Sunday, November 29

Blog

ராம் சரணின் “கேம் சேஞ்சர்” டீசர் வெளியீட்டு தேதி!

ராம் சரணின் “கேம் சேஞ்சர்” டீசர் வெளியீட்டு தேதி!

News
தீபாவளி விருந்தாக,  நடிகர் ராம் சரணின் “கேம் சேஞ்சர்” டீசர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது ! பிரம்மாண்ட  இயக்குநர் ஷங்கர் மற்றும் குளோபல் ஸ்டார் ராம் சரண் கூட்டணியில், பான் இந்திய பிரம்மாண்டமாக உருவாகியுள்ள  “கேம் சேஞ்சர்”  திரைப்படம், இந்தியாவெங்கும் பெரும்  எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.  ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் உடன்,  ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள, இந்தத்  திரைப்படம் 2024 ஜனவரி 10 ஆம் தேதி, தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. https://x.com/GameChangerOffl/status/1851935931911082410 நவம்பர் 9 ஆம் தேதி  கேம் சேஞ்சர் படத்தின் டீசர் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருப்பது, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. டீசர் அறிவிப்பு போஸ்டரே படத்தின் பிரம்மாண்டத்தை சுட்டிக்காட்டுவதாக அமைந...
யாஷிகா ஆனந்த் படத்தை இயக்கும் முன்னாள் ராணுவ வீரர்!

யாஷிகா ஆனந்த் படத்தை இயக்கும் முன்னாள் ராணுவ வீரர்!

News
டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தின் பூஜை தீபாவளி பண்டிகை தினமான நேற்று (அக்டோபர் 31) சென்னையில் நடைபெற்றது. முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ.பாலா ஏற்கனவே 'கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்' என்ற படத்தை தயாரித்து, இயக்கினார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அடுத்தப் படத்தை துவங்கியுள்ளார். எம்.ஏ.பாலா எழுதி இயக்கும் இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மருத்துவரான ராம் பிரசாத் நடிக்கிறார். மிஸ்ட்ரி திரில்லர் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகி யாஷிகா ஆனந்த் மற்றும் நாயகன் ராம் பிரசாத் இருவரும் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை டேவிட் பாஸ்கர் மேற்கொள்கிறார். இசையமைப்பாளராக விபின் ஆர் ...
நவம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் ‘குபேரா’ படத்தின் டீசர்

நவம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் ‘குபேரா’ படத்தின் டீசர்

News
டீசர் வெளியீட்டுத் தேதியை தீபாவளி வாழ்த்துக்களுடன் புதிய போஸ்டர் மூலம் தெரிவித்த 'குபேரா' படக்குழு! தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் சேகர் கம்முலாவின் 'குபேரா' படக்குழு கவர்ச்சிகரமான போஸ்டர் மூலம் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. படத்தின் வசனங்கள் நிறைந்த பகுதியின் படப்பிடிப்பு முடிந்தவுடன், நவம்பர் 15-ஆம் தேதி டீசர் வெளியிடப்படுகிறது. தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், 'கிங்' நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் 'குபேரா', மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்திய படங்களில் ஒன்றாகும். பாடல் படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பும் முடிவடையும் தருவாயில் உள்ளது, இதன் மூலம் படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்பது உறுதியாகிறது. அதே நேரத்தில் படப்பிடிப்பிற்கு பிந்தைய தயாரிப்பு பண...
“சீதா பயணம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

