவர்கள் - கவிதாபாரதி K திருஞானம் இணைச் செயலாளர்கள் - S.சாய் கணேஷ்பாபு R.ஹேமச்சந்திரன் செயற்குழு உறுப்பினர்கள்- R.A.S.நாராயணன...
விவசாயிகளின் வாழ்வியலை சொல்ல வரும் ‘பரமன்’!

விவசாயிகளின் வாழ்வியலை சொல்ல வரும் ‘பரமன்’!

News
விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உருவாகியுள்ள ‘பரமன்’ நவ-29ல் ரிலீஸ்! இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் J சபரிஷ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பரமன்’ விவசாயிகளின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் ஜெய்பீம், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகன் ‘பரமன்’ ஆக நடித்திருக்கிறார். பழ கருப்பையா வில்லனாக நடிக்க, இதுவரை பார்த்திராத ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் வையாபுரி நடித்துள்ளார். மேலும் ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன், அசோக் தமிழ், சத்யா, ஜெயச்சந்திரன், கார்த்திக் பிரபு, சஞ்சய், மது உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமீம் அன்சாரி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை இயக்குநர் சபரிஷே மேற்கொண்டுள்ளார். படத்தின் கதையை இதய நிலவன் எழுதியுள்ளார். பாடல்களை...
‘ஹிடன் அஜெண்டாஸ் ஷுட்- ரெடி’ வெளியீடு!

‘ஹிடன் அஜெண்டாஸ் ஷுட்- ரெடி’ வெளியீடு!

News
எழுத்தாளர் அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா தொகுத்த ட்ரூ விஷன் ஸ்டோரீஸ் : ஆறாம் தொகுதியான 'ஹிடன் அஜெண்டாஸ் ஷுட்- ரெடி' வெளியீடு! இந்திய அளவில் முன்னணியில் உள்ள எழுத்தாளரான அஜித் மேனன் மற்றும் பாடலாசிரியர் அனில் வர்மா ஆகியோர் இணைந்து தொகுத்த ட்ரு விஷன் ஸ்டோரீஸ் எனும் புத்தக வரிசையில் ஆறாம் தொகுதியான 'ஹிடன் அஜெண்டாஸ் ஷுட் -ரெடி' எனும் நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையின் மையப் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது இந்த விழாவில் 'ஏசியா வில்லே' எனும் ஊடக நிறுவனத்தின் உரிமையாளரும், மூத்த ஊடகவியலாளருமான சசிகுமார் எழுத்தாளர்கள், அஜித் மேனன்- சுனில் வர்மா, தயாரிப்பாளர்கள் ராம்குமார் கணேசன், திரிநாத் மல்ஹோத்ரா, டி. சிவா தனஞ்செயன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 'ஹிடன் அஜெண்டாஸ்' என்பது வாசகர்களால் பரபரப்பாக வாசிக்கப்பட்ட புத்தகமாகும...
‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு!

News
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - இசையமைப்பாளர் அனிருத் இணைந்து வெளியிட்ட 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் முன்னோட்டம்! இயக்குநரும், முன்னணி நடிகருமான ஆர். ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல‌ இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டனர். அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சொர்க்கவாசல்' படத்தில் ஆர். ஜே. பாலாஜி, இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், நடிகை சானியா ஐயப்பன், ஷஃரப் உதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன், எழுத்...
“கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் ‘மிஸ் யூ’”_ நாயகன் சித்தார்த்!

“கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் ‘மிஸ் யூ’”_ நாயகன் சித்தார்த்!

News
சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா  சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் கார்த்தி இந்தப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட, நடிகர் சித்தார்த் அதை பெற்றுக்கொண்டார். சித்தார்த் பேசும்போது கூறியதாவது... “இந்த 2024ல் ஒரு விஷயத்தை வேகமாக பரவ வைக்க வேண்டும் என்றால் நெகட்டிவ்வாக சொன்னால் தான் தீ போல பரவுகிறது. செய்திகளுக்கு வைக்கப்படும் புகைப்படங்கள், டைட்டில்கள், நிகழ்ச்சியின் ஹைலைட்டுகள் எல்லாவற்றிலும் பெரும்பாலும் நெகட்டிவ் விஷயங்கள் தான் வேகமாக பரவுகிறது. அப்படி ஒரு விஷயத்தை தேட ஆரம்பித்தால் நமக்கே திடீரென ஏதோ ஒன்று மிஸ்ஸிங் ஆகிறது என தோன்றும். அதனால் நான் பாசிடிவையே தேடி போக வேண்டும். ‘மிஸ் யூ’ வெட்டு, குத்து, ரத்தம், வன்முறை, வன்மம் என எதுவுமே இல்ல...
பணி _ விமர்சனம்

பணி _ விமர்சனம்

Reviews
பணி _ விமர்சனம் கேரள மாநிலம் திருச்சூரில் தன் நெருங்கிய உறவினர்களுடன் மிகப்பெரிய தாதாவாக வலம் வருகிறார் ஜோஜூ ஜார்ஜ். மெக்கானிக்காக இருந்து கொண்டே,  நிழலான காரியங்களில் ஈடுபட்டு வரும் இரண்டு இளைஞர்கள் திட்டமிட்டு ஒரு கொலை செய்கின்றனர். கொலை செய்யச் சொன்னவரிடம் பேசிய பணத்தை வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட் ஒன்றில் காத்திருக்கும் போது,  ஜோஜூ ஜார்ஜ் மனைவி அபிநயா அங்கே வருகிறார். அபிநயாவின் அழகில் மயங்கி அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபடுகின்றனர் இந்த இளைஞர்கள். இதை அறிந்த ஜோஜூ ஜார்ஜ் இளைஞர்கள் இருவரையும் சகட்டுமேனிக்கு அடித்து துவைத்து எடுக்கிறார். வெகுண்டு எழுந்த இளைஞர்கள் இருவரும் அபிநயாவின் வீட்டுக்கே சென்று அங்கு தனியாக இருக்கும் அவரை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். தன் மனைவி மீது கை வைத்தவர்களை சும்மா விடுவாரா தாதா? வெறிகொண்டு அவர்கள் இருவரையும் தேடுகிறார். ஆனால் அவர்களோ இ...
பசங்க அதிகமாக யூஸ் பண்ணும் வார்த்தைகள்தான் ‘மிஸ் யூ’ _ நடிகர் கார்த்தி!

பசங்க அதிகமாக யூஸ் பண்ணும் வார்த்தைகள்தான் ‘மிஸ் யூ’ _ நடிகர் கார்த்தி!

News
“இப்போதும் காதல் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் நாம் எடுப்பது இல்லை” ; நடிகர் கார்த்தி வெளிப்படை பேச்சு! 7 MILES PER SECOND’ நிறுவனம் சார்பில், சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. இளமை துள்ளலுடன், துறுதுறுப்பான ரொமாண்டிக் பீல் குட் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தை ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற கமர்சியல் ஹிட் படங்களை இயக்கிய N. ராஜசேகர் இயக்கியுள்ளார். ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா குமார், ரமா, பாலசரவணன், 'லொள்ளு சபா' மாறன், சஸ்டிகா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தபடத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ‘மிஸ் யூ’ திரைப்படம் வரும் நவ- 29ல் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் ...
CLOSE
CLOSE