திரைக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட 7 ஸ்டார் விருதுகள்!
'பாட்ஷா '- 'பறந்து போ'- 'டூரிஸ்ட் ஃபேமிலி' - படங்களுக்கு வழங்கப்பட்ட 7 ஸ்டார் விருது 2025
தமிழ் திரையுலகில் முதன் முதலாக வெள்ளித்திரை -சின்னத்திரை- டிஜிட்டல் திரை- ஆகிய திரையுலகில் வெளியான தரமிக்க படைப்புகளையும் , கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் ஆட் ஃபிலிம் ஏஜென்சி நிறுவனத்தின் உரிமையாளர் - தலைமை நிர்வாக அதிகாரி ராஜ் ஈஸ்வர் மற்றும் ரோகிணி சினிமாஸ் ஆகியோர் இணைந்து சாதனை படைத்த வெற்றியாளர்களுக்கு ' 7 ஸ்டார் அவார்ட்ஸ் 2025 ' எனும் விருதினை வழங்கி கௌரவிக்க தீர்மானித்தனர். இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான கலை விழாவில் தமிழ் திரையுலகத்தை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த விருது வழங்கும் நிகழ்வில் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த இயக்குநர் - சிறந்த ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட வழக்கமான விருதுடன் ரீ ரிலிஸ் அவார்ட்- பெஸ்ட் ஸ்டோரிடெல்லர் அவார...