“சீதா பயணம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

News
தீபாவளிக் கொண்டாட்டமாக “சீதா பயணம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது ! அனைவரும் கொண்டாடி மகிழும், தீபாவளி நன்நாளில், மேலும் இனிமை சேர்க்கும் விதமாக, குடும்ப உறவுகள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களின், மறக்கமுடியாத பயணத்தை உறுதியளிக்கும், அழகான திரைப்படமாக உருவாகும், “சீதா பயணம்” படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா நடிக்கும், அபி மற்றும் சீதா கதாப்பாத்திரங்களை இந்த போஸ்டர் அறிமுகப்படுத்துகிறது. மகிழ்ச்சியான ஒரு இனிய பயணத்தை உறுதி செய்கிறது, இந்த போஸ்டர். பிரபல நட்சத்திர நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன் சர்ஜா தயாரித்து, இயக்கும் “சீதா பயணம்” திரைப்படம், இதயம் நெகிழும் தருணங்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கும் அம்சங்களை ஒன்றாக இணைத்து, ஒரு அருமையான குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகிறது. முன்னணி பிரபலங்களான சத்யராஜ...
தேவயானி நாயகியாக நடிக்கும் ‘நிழற்குடை’!

தேவயானி நாயகியாக நடிக்கும் ‘நிழற்குடை’!

News
தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும், கண்மணி மனோகரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, கவிதா ரவி, அக்ஷரா ஆகியோருடன் நிஹாரிகா, அஹானா என்கிற இரண்டு குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். மேலும் தர்ஷன் என்ற இளைஞர் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகிறார். இன்றைய இளைய சமூகம் வெளிநாட்டு மோகத்தால் தங்கள் குடும்ப உறவுகளையும் பெற்றோரையும் தங்கள் குழந்தைகளையும் காப்பதில் இருந்து எப்படி எல்லாம் தடம் மாறுகிறார்கள் அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை குடும்பப் பின்னணியில...
அமரன்’ தமிழ் சினிமாவின் பெருமை” தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல்ராஜா!

அமரன்’ தமிழ் சினிமாவின் பெருமை” தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல்ராஜா!

News
"'அமரன்' தமிழ் சினிமாவின் பெருமை" தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல்ராஜா! நடிகர் சிவகார்த்திகேயனின் 'அமரன்' படம் பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தன்னுடைய பாராட்டையும் மகிழ்ச்சியையும் வெளிபடுத்தியுள்ளார். "'அமரன்' படத்தை மும்பையில் பார்த்தேன். தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக இருப்பதில் பெருமை கொள்கிறேன். அந்த அளவிற்கு இந்தத் திரைப்படம் என்னை உணர்வுபூர்வமாக தாக்கியுள்ளது. அசோக் சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்தன் வரதராஜனின் வாழ்க்கையின் வீரம் மற்றும் துணிச்சலை எழுத்தாளர்-இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி திரையில் மிகவும் திறம்பட கொண்டு வந்துள்ளார். படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் அவ்வளவு ஆராய்ச்சி மற்றும் நம்பகத்தன்மையுடன் பார்வையாளர்களுக்குக் கொடுத்திருக்கிறார். இப்படத்தை மிகவும் நம்பகத்தன்மையுடன் நிஜ லொகேஷனில் தயாரித்தமைக்காக இந்தியாவின் பெருமை லெஜண்ட் கமல்ஹாசன் சார், இணை தயாரிப்பாளர் மகேந்திரன் ச...
‘ஹேப்பி எண்டிங்’ பட டைட்டில் டீசர்!

‘ஹேப்பி எண்டிங்’ பட டைட்டில் டீசர்!

News
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து வழங்கும் 'ஹேப்பி எண்டிங்' பட டைட்டில் டீசர் வெளியானது ! 'குட் நைட்', 'லவ்வர்' என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகரான ஆர். ஜே. பாலாஜி நடிப்பில், கலக்கலான ரொமாண்டிக் காமெடியாக உருவாகும், 'ஹேப்பி எண்டிங்' படத்தின் அசத்தலான டைட்டில் டீசர், தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் அம்மாமுத்து சூர்யா, இன்றைய நவ நாகரீக உலக இளைஞர்களின் வாழ்வியலைச் சொல்லும் வகையில், மிக புதுமையான திரைக்கதையில் இப்படத்தினை உருவாக்கி வருகிறார். நடிகர் ஆர். ஜே. பாலாஜி இதுவரை ஏற்றிராத புதுமையான வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார். ...
முதல்வர் பாராட்டிய அமரன் திரைப்படம்

முதல்வர் பாராட்டிய அமரன் திரைப்படம்

Uncategorized
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் தீரத்துடன் போராடி உயிரிழந்த தமிழ் இளைஞர் மேஜர் முகுந்த் வரதராஜனின் கதை அமரன் எனும் திரைப்படமாக நாளை தீபாவளி தினத்தில் வெளியாகிறது. சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாக நடித்துள்ளார். முகுந்தின் காதல் மனைவி இந்து ரெபெக்கா வர்க்கீஸாக சாய் பல்லவி நடித்துள்ளார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கியுள்ள அமரன் திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், ஆர். மகேந்திரனும் இணைந்து தயாரித்துள்ளனர். அசோக் சக்ரா விருதைப் பெற்றுள்ள நான்கு தமிழர்களில் முகுந்த் வரதராஜனும் ஒருவர். மேஜர் முகுந்த் மறைந்தபோது அப்போது திமுகவின் பொருளாளராக இருந்த மாண்புமிகு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் “தமிழகத்தின் வீரம் மீண்டும் ஒரு முறை இமயமலைச் சாரலில் தன் அழுத்தமான முத்திரையைப் பதிக்கும் விதத்தில், ...
சீரியசான கதைக்கருவை நகைச்சுவையுடன் சொல்லும்’பாட்டல் ராதா’!

சீரியசான கதைக்கருவை நகைச்சுவையுடன் சொல்லும்’பாட்டல் ராதா’!

News
பா.இரஞ்சித் தயாரிப்பில் குருசோமசுந்தரம் நடிக்கும் பாட்டல் ராதா திரைப்படம் டிசம்பர் 20 ல் வெளியாகிறது! இயக்குனர் பா.இரஞ்சித் தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் அருண்பாலாஜியின் பலூன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'பாட்டல் ராதா'. அறிமுக இயக்குனர் தினகர் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரூபேஷ் ஷாஜி. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். நடிகர் குருசோமசுந்தரம், ஜான்விஜய், சஞ்சனா நடராஜன், ஆண்டனி, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். குடிக்கு அடிமையாகும் மனிதர்களைப்பற்றிய சீரியசான கதைக்கருவுடன் முழுக்க நகைச்சுவை நிறைந்த படமான பாட்டல்ராதா டிசம்பர் மாதம் 20 ம் தேதி உலகெங்கிலும் வெளியாகவிருக்கிறது...
‘கேம் சேஞ்சர்’ படத்தின் வட இந்திய விநியோக உரிமையைப் பெற்ற ஏஏ பிலிம்ஸ் !

‘கேம் சேஞ்சர்’ படத்தின் வட இந்திய விநியோக உரிமையைப் பெற்ற ஏஏ பிலிம்ஸ் !

News
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மற்றும் குளோபல் ஸ்டார் ராம் சரணின் "கேம் சேஞ்சர்" திரைப்படம், நீண்ட காலமாக பெரும் எதிர்பார்ப்பிலிருந்து வருகிறது. இப்படம் வரும் 10 ஜனவரி 2025 அன்று வெளியாகவுள்ள நிலையில், படத்தின் வட இந்திய விநியோக உரிமை, அபரிமிதமான தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த தொகை ராம் சரணின் சினிமா கேரியரில் மிக அதிக தொகை என்பது குறிப்பிடத்தக்கது. புகழ்மிகு பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடித்திருப்பதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஜனவரி 10, 2025 அன்று சங்கராந்தி அன்று வெளியாகும் இப்படம், S.S. ராஜமௌலியின் "RRR" திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ராம் சரண் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இப்படத்திலிருந்து "ஜருகண்டி" மற்றும் "ரா ர...
CLOSE
CLOSE